• Apr 06 2025

வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றியே தீருவோம்- தேசிய மக்கள் சக்தி அரசு உறுதி

Chithra / Dec 17th 2024, 7:44 am
image


"தேர்தலின்போது நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றியே தீருவோம். மக்களின் ஆணையை ஒருபோதும் உதாசீனம் செய்யமாட்டோம்." - என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-

"ஜனாதிபதித் தேர்தலின்போதும், நாடாளுமன்றத் தேர்தலின்போதும் நாம் வழங்கிய வாக்குறுதிகளைக் கட்டாயம் நிறைவேற்றுவோம்.

இரண்டு தேர்தல்களிலும் தேசிய மக்கள் சக்திக்கு மக்களின் அமோக ஆணை கிடைத்துள்ளது. மாற்றத்தை விரும்பிய மக்கள், எம்மை நம்பி வைத்துள்ளார்கள். நாம் முன்வைத்த கொள்கைத் திட்டங்களை ஏற்றே எமக்கு அவர்கள் வாக்களித்துள்ளார்கள். எனவே, மக்களின் ஆணையை ஒருபோதும் உதாசீனம் செய்யமாட்டோம்.

எதிரணியினர் எம் மீது சேறுபூசும் நடவடிக்கைகளில் ஈடுபட முயற்சிக்கலாம். ஆனால், நாம் உண்மையாக - நேர்மையாகச் செயற்படுவதால் எதற்கும் அஞ்சமாட்டோம்." - என்றார்.

வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றியே தீருவோம்- தேசிய மக்கள் சக்தி அரசு உறுதி "தேர்தலின்போது நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றியே தீருவோம். மக்களின் ஆணையை ஒருபோதும் உதாசீனம் செய்யமாட்டோம்." - என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-"ஜனாதிபதித் தேர்தலின்போதும், நாடாளுமன்றத் தேர்தலின்போதும் நாம் வழங்கிய வாக்குறுதிகளைக் கட்டாயம் நிறைவேற்றுவோம்.இரண்டு தேர்தல்களிலும் தேசிய மக்கள் சக்திக்கு மக்களின் அமோக ஆணை கிடைத்துள்ளது. மாற்றத்தை விரும்பிய மக்கள், எம்மை நம்பி வைத்துள்ளார்கள். நாம் முன்வைத்த கொள்கைத் திட்டங்களை ஏற்றே எமக்கு அவர்கள் வாக்களித்துள்ளார்கள். எனவே, மக்களின் ஆணையை ஒருபோதும் உதாசீனம் செய்யமாட்டோம்.எதிரணியினர் எம் மீது சேறுபூசும் நடவடிக்கைகளில் ஈடுபட முயற்சிக்கலாம். ஆனால், நாம் உண்மையாக - நேர்மையாகச் செயற்படுவதால் எதற்கும் அஞ்சமாட்டோம்." - என்றார்.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now