• Sep 08 2025

ஊடகவியலாளர் நிமல்ராஜின் படுகொலைக்கு நீதி கோரி ரின் சில்வாவிடம் அறிக்கை கையளிப்பு!

shanuja / Sep 7th 2025, 11:07 pm
image

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜின் விசாரணை அறிக்கை ஒன்று மக்கள் விடுதலை முன்னணியின் பொது செயலாளர் ரில்வின் சில்வாவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. யாழ்.ஊடக அமையத்தால் குறித்த அறிக்கை கையளிக்கப்பட்டது. 


உள்நாட்டுப் போர் உச்சக்கட்டத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் வடபகுதி யாழ்.குடாநாட்டில் இருந்து செய்திகளை சுயாதீனமாக வெளியிட்ட குரல்களில் ஒன்றாக இருந்த நிமலராஜன் பிபிசி சிங்கள சேவையின் செய்தியாளரகவும், பல தமிழ் ஊடகங்களுக்கு செய்திகளை வழங்கி உதவியவராகவும் இருந்தார். 


இலங்கை அரசுடன் இணைந்து பணியாற்றும் துணை ஆயுதக்குழுவான ஈ.பி.டி.பியினரால் மேற்கொள்ளப்பட்ட தேர்தல் வன்முறை மற்றும் வாக்கு மோசடி பற்றிய விமர்சன அறிக்கைகளை வெளியிட்டதையடுத்து 19 ஒக்ரோபர் 2000 இல் அவர் படுகொலை செய்யப்பட்டார். 


நிமலராஜனின் வரலாறு நிலைத்து நிற்ககூடியதாக இவர் பணியாற்றிய பிபிசி, இலண்டனில் ஒரு சந்திப்பு அறைக்கு இவரது பெயரைச் சூட்டியுள்ளது அத்துடன் ஒவ்வொரு வருடமும் யாழ்ப்பாணத்தில் நிமலராஜன் மயில்வாகனத்தின் வாழ்க்கையை அவரது நண்பர்கள் நினைவுகூருகின்றனர்.   


இலங்கை கால் நூற்றாண்டுக்கும் மேலாக ஊடகவியலாளர்களின் கொலைகளைத் திட்டமிட்ட ரீதியில் பாதுகாத்து வருவதாக 2000ஆம் ஆண்டு ஒக்ரோபரில் இடம்பெற்ற பி.பி.சி.யின் யாழ்.செய்தியாளரான மயில்வாகனம் நிமலராஜன் படுகொலை குறித்த பொலிஸ் விசாரணைகளின் தோல்விகள் பற்றி ஆராயும் ஒரு புதிய அறிக்கை தெரிவிக்கின்றது. 


குறைந்தது 44 ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகப் பணியாளர்கள் 2000 ஆம் ஆண்டுக்கும் 2010 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலப் பகுதியில் உள்நாட்டுப் போர் குறித்து செய்தி வெளியிட்டு வந்தவேளையில் கொல்லப்பட்டார்கள். இன்று வரை, இந்தக் கொலைகள் எவற்றுக்காகவும் ஒருகுற்றவாளியும் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தப்படவில்லை. இவ்வாறு தண்டனையில் இருந்து தப்பிக்கும் நிலைமை, தமது உயிர்களை ஆபத்திற்குள்ளாக்கி சுய தணிக்கை செய்து அல்லது நாடு கடந்து வாழும் இலங்கையச் சேர்ந்த ஏனைய ஊடகவியலாளர்களுக்கு அச்சமூட்டும் செய்தியினை அனுப்புவதாக' சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டத்தின் (ஐவுதுP) நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார். ஐவுதுP மற்றும் சுநுனுசுநுளுளு இனால் இணைந்து எழுதப்பட்டு வெளியிடப்பட்டுள்ள இந்த 70 பக்க அறிக்கையானது,பிபிசி இன் செய்தியாளரான நிமலராஜன் மயில்வாகனம் அவர்களின் கொலை குறித்த இலங்கைப் பொலிசாரின் விசாரணை பற்றிய ஒரு தடயவியல் ஆய்வினை வழங்குகின்றது. 


அத்துடன் ஒரு வழக்கு எப்படி இடம்பெறக்கூடாதோ அதற்கு உதாரணமான விசாரணைத் தோல்விகளைக் கொண்ட ஒரு வழக்கு இது எனவும் இந்த அறிக்கை முடிவுசெய்துள்ளது. கொலைச் சம்பவம் இடம்பெற்ற இடம் ஒரு போதும் பாதுகாக்கப்பட்டு ஆவணப்படுத்தப்படவில்லை – படங்கள் எதுவும் எடுக்கப்படவுமில்லை அல்லது தடயவியல் ஆதாரங்கள் எதுவும் சேகரிக்கப்படவுமில்லை. பல இராணுவச் சோதனை நிலையங்களால் சூழப்பட்ட ஒரு உயர் பாதுகாப்பு வலையத்தில்

இறுக்கமான ஊடரங்கு உத்தரவு அமுலில் இருந்த வேளையில் இந்தக் குற்றம் இடம்பெற்ற போதிலும் நிமலராஜனின் வீடு ஒரு போதுமே சுற்றிவளைக்கப்படவில்லை. சம்பவம் இடம்பெற்ற இரவு கடமையில் இருந்த சில பாதுகாப்பு படையினரை விசாரிப்பதற்கே பல வருடங்கள் எடுத்தது.                                                                                              


இவ்வாறான பல விடயங்கள் அடங்கிய அறிக்கையொன்று மக்கள் விடுதலை முன்னணியின் பொது செயலாளர் ரில்வின் சில்வாவிடம் யாழ்.ஊடக அமையம் இன்று கையளித்துள்ளது.

ஊடகவியலாளர் நிமல்ராஜின் படுகொலைக்கு நீதி கோரி ரின் சில்வாவிடம் அறிக்கை கையளிப்பு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜின் விசாரணை அறிக்கை ஒன்று மக்கள் விடுதலை முன்னணியின் பொது செயலாளர் ரில்வின் சில்வாவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. யாழ்.ஊடக அமையத்தால் குறித்த அறிக்கை கையளிக்கப்பட்டது. உள்நாட்டுப் போர் உச்சக்கட்டத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் வடபகுதி யாழ்.குடாநாட்டில் இருந்து செய்திகளை சுயாதீனமாக வெளியிட்ட குரல்களில் ஒன்றாக இருந்த நிமலராஜன் பிபிசி சிங்கள சேவையின் செய்தியாளரகவும், பல தமிழ் ஊடகங்களுக்கு செய்திகளை வழங்கி உதவியவராகவும் இருந்தார். இலங்கை அரசுடன் இணைந்து பணியாற்றும் துணை ஆயுதக்குழுவான ஈ.பி.டி.பியினரால் மேற்கொள்ளப்பட்ட தேர்தல் வன்முறை மற்றும் வாக்கு மோசடி பற்றிய விமர்சன அறிக்கைகளை வெளியிட்டதையடுத்து 19 ஒக்ரோபர் 2000 இல் அவர் படுகொலை செய்யப்பட்டார். நிமலராஜனின் வரலாறு நிலைத்து நிற்ககூடியதாக இவர் பணியாற்றிய பிபிசி, இலண்டனில் ஒரு சந்திப்பு அறைக்கு இவரது பெயரைச் சூட்டியுள்ளது அத்துடன் ஒவ்வொரு வருடமும் யாழ்ப்பாணத்தில் நிமலராஜன் மயில்வாகனத்தின் வாழ்க்கையை அவரது நண்பர்கள் நினைவுகூருகின்றனர்.   இலங்கை கால் நூற்றாண்டுக்கும் மேலாக ஊடகவியலாளர்களின் கொலைகளைத் திட்டமிட்ட ரீதியில் பாதுகாத்து வருவதாக 2000ஆம் ஆண்டு ஒக்ரோபரில் இடம்பெற்ற பி.பி.சி.யின் யாழ்.செய்தியாளரான மயில்வாகனம் நிமலராஜன் படுகொலை குறித்த பொலிஸ் விசாரணைகளின் தோல்விகள் பற்றி ஆராயும் ஒரு புதிய அறிக்கை தெரிவிக்கின்றது. குறைந்தது 44 ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகப் பணியாளர்கள் 2000 ஆம் ஆண்டுக்கும் 2010 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலப் பகுதியில் உள்நாட்டுப் போர் குறித்து செய்தி வெளியிட்டு வந்தவேளையில் கொல்லப்பட்டார்கள். இன்று வரை, இந்தக் கொலைகள் எவற்றுக்காகவும் ஒருகுற்றவாளியும் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தப்படவில்லை. இவ்வாறு தண்டனையில் இருந்து தப்பிக்கும் நிலைமை, தமது உயிர்களை ஆபத்திற்குள்ளாக்கி சுய தணிக்கை செய்து அல்லது நாடு கடந்து வாழும் இலங்கையச் சேர்ந்த ஏனைய ஊடகவியலாளர்களுக்கு அச்சமூட்டும் செய்தியினை அனுப்புவதாக' சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டத்தின் (ஐவுதுP) நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார். ஐவுதுP மற்றும் சுநுனுசுநுளுளு இனால் இணைந்து எழுதப்பட்டு வெளியிடப்பட்டுள்ள இந்த 70 பக்க அறிக்கையானது,பிபிசி இன் செய்தியாளரான நிமலராஜன் மயில்வாகனம் அவர்களின் கொலை குறித்த இலங்கைப் பொலிசாரின் விசாரணை பற்றிய ஒரு தடயவியல் ஆய்வினை வழங்குகின்றது. அத்துடன் ஒரு வழக்கு எப்படி இடம்பெறக்கூடாதோ அதற்கு உதாரணமான விசாரணைத் தோல்விகளைக் கொண்ட ஒரு வழக்கு இது எனவும் இந்த அறிக்கை முடிவுசெய்துள்ளது. கொலைச் சம்பவம் இடம்பெற்ற இடம் ஒரு போதும் பாதுகாக்கப்பட்டு ஆவணப்படுத்தப்படவில்லை – படங்கள் எதுவும் எடுக்கப்படவுமில்லை அல்லது தடயவியல் ஆதாரங்கள் எதுவும் சேகரிக்கப்படவுமில்லை. பல இராணுவச் சோதனை நிலையங்களால் சூழப்பட்ட ஒரு உயர் பாதுகாப்பு வலையத்தில்இறுக்கமான ஊடரங்கு உத்தரவு அமுலில் இருந்த வேளையில் இந்தக் குற்றம் இடம்பெற்ற போதிலும் நிமலராஜனின் வீடு ஒரு போதுமே சுற்றிவளைக்கப்படவில்லை. சம்பவம் இடம்பெற்ற இரவு கடமையில் இருந்த சில பாதுகாப்பு படையினரை விசாரிப்பதற்கே பல வருடங்கள் எடுத்தது.                                                                                              இவ்வாறான பல விடயங்கள் அடங்கிய அறிக்கையொன்று மக்கள் விடுதலை முன்னணியின் பொது செயலாளர் ரில்வின் சில்வாவிடம் யாழ்.ஊடக அமையம் இன்று கையளித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement