• Nov 28 2024

இலங்கைக்கு தெற்காக நகரும் புதிய காற்று சுழற்சி! வானிலையில் ஏற்படப்போகும் மாற்றம்..! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Chithra / Dec 28th 2023, 7:38 am
image

  

இலங்கையின் தென்கிழக்காக, நிலநடுக்கோட்டு இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் ஒரு காற்று சுழற்சி நீடிக்கின்றது. இது இலங்கையின் தென் கடற் பிராந்தியத்தை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்துடன் இது தொடர்ந்து நகர்ந்து, குமரிக்கடல் வழியாக அரபிக் கடல் நோக்கி சென்று, அதன் பின்னர் கேரளாவின் கரையோரமாக பயணிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை எதிர்வரும் ஜனவரி 03, 04, 05 மற்றும் 06ஆம் திகதியளவில் மேலும் ஒரு காற்று சுழற்சியானது இலங்கையின் கிழக்குப் பக்கமாக நகர்ந்து, தமிழ்நாட்டின் டெல்டா மாவட்டங்களை அடையும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கையின் தென்கிழக்காக நிலைகொண்டுள்ள காற்று சுழற்சியானது இன்று இரவு இலங்கையின் தென்பகுதிக்கு வந்தடையும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

வடக்கு, வடமத்திய மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும். 

அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் சில இடங்களில் 75 மில்லிமீற்றர் வரை ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.

நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய, வடமேற்கு, கிழக்கு, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு (30-40) கிலோமீற்றர் வரை ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படலாம்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது


இலங்கைக்கு தெற்காக நகரும் புதிய காற்று சுழற்சி வானிலையில் ஏற்படப்போகும் மாற்றம். விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை   இலங்கையின் தென்கிழக்காக, நிலநடுக்கோட்டு இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் ஒரு காற்று சுழற்சி நீடிக்கின்றது. இது இலங்கையின் தென் கடற் பிராந்தியத்தை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.அத்துடன் இது தொடர்ந்து நகர்ந்து, குமரிக்கடல் வழியாக அரபிக் கடல் நோக்கி சென்று, அதன் பின்னர் கேரளாவின் கரையோரமாக பயணிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.இதேவேளை எதிர்வரும் ஜனவரி 03, 04, 05 மற்றும் 06ஆம் திகதியளவில் மேலும் ஒரு காற்று சுழற்சியானது இலங்கையின் கிழக்குப் பக்கமாக நகர்ந்து, தமிழ்நாட்டின் டெல்டா மாவட்டங்களை அடையும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.இலங்கையின் தென்கிழக்காக நிலைகொண்டுள்ள காற்று சுழற்சியானது இன்று இரவு இலங்கையின் தென்பகுதிக்கு வந்தடையும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.இதேவேளை கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.வடக்கு, வடமத்திய மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும். அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் சில இடங்களில் 75 மில்லிமீற்றர் வரை ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய, வடமேற்கு, கிழக்கு, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு (30-40) கிலோமீற்றர் வரை ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படலாம்.இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது

Advertisement

Advertisement

Advertisement