• Nov 24 2024

அரசியலிலும் விவேகத்திலும் தோல்வியடைந்த தலைவராக இயற்கை எய்திய சம்பந்தன்...!நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இரங்கல்...!

Sharmi / Jul 5th 2024, 10:25 am
image

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தனது அரசியலிலும் விவேகத்திலும் தோல்வி அடைந்தவராக அவர் இயற்கை எய்தியுள்ளதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் உருத்ரகுமாரன் வெளியிட்ட அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

கடந்த ஞாயிற்றுக்கிழமை(30) அன்று தனது 91 வது வயதில் இயற்கை எய்திய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அவர்களுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பில் எமது இறுதி வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவரின் பிரிவினால் வாடும் உற்றார், உறவினர், நண்பர்களுக்கு எமது இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

நாம் தெரிவிக்கும் இவ் வணக்கம் பண்பாட்டு ரீதியிலானதேயன்றி அரசியல் ரீதியிலானதல்ல என்பதனையும் நாம் தெளிவுபடுத்த விரும்புகிறோம்.

சம்பந்தர் அவர்கள் 60 ஆண்டுகளுக்கும் மேலாக ஈழத் தமிழ் தேசிய அரசியல் பரப்பில் இயங்கி வந்தவர். தேர்தலை முன்நிறுத்திய மிதவாத  அரசியலே இவரது அரசியல் அணுகுமுறையாக இருந்து வந்தது.

சிங்கள இனவாதத்தின் தமிழின அழிப்புப்போரை எதிர்கொள்ள ஈழத் தமிழ் மக்களின் போராட்டம், ஆயுதப் போராட்டமாக வளர்ச்சியடைந்து வந்த காலகட்டத்தில் இருந்து ஈழத் தமிழ் மக்களின் அரசியல் தேசவிடுதலை அரசியலாக மாற்றம் கண்டது. ஈழத் தமிழ் மக்கள் தம்மை ஒரு தேசமாக உணர்ந்து, ஒருங்கிணைந்து செயற்படும் ஓர் அரசியல் பரிமாணம் வளர்ச்சியடைந்தது.

இவ் அரசியலுக்கு தேசியத் தலைவர் அவர்களின் வழிகாட்டுதலில் வி..பு...லிகள் அமைப்புத் தலைமை தாங்கியது.

1990 களின் பிற்பகுதியில் இருந்து தேர்தல் அரசியலையும் ஈழத் தமிழ் மக்களின் தேச விடுதலைக்குப் பயன்படுத்தும் இராஜதந்திர அணுகுமுறையினை வி....பு..லிகள் எடுத்துக் கொண்டமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக வழிகோலியது.

சம்பந்தர் அவர்கள் உட்பட தேர்தல் அரசியலில் ஈடுபட்டவர்கள் பலர் மீண்டும் மையஅரசியலுக்கு வரமுடிந்தது. இவர்களில் பலரின் தேசவிடுதலைப் பற்றுக் குறித்து அதிருப்தியும் சந்தேகமும் விடுதலைப்புலிகளுக்கு இருந்த போதும் போராட்டத்தின் நன்மை கருதி இவர்கள் உள்வாங்கப்பட்டனர்.

2004ஆம் ஆண்டுப் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சியின் சின்னமாகிய  ‘வீடு’ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சின்னமாகப் பயன்படுத்தப்படும்  முடிவையும் விடுதலைப்..பு...லி...களே எடுத்தனர்.

தமிழீழத் தேச விடுதலையில் சம்பந்தர் அவர்கள் பற்றுறுதி கொண்டவர் அல்ல என்பதனைத் தெரிந்திருந்தும் தலைமைப் பொறுப்பு கிழக்கு மாகாணத்தில் இருந்து வரவேணடும் என்ற காரணத்திற்காக, அவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குத் தலைமை தாங்க வி..டுதலைப் பு...லி...கள் நியமித்தனர்.

இந்தியா சிறிலங்கா உடன்படிக்கையைத் தொடர்ந்து உருவாக இருந்த இடைக்கால சபைக்கு, விடுதலைப் பு..லி...கள் தமது முதன்மைத் தெரிவாக கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பத்மநாதனை சிபாரிசு செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

சம்பந்தர் அவர்களுடனான எமது அரசியல் முரண்பாடு 2009 ஆம் ஆண்டின்பின் ஈழத் தமிழர் தேசத்தின் விடுதலை அரசியலை அவர் பலவீனப்படுத்த ஆரம்பித்ததில் இருந்து கூர்மையடைந்தது. வி...டு..தலைப்..பு..லிகள் அமைப்பு அழிக்கப்பட்டால் மட்டுமே அரசியல் தீர்வுக்கான வாய்ப்பு ஏற்படும் எனக்கூறி 2009 இன் ஆரம்பப்பகுதியில் முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்புக்கு சம்பந்தன் அவர்களின் சம்மதம் பெறப்பட்டதாக பின்னர் கிடைத்த தகவலும் அதிர்ச்சி தருவதாக இருந்தது.

ஈழதேச விடுதலையில் பற்றுறுதி கொண்டிருந்தோரை அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பலிருந்து புறந்தள்ளினார்.

சிங்களம், ஓரு நாடு, ஒரு மக்கள் என  பேரினவாதக் கூக்குரல் இட்டுக் கொண்டிருந்தவேளை  இவர் சிங்கக் கொடியை ஏந்தி் நின்றபோதே ஈழத் தமிழர் தேசத்தைத் தலைமை தாங்கும் தகமையை இழந்து விட்டார்.

‘வீரம் அல்ல விவேகமே முக்கியம்’ எனக் கூறி அவர் நடந்த பாதை ஈழத் தமிழ் மக்களை மேலும் பலவீனப்படுத்தியிருக்கிறது. சிறிலங்கா அரசு இனவாத அரசாக இறுக்கமடைந்து விட்டது என்பதனையும், அதனை சிங்கள இனநாயகம் நிலவும் நாட்டில் மாற்றியமைக்க முடியாது என்பதனை உணர்ந்து அவர் செயற்பட்டதற்கான சான்றுகள் ஏதுமில்லை. இறுதியில் தனது அரசியலிலும்  விவேகத்திலும் தோல்வி அடைந்தவராக அவர் இயற்கை எய்தியுள்ளார்.

அவருக்கு எமது இறுதி வணக்கத்தைத் தெரிவிப்பதுடன் அவரது அரசியல் வாழ்வு தரும் பாடத்தை ஏனைய தாயகத் தலைவர்கள் உளவாங்கிக் கொள்ள வேண்டும் எனவும் வேண்டிக் கொள்கிறோம் என அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


அரசியலிலும் விவேகத்திலும் தோல்வியடைந்த தலைவராக இயற்கை எய்திய சம்பந்தன்.நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இரங்கல். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தனது அரசியலிலும் விவேகத்திலும் தோல்வி அடைந்தவராக அவர் இயற்கை எய்தியுள்ளதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.இது தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் உருத்ரகுமாரன் வெளியிட்ட அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,கடந்த ஞாயிற்றுக்கிழமை(30) அன்று தனது 91 வது வயதில் இயற்கை எய்திய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அவர்களுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பில் எமது இறுதி வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவரின் பிரிவினால் வாடும் உற்றார், உறவினர், நண்பர்களுக்கு எமது இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.நாம் தெரிவிக்கும் இவ் வணக்கம் பண்பாட்டு ரீதியிலானதேயன்றி அரசியல் ரீதியிலானதல்ல என்பதனையும் நாம் தெளிவுபடுத்த விரும்புகிறோம்.சம்பந்தர் அவர்கள் 60 ஆண்டுகளுக்கும் மேலாக ஈழத் தமிழ் தேசிய அரசியல் பரப்பில் இயங்கி வந்தவர். தேர்தலை முன்நிறுத்திய மிதவாத  அரசியலே இவரது அரசியல் அணுகுமுறையாக இருந்து வந்தது.சிங்கள இனவாதத்தின் தமிழின அழிப்புப்போரை எதிர்கொள்ள ஈழத் தமிழ் மக்களின் போராட்டம், ஆயுதப் போராட்டமாக வளர்ச்சியடைந்து வந்த காலகட்டத்தில் இருந்து ஈழத் தமிழ் மக்களின் அரசியல் தேசவிடுதலை அரசியலாக மாற்றம் கண்டது. ஈழத் தமிழ் மக்கள் தம்மை ஒரு தேசமாக உணர்ந்து, ஒருங்கிணைந்து செயற்படும் ஓர் அரசியல் பரிமாணம் வளர்ச்சியடைந்தது. இவ் அரசியலுக்கு தேசியத் தலைவர் அவர்களின் வழிகாட்டுதலில் வி.பு.லிகள் அமைப்புத் தலைமை தாங்கியது.1990 களின் பிற்பகுதியில் இருந்து தேர்தல் அரசியலையும் ஈழத் தமிழ் மக்களின் தேச விடுதலைக்குப் பயன்படுத்தும் இராஜதந்திர அணுகுமுறையினை வி.பு.லிகள் எடுத்துக் கொண்டமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக வழிகோலியது. சம்பந்தர் அவர்கள் உட்பட தேர்தல் அரசியலில் ஈடுபட்டவர்கள் பலர் மீண்டும் மையஅரசியலுக்கு வரமுடிந்தது. இவர்களில் பலரின் தேசவிடுதலைப் பற்றுக் குறித்து அதிருப்தியும் சந்தேகமும் விடுதலைப்புலிகளுக்கு இருந்த போதும் போராட்டத்தின் நன்மை கருதி இவர்கள் உள்வாங்கப்பட்டனர். 2004ஆம் ஆண்டுப் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சியின் சின்னமாகிய  ‘வீடு’ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சின்னமாகப் பயன்படுத்தப்படும்  முடிவையும் விடுதலைப்.பு.லி.களே எடுத்தனர். தமிழீழத் தேச விடுதலையில் சம்பந்தர் அவர்கள் பற்றுறுதி கொண்டவர் அல்ல என்பதனைத் தெரிந்திருந்தும் தலைமைப் பொறுப்பு கிழக்கு மாகாணத்தில் இருந்து வரவேணடும் என்ற காரணத்திற்காக, அவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குத் தலைமை தாங்க வி.டுதலைப் பு.லி.கள் நியமித்தனர். இந்தியா சிறிலங்கா உடன்படிக்கையைத் தொடர்ந்து உருவாக இருந்த இடைக்கால சபைக்கு, விடுதலைப் பு.லி.கள் தமது முதன்மைத் தெரிவாக கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பத்மநாதனை சிபாரிசு செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.சம்பந்தர் அவர்களுடனான எமது அரசியல் முரண்பாடு 2009 ஆம் ஆண்டின்பின் ஈழத் தமிழர் தேசத்தின் விடுதலை அரசியலை அவர் பலவீனப்படுத்த ஆரம்பித்ததில் இருந்து கூர்மையடைந்தது. வி.டு.தலைப்.பு.லிகள் அமைப்பு அழிக்கப்பட்டால் மட்டுமே அரசியல் தீர்வுக்கான வாய்ப்பு ஏற்படும் எனக்கூறி 2009 இன் ஆரம்பப்பகுதியில் முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்புக்கு சம்பந்தன் அவர்களின் சம்மதம் பெறப்பட்டதாக பின்னர் கிடைத்த தகவலும் அதிர்ச்சி தருவதாக இருந்தது. ஈழதேச விடுதலையில் பற்றுறுதி கொண்டிருந்தோரை அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பலிருந்து புறந்தள்ளினார். சிங்களம், ஓரு நாடு, ஒரு மக்கள் என  பேரினவாதக் கூக்குரல் இட்டுக் கொண்டிருந்தவேளை  இவர் சிங்கக் கொடியை ஏந்தி் நின்றபோதே ஈழத் தமிழர் தேசத்தைத் தலைமை தாங்கும் தகமையை இழந்து விட்டார். ‘வீரம் அல்ல விவேகமே முக்கியம்’ எனக் கூறி அவர் நடந்த பாதை ஈழத் தமிழ் மக்களை மேலும் பலவீனப்படுத்தியிருக்கிறது. சிறிலங்கா அரசு இனவாத அரசாக இறுக்கமடைந்து விட்டது என்பதனையும், அதனை சிங்கள இனநாயகம் நிலவும் நாட்டில் மாற்றியமைக்க முடியாது என்பதனை உணர்ந்து அவர் செயற்பட்டதற்கான சான்றுகள் ஏதுமில்லை. இறுதியில் தனது அரசியலிலும்  விவேகத்திலும் தோல்வி அடைந்தவராக அவர் இயற்கை எய்தியுள்ளார்.அவருக்கு எமது இறுதி வணக்கத்தைத் தெரிவிப்பதுடன் அவரது அரசியல் வாழ்வு தரும் பாடத்தை ஏனைய தாயகத் தலைவர்கள் உளவாங்கிக் கொள்ள வேண்டும் எனவும் வேண்டிக் கொள்கிறோம் என அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement