• Oct 27 2024

சுருக்குவலையுடன் தரித்து நின்ற படகு கடற்படையால் மீட்பு..!!

Tamil nila / Apr 6th 2024, 7:44 pm
image

Advertisement

வடமராட்சி கிழக்கு நாகர் கோவில் கடற் பகுதியில் இன்று அதிகாலை  வெற்றிலைக்கேணி கடற்படையினர் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில் சட்டவிரோதமாக ஒளிப்பாய்ச்சி குறுகிய கண்களை உடைய வலையை பயன்படுத்தி மீன்பிடித்த படகு ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது.


வடமராட்சி கிழக்கு பகுதியில் சட்டவிரோத கடல் நடவடிக்கைகளை முடக்கும் நோக்கில் வெற்றிலைக்கேணி கடற்படை தொடர் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக இன்று அதிகாலை நாகர்கோவில் கடற்பகுதியில் தரித்துநின்ற சந்தேகத்திற்கிடமான படகை சோதனை செய்த போது குறுகிய கண்களை கொண்ட சட்டவிரோத சுருக்குவலையை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.



கைப்பற்றப்பட்ட படகு நாகர்கோவில் பகுதியை சேர்ந்தென்றும் கடற்படையின் வருகை அறிந்து சந்தேக நபர்கள் தப்பிச் சென்றிருக்கலாம் எனவும் கடற்படை தெரிவித்ததுடன் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த சிலர் கடற்படையுடன் முறுகலில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது

மேலும் கைப்பற்றப்பட்ட படகு உடமைகளுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் கடற்றொழில் நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சுருக்குவலையுடன் தரித்து நின்ற படகு கடற்படையால் மீட்பு. வடமராட்சி கிழக்கு நாகர் கோவில் கடற் பகுதியில் இன்று அதிகாலை  வெற்றிலைக்கேணி கடற்படையினர் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில் சட்டவிரோதமாக ஒளிப்பாய்ச்சி குறுகிய கண்களை உடைய வலையை பயன்படுத்தி மீன்பிடித்த படகு ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது.வடமராட்சி கிழக்கு பகுதியில் சட்டவிரோத கடல் நடவடிக்கைகளை முடக்கும் நோக்கில் வெற்றிலைக்கேணி கடற்படை தொடர் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக இன்று அதிகாலை நாகர்கோவில் கடற்பகுதியில் தரித்துநின்ற சந்தேகத்திற்கிடமான படகை சோதனை செய்த போது குறுகிய கண்களை கொண்ட சட்டவிரோத சுருக்குவலையை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.கைப்பற்றப்பட்ட படகு நாகர்கோவில் பகுதியை சேர்ந்தென்றும் கடற்படையின் வருகை அறிந்து சந்தேக நபர்கள் தப்பிச் சென்றிருக்கலாம் எனவும் கடற்படை தெரிவித்ததுடன் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த சிலர் கடற்படையுடன் முறுகலில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறதுமேலும் கைப்பற்றப்பட்ட படகு உடமைகளுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் கடற்றொழில் நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement