• Oct 27 2024

அரிசி தொகையினை கணக்கிட விஷேட நடவடிக்கை!

Tamil nila / Oct 26th 2024, 10:09 pm
image

Advertisement

அரிசி இருப்பு தொடர்பில் விசேட கணக்கிடும் செயற்பாடுகளை ஆரம்பிக்க நுகர்வோர் அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பணிப்புரையின் பேரில் இது தொடர்பான கணக்கிடும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி இன்றும் (26) நாளையும் (27) 4 மாவட்டங்களை மையப்படுத்தி அரிசி இருப்பு கணக்கிடும் நடவடிக்கைகள் நடைபெறவுள்ளது.

இது தொடர்பான அறிக்கை எதிர்வரும் திங்கட்கிழமை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட உள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

சமீப நாட்களாக, சந்தையில் அரிசிக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும், விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள அரிசியின் விலை அதிகமாக இருப்பதாகவும் நுகர்வோர் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வந்தனர்.

இந்நிலைமை தொடர்பில் ஜனாதிபதி பாரிய அரிசி ஆலை வர்த்தகர்களை வரவழைத்து கலந்துரையாடல் ஒன்றை நடத்தியதுடன், அரிசியை கட்டுப்பாட்டு விலைக்கு விற்பனை செய்யுமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.


அரிசி தொகையினை கணக்கிட விஷேட நடவடிக்கை அரிசி இருப்பு தொடர்பில் விசேட கணக்கிடும் செயற்பாடுகளை ஆரம்பிக்க நுகர்வோர் அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது.ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பணிப்புரையின் பேரில் இது தொடர்பான கணக்கிடும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.அதன்படி இன்றும் (26) நாளையும் (27) 4 மாவட்டங்களை மையப்படுத்தி அரிசி இருப்பு கணக்கிடும் நடவடிக்கைகள் நடைபெறவுள்ளது.இது தொடர்பான அறிக்கை எதிர்வரும் திங்கட்கிழமை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட உள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.சமீப நாட்களாக, சந்தையில் அரிசிக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும், விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள அரிசியின் விலை அதிகமாக இருப்பதாகவும் நுகர்வோர் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வந்தனர்.இந்நிலைமை தொடர்பில் ஜனாதிபதி பாரிய அரிசி ஆலை வர்த்தகர்களை வரவழைத்து கலந்துரையாடல் ஒன்றை நடத்தியதுடன், அரிசியை கட்டுப்பாட்டு விலைக்கு விற்பனை செய்யுமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement