• Nov 26 2024

தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் தொடர்பில் வெளியான தகவல்

Chithra / Nov 24th 2024, 3:17 pm
image

  

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் சம்பளம் பெற்றுக்கொள்ளப் போவதில்லை என

கடற்றொழில் மற்றும் நீரியல்வள பிரதி அமைச்சர் ரத்ன கமகே  தெரிவித்துள்ளார்.

அக்மீமமன பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் மக்கள் பிரதிநிதிகள் சம்பளம் பெற்றுக்கொண்டு சேவையாற்றுவதில்லை.

ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளங்கள் பொதுநிதியில் வைப்பிலிடப்படும் என தெரிவித்துள்ளார்.

159 பேரும் சம்பளம் பெற்றுக்கொள்ளப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுமக்களுக்கு சுமையாகாத வகையில் சேவையாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். 

தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் தொடர்பில் வெளியான தகவல்   தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் சம்பளம் பெற்றுக்கொள்ளப் போவதில்லை எனகடற்றொழில் மற்றும் நீரியல்வள பிரதி அமைச்சர் ரத்ன கமகே  தெரிவித்துள்ளார்.அக்மீமமன பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.தேசிய மக்கள் சக்தியின் மக்கள் பிரதிநிதிகள் சம்பளம் பெற்றுக்கொண்டு சேவையாற்றுவதில்லை.ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளங்கள் பொதுநிதியில் வைப்பிலிடப்படும் என தெரிவித்துள்ளார்.159 பேரும் சம்பளம் பெற்றுக்கொள்ளப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.பொதுமக்களுக்கு சுமையாகாத வகையில் சேவையாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement