• Nov 25 2024

இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் தொடர்பில் இந்திய தரப்புடன் பேச்சுவார்த்தை...! அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை...!

Sharmi / Mar 22nd 2024, 8:44 am
image

இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் தொடர்பில் தமிழக மற்றும் புதுச்சேரி மாநில முதலமைச்சர்களுடன் கலந்துரையாடவுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம்(21)  இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்திய இழுவை மடி படகுகளின் எல்லை தாண்டியதும் அத்துமீறியதும் தடைசெய்யப்பட்ட கைத்தொழில் உபகரணங்களை கொண்ட கடற்றொழில் முறையினாலும் பாதிக்கப்பட்டு வருகின்ற வடக்கு கடற்றொழிலாளர்களின் நிலைமைகளை உலகுக்கு எடுத்துக்காட்டுகின்ற வகையில் யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர்கள் முன்னெடுத்துவரும் உணவு தவிர்ப்பு போராட்டம் மூன்று நாட்களாக தொடர்ந்து வருகின்றது.

இந்த விடயம் தொடர்பில் நாம் சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். நேற்றையதினம் யாழ்ப்பாணத்தில் 3 இந்திய இழுவைமடிப் படகுகள் கடற்படையினரால்பிடிக்கப்பட்டுள்ளது.  அதேவேளை  மன்னார் கடற்பரப்பிலும் இரண்டு படகுகள் பிடிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறானதொரு நிலையில்இ இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் தொடர்பில் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி மாநிலங்களின் கடற்றொழில் துறைசார்ந்த அமைச்சர்களோடு தொலைபேசி ஊடாக கலந்துரையாடலொன்றும்  இடம்பெற்றது.

அதேபோல புதுச்சேரி முதலமைச்சரும் தமிழ் நாட்டு முதலமைச்சரும் மீனவர் பிரச்சினை தொடர்பாக எங்களுடன் கலந்துரையாடுவதற்கு முன்வந்துள்ளார்கள்.

தற்போது இந்தியாவில் தேர்தல் காலமாதலால் குறித்த கலந்துரையாடல் தாமதமாகலாம் எனவும் தெரிவித்தார்.


இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் தொடர்பில் இந்திய தரப்புடன் பேச்சுவார்த்தை. அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை. இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் தொடர்பில் தமிழக மற்றும் புதுச்சேரி மாநில முதலமைச்சர்களுடன் கலந்துரையாடவுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.நேற்றையதினம்(21)  இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,இந்திய இழுவை மடி படகுகளின் எல்லை தாண்டியதும் அத்துமீறியதும் தடைசெய்யப்பட்ட கைத்தொழில் உபகரணங்களை கொண்ட கடற்றொழில் முறையினாலும் பாதிக்கப்பட்டு வருகின்ற வடக்கு கடற்றொழிலாளர்களின் நிலைமைகளை உலகுக்கு எடுத்துக்காட்டுகின்ற வகையில் யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர்கள் முன்னெடுத்துவரும் உணவு தவிர்ப்பு போராட்டம் மூன்று நாட்களாக தொடர்ந்து வருகின்றது.இந்த விடயம் தொடர்பில் நாம் சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். நேற்றையதினம் யாழ்ப்பாணத்தில் 3 இந்திய இழுவைமடிப் படகுகள் கடற்படையினரால்பிடிக்கப்பட்டுள்ளது.  அதேவேளை  மன்னார் கடற்பரப்பிலும் இரண்டு படகுகள் பிடிக்கப்பட்டுள்ளன.இவ்வாறானதொரு நிலையில்இ இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் தொடர்பில் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி மாநிலங்களின் கடற்றொழில் துறைசார்ந்த அமைச்சர்களோடு தொலைபேசி ஊடாக கலந்துரையாடலொன்றும்  இடம்பெற்றது.அதேபோல புதுச்சேரி முதலமைச்சரும் தமிழ் நாட்டு முதலமைச்சரும் மீனவர் பிரச்சினை தொடர்பாக எங்களுடன் கலந்துரையாடுவதற்கு முன்வந்துள்ளார்கள்.தற்போது இந்தியாவில் தேர்தல் காலமாதலால் குறித்த கலந்துரையாடல் தாமதமாகலாம் எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement