• Apr 03 2025

புதிய நாடாளுமன்ற உறுப்பினராக நயன வாசலதிலக்க சத்தியப்பிரமாணம்..!

Chithra / Jan 12th 2024, 10:29 am
image

 

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினராக நயன வாசலதிலக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் இன்று நாடாளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் சமிந்த விஜேசிறி அந்த பதவியில் இருந்து விலகியதை அடுத்து ஏற்பட்ட நாடாளுமன்ற வெற்றிடத்திற்கு நயன, வாசலதிலக்கவை நியமனம் செய்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்றையதினம் வெளியிடப்பட்டது.

இதன்படி பதுளை மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியின் அறிவிப்பின் பிரகாரம், தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டது.

அவர் ஐக்கிய மக்கள் சக்தியின் ஹப்புத்தளை தொகுதி அமைப்பாளர் ஆவார். 2020ஆம் ஆண்டு இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட அவர் 31,307 வாக்குகளைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

புதிய நாடாளுமன்ற உறுப்பினராக நயன வாசலதிலக்க சத்தியப்பிரமாணம்.  ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினராக நயன வாசலதிலக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் இன்று நாடாளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.ஐக்கிய மக்கள் சக்தியின் சமிந்த விஜேசிறி அந்த பதவியில் இருந்து விலகியதை அடுத்து ஏற்பட்ட நாடாளுமன்ற வெற்றிடத்திற்கு நயன, வாசலதிலக்கவை நியமனம் செய்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்றையதினம் வெளியிடப்பட்டது.இதன்படி பதுளை மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியின் அறிவிப்பின் பிரகாரம், தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டது.அவர் ஐக்கிய மக்கள் சக்தியின் ஹப்புத்தளை தொகுதி அமைப்பாளர் ஆவார். 2020ஆம் ஆண்டு இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட அவர் 31,307 வாக்குகளைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement