உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், கிண்ணியா நகர மற்றும் பிரதேச ஆகிய இரு சபைகளையும் தேசிய மக்கள் சக்தி கைப்பற்றி, அங்கு ஊழலற்ற ஆட்சி நிறுவப்படும் தேசிய மக்கள் சக்தியின் கிண்ணியா நகர சபை வேட்பாளர் எம். ரீ. சஜாத் தெரிவித்தார்.
கிண்ணியா நகர சபை மற்றும் பிரதேச சபை ஆகிய உள்ளூராட்சி மன்றங்களில் தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்யும் நடவடிக்கை இன்று(6) ஆரம்பமானது.
இதன்போதே, கிண்ணியா நகர சபை வேட்பாளர் எம். ரீ. சஜாத் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன் போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
கடந்த ஜனாதிபதி தேர்தலிலும் பாராளுமன்ற தேர்தலிலும் மக்கள் எமக்குத் தந்த ஆதரவை போல், இந்தத் தேர்தலிலும் தருவார்கள் என நம்புகின்றோம்.
ஏனெனில், கடந்த ஆறு மாத காலமாக இன மத அரசியல் பேதமற்ற முறையில் இந்த நாடு ஆட்சி செய்யப்படுகின்றது.
கடந்த கால ஆட்சி அதிகாரத்தோடு ஒப்பிடும்போது சகல சமூகங்களும் நிம்மதியாகவும் அமைதியாகவும் வாழ்கின்றனர் என்றும் தெரிவித்தார்.
தேசிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிரச்சாரம் ஆரம்பம் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், கிண்ணியா நகர மற்றும் பிரதேச ஆகிய இரு சபைகளையும் தேசிய மக்கள் சக்தி கைப்பற்றி, அங்கு ஊழலற்ற ஆட்சி நிறுவப்படும் தேசிய மக்கள் சக்தியின் கிண்ணியா நகர சபை வேட்பாளர் எம். ரீ. சஜாத் தெரிவித்தார்.கிண்ணியா நகர சபை மற்றும் பிரதேச சபை ஆகிய உள்ளூராட்சி மன்றங்களில் தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்யும் நடவடிக்கை இன்று(6) ஆரம்பமானது.இதன்போதே, கிண்ணியா நகர சபை வேட்பாளர் எம். ரீ. சஜாத் மேற்கண்டவாறு தெரிவித்தார்.இதன் போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், கடந்த ஜனாதிபதி தேர்தலிலும் பாராளுமன்ற தேர்தலிலும் மக்கள் எமக்குத் தந்த ஆதரவை போல், இந்தத் தேர்தலிலும் தருவார்கள் என நம்புகின்றோம்.ஏனெனில், கடந்த ஆறு மாத காலமாக இன மத அரசியல் பேதமற்ற முறையில் இந்த நாடு ஆட்சி செய்யப்படுகின்றது. கடந்த கால ஆட்சி அதிகாரத்தோடு ஒப்பிடும்போது சகல சமூகங்களும் நிம்மதியாகவும் அமைதியாகவும் வாழ்கின்றனர் என்றும் தெரிவித்தார்.