வீடு உடைத்து சுமார் 30 மில்லியன் ரூபா மதிப்புள்ள ரத்தினக் கற்கள் திருடப்பட்ட குற்றச்சாட்டில் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 5 ஆம் திகதி வீடு உடைத்து சுமார் 30 மில்லியன் ரூபா மதிப்புள்ள ரத்தினக் கற்கள் திருடப்பட்டதாக பேருவளை பொலிஸாருக்கு முறைப்பாடு வழங்கப்பட்டது.
முறைப்பாட்டுக்கமைய விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், இரண்டு சந்தேக நபர்களைக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களும் ஹெட்டிமுல்லவைச் சேர்ந்த 41 வயதுடையவர்களாவர்.
சந்தேக நபர்கள் திருடப்பட்ட ரத்தினக் கற்களை விற்பனைக்காக பேருவளைப் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு வழங்கியிருந்தார்.
அதனையடுத்து விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், திருடப்பட்ட பொருட்களை வாங்கிய குற்றச்சாட்டில் பல்வேறு அளவிலான 106 ரத்தினக் கற்களுடன் குறித்த நபரையும் கைது செய்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பேருவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சுமார் 30 மில்லியன் ரூபா மதிப்புள்ள ரத்தினக் கற்கள் திருட்டு; சந்தேகநபர்கள் இருவர் கைது வீடு உடைத்து சுமார் 30 மில்லியன் ரூபா மதிப்புள்ள ரத்தினக் கற்கள் திருடப்பட்ட குற்றச்சாட்டில் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 5 ஆம் திகதி வீடு உடைத்து சுமார் 30 மில்லியன் ரூபா மதிப்புள்ள ரத்தினக் கற்கள் திருடப்பட்டதாக பேருவளை பொலிஸாருக்கு முறைப்பாடு வழங்கப்பட்டது. முறைப்பாட்டுக்கமைய விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், இரண்டு சந்தேக நபர்களைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களும் ஹெட்டிமுல்லவைச் சேர்ந்த 41 வயதுடையவர்களாவர்.சந்தேக நபர்கள் திருடப்பட்ட ரத்தினக் கற்களை விற்பனைக்காக பேருவளைப் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு வழங்கியிருந்தார். அதனையடுத்து விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், திருடப்பட்ட பொருட்களை வாங்கிய குற்றச்சாட்டில் பல்வேறு அளவிலான 106 ரத்தினக் கற்களுடன் குறித்த நபரையும் கைது செய்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பேருவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.