• Nov 22 2024

நல்லொழுக்கங்களை நத்தார் தினம் போதிக்கிறது -கிழ‌க்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்..!Samugammedia

Tamil nila / Dec 25th 2023, 8:06 pm
image

அன்பு, மனிதாபிமானம், சகோதரத்துவம், மத நல்லிணக்கம் என மனித வாழ்க்கைக்குத் தேவையான பல நல்ல ஒழுக்கங்களைக் கற்றுத்தந்த இயேசுபிரானின் பிறந்த நாளைக் கிறிஸ்மஸ் தினமாகக் கொண்டாடி மகிழும் அனைத்து  கிறிஸ்துவ சமூகத்தினருக்கும் கிழ‌க்கு மாகாண ஆளுநரும் இ.தொ.கா. தலைவருமான செந்தில் தொண்டமான் கிறிஸ்மஸ் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

பாவ வாழ்விலிருந்து மனிதனை மீட்கவே இறைமகன் இயேசு பாலகன் மனித உருவெடுத்தார். அன்புக்கு இருக்கும் மகத்தான சக்தியை உணர்த்தவே இவ்வுலகில் இயேசுபிரான் அவதரித்தார்.

இந்நந்நாளில் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் கருணைகாட்டி இனநல்லுறவுடன் கூடிய சுபிட்சமான நல்வாழ்வை எதிர்கொள்ள வேண்டும்.

உலகிலுள்ள அனைத்து கிறிஸ்தவ மக்களும் சகோதரத்துவத்துடன் அன்பு காட்டுபவர்களாகவும், இயேசுவின் போதனைகளை பின்பற்றி நடக்க வேண்டும்.

ஒவ்வொருவரினதும் உள்ளத்திலே உண்மையான இறையன்பு, சகோதரத்துவம், அமைதி மற்றும் சுபிட்சம் என்பன அவர்களை இயல்பாகவே ஆட்கொண்டிருக்கின்றது. எனவே ஒவ்வொருவரினதும் எண்ணங்கள், எதிர்பார்ப்புகள் நிறைவேற இந்நாள் அனைவருக்கும் ஓர் பொன்னாளாக அமையட்டும்.

இயேசுபிரானின் போதனைகளை நினைவு கூர்ந்து அனைவரும் கிறிஸ்மஸை நல்லிணக்கத்தோடும், புரிந்துணர்வோடும் கொண்டாடி மகிழ எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

நல்லொழுக்கங்களை நத்தார் தினம் போதிக்கிறது -கிழ‌க்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்.Samugammedia அன்பு, மனிதாபிமானம், சகோதரத்துவம், மத நல்லிணக்கம் என மனித வாழ்க்கைக்குத் தேவையான பல நல்ல ஒழுக்கங்களைக் கற்றுத்தந்த இயேசுபிரானின் பிறந்த நாளைக் கிறிஸ்மஸ் தினமாகக் கொண்டாடி மகிழும் அனைத்து  கிறிஸ்துவ சமூகத்தினருக்கும் கிழ‌க்கு மாகாண ஆளுநரும் இ.தொ.கா. தலைவருமான செந்தில் தொண்டமான் கிறிஸ்மஸ் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,பாவ வாழ்விலிருந்து மனிதனை மீட்கவே இறைமகன் இயேசு பாலகன் மனித உருவெடுத்தார். அன்புக்கு இருக்கும் மகத்தான சக்தியை உணர்த்தவே இவ்வுலகில் இயேசுபிரான் அவதரித்தார்.இந்நந்நாளில் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் கருணைகாட்டி இனநல்லுறவுடன் கூடிய சுபிட்சமான நல்வாழ்வை எதிர்கொள்ள வேண்டும்.உலகிலுள்ள அனைத்து கிறிஸ்தவ மக்களும் சகோதரத்துவத்துடன் அன்பு காட்டுபவர்களாகவும், இயேசுவின் போதனைகளை பின்பற்றி நடக்க வேண்டும்.ஒவ்வொருவரினதும் உள்ளத்திலே உண்மையான இறையன்பு, சகோதரத்துவம், அமைதி மற்றும் சுபிட்சம் என்பன அவர்களை இயல்பாகவே ஆட்கொண்டிருக்கின்றது. எனவே ஒவ்வொருவரினதும் எண்ணங்கள், எதிர்பார்ப்புகள் நிறைவேற இந்நாள் அனைவருக்கும் ஓர் பொன்னாளாக அமையட்டும்.இயேசுபிரானின் போதனைகளை நினைவு கூர்ந்து அனைவரும் கிறிஸ்மஸை நல்லிணக்கத்தோடும், புரிந்துணர்வோடும் கொண்டாடி மகிழ எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement