• Jan 13 2025

நாட்டில் கடந்த ஆண்டு கைப்பற்றப்பட்ட போதை பொருட்கள் குறித்து கடற்படை வெளியிட்ட தகவல்

Chithra / Jan 6th 2025, 3:09 pm
image

  

கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் 28 ஆயிரத்து 158 மில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்கள் மற்றும் போதை மாத்திரைகள் கைப்பற்றியுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. 

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட பெருமளவிலான போதைப்பொருட்களும், 407 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டதாக கடற்படை அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. 

நாட்டின் சட்டத்தை அமுல்படுத்தும் ஏனைய தரப்பினர் மற்றும் பிராந்திய கடல்சார் பங்காளர்களுடன் இணைந்து இந்த நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. 

அதற்கமைய கடந்த வருடத்தில் 622 கிலோகிராமுக்கும் அதிக நிறையுடைய ஹெராயின் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், அவற்றின் மொத்தப் பெறுமதி 15 ஆயிரத்து 554 மில்லியன் ரூபாவுக்கு அதிகம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

11 ஆயிரத்து 508 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஐஸ் ரக போதைப்பொருள், 700 மில்லியன் ரூபாவுக்கு அதிக பெறுமதியான கேரள கஞ்சா, 

சுமார் 23 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள உள்ளூர் கஞ்சா, மற்றும் 373 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியுடைய போதை மாத்திரைகள் என்பன கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

நாட்டில் கடந்த ஆண்டு கைப்பற்றப்பட்ட போதை பொருட்கள் குறித்து கடற்படை வெளியிட்ட தகவல்   கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் 28 ஆயிரத்து 158 மில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்கள் மற்றும் போதை மாத்திரைகள் கைப்பற்றியுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட பெருமளவிலான போதைப்பொருட்களும், 407 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டதாக கடற்படை அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. நாட்டின் சட்டத்தை அமுல்படுத்தும் ஏனைய தரப்பினர் மற்றும் பிராந்திய கடல்சார் பங்காளர்களுடன் இணைந்து இந்த நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. அதற்கமைய கடந்த வருடத்தில் 622 கிலோகிராமுக்கும் அதிக நிறையுடைய ஹெராயின் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், அவற்றின் மொத்தப் பெறுமதி 15 ஆயிரத்து 554 மில்லியன் ரூபாவுக்கு அதிகம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 11 ஆயிரத்து 508 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஐஸ் ரக போதைப்பொருள், 700 மில்லியன் ரூபாவுக்கு அதிக பெறுமதியான கேரள கஞ்சா, சுமார் 23 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள உள்ளூர் கஞ்சா, மற்றும் 373 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியுடைய போதை மாத்திரைகள் என்பன கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement