• Sep 20 2024

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்தால் நாடு அவசரகால நிலைமைக்குள் செல்லும் அபாயமுள்ளது- சுவஸ்திகா தெரிவிப்பு! samugammedia

Tamil nila / Jul 5th 2023, 6:05 pm
image

Advertisement

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்தால் நாடு அவசரகால நிலைமைக்குள் செல்லும் அபாயமுள்ளது என வர்த்தக மற்றும் வணிக தொழிலாளர் சங்க தலைவி  சட்டத்தரணி சுவஸ்திகா அருள்லிங்கம் தெரிவித்துள்ளார்.

இன்று  யாழ் பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில்  இடம்பெற்ற விஷேட  கலந்துரையாடலின் போது இவ்வாறு தெரிவித்திருந்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஒரு நாளைக்கு தொழிலாளர்களை  8 மணித்தியாலங்களே  வேலை வாங்கலாமென சர்வதேச ரீதியாக சட்டமுள்ளது. வருங்காலத்தில் இச் சட்டம்  வருமாயின் ஒரு நாளைக்கு ஒரு தொழிலாளி 2 மணித்தியாலம் முதல் 15 மணித்தியாலம் வரை வேலை செய்ய வேண்டும்.

ஒரு தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தினால் அவரை நீக்குவதற்கான உரிமையில்லையென தொழில் தருணர்கள் கூறிவருகின்றனர். அந்த அதிகாரத்தை தருமாறு கோருகின்றனர்.

தற்போது தொழிலை விட்டு நீக்கினால் தொழில் நீதிமன்றத்திற்கு சென்று உரிய கொடுப்பனவு மற்றும் நீதியைப் பெற்றுக்கொள்ளலாம்.

தொழில் தருநர்களின் கைகளில் அதிகாரம் வழங்குமிடத்து நாளைய தினம் தொழில் இருக்குமென்பது கூட நிச்சயத்தன்மையற்ற நிலையுள்ளது.

கடந்த வருடம் 500000தொழில் இல்லாமல் போனதென உலகளாவிய தரவுகள் கூறுகின்றன. இவ்வாறு அதிகாரங்களை வழங்கினால் இது போல் பல தொழில்கள் காணாமல் போகும்.

பெண்களுக்கு இரவு நேர வேலை செய்ய உரிமையில்லை என்பது பொய்ப் பிரச்சாரம். ஆயினும் பெண்களை வேலைக்கு அமர்த்த வேண்டுமாயின் அவரிடம் அனுமதி.பெறுதல் , பெண் பாதுகாவலரை நியமித்தல் போன்ற விடயங்கள் சட்டத்திலுள்ளது.

2017 அரசசாங்கம் பெண்களை வேலைக்கு அமர்த்தும் போது ஆண் தொழிளாளர்கள் கூட இவ் விடயங்கள் தொடர்பாக  தொழிற்சங்கங்களுடன் கலந்தாலோசித்தனர்.

சமூக மட்டத்தில் அரசு பெண்கள் இரவு நேரவேலை செய்ய அனுமதியில்லை என பொய்ப் பிரச்சாரம் மேற்கொள்கின்றது. 

தொழிலாளர்களை எவ்வாறு சுரண்டி இலாபத்தை பெறும் நோக்கிலே அரசு தொழிலாளர் சட்டங்களை மாற்ற முயற்சிக்கின்றது.   எதிர்வரும் காலத்தில் கொண்டு வரும் சட்ட மூலங்களை கூர்மையாக அவதானித்தல் வேண்டும்.

தொழிலாளர் சட்டங்கள் பற்றி கதைக்காததுக்கான காரணம் தொழிலாளர்கள்  அச் சட்டத்தால் பாதிப்படைவது வெளித்தெரிவதில்லை. அதை  ஊடகங்களும் வெளிக்கொணர்வதில்லை.

பயங்கரவாத தடைச் சட்டம் கொண்டுவந்த போது நாடு பொருளாதார ரீதியாக  பாதிப்படைந்திருந்தது. தற்போதும்   பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் கொண்டுவரப்படும் போதும் அவ்வாறான நிலையிலுள்ளது.

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தில் நூற்றுக்கு மேற்பட்ட சரத்துக்கள் காணப்படுகின்றன ஆயினும் பயங்கரவாத தடுப்பு சட்டத்தில் முப்பது சரத்துக்களே உள்ளன.

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தனிநபர்களை குறிவைத்த சட்டம் என்பதை விட சமூகங்களை குறிவைத்து கொண்டுவரப்பட்ட  சட்டமாகவுள்ளது..  

பயங்கரவாத தடைச் சட்டத்தின் மூலம் இராணுவத்தினர் கைது செய்ய முடியாது மாறாக புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தில் இராணுவமோ கடற்படையோ ஒரு நபரை பயங்கரவாதி எனக் கருதினால் கைது செய்யலாம்.

அவசரகாலம் ஜனாதிபதியால் அமுலாக்கும் பட்சத்திலே இராணுவத்தினால் கைது செய்யப்பட முடியும்.

யுத்த காலத்தில் அவசரகால சட்டம் அமுலாக்கத்திற்கு எதிராக சர்வதேச அழுத்தத்தால் அது நீக்கப்பட்டது. ஆயினும் புதிய இச் சட்ட மூலத்தால் நாடு அவசரகால நிலைமைக்குள் செல்லும் அபாயமுள்ளது.

கடந்த வாரத்திலும் ஊழியர் சேமலாப நிதியை நீக்குவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டது. இதே போல் தான் பல்வேறு சட்டம் மூலம் அரசாங்கம்  சாதாரண மக்களை அடக்கிக்கொண்டிருக்கின்றது.

தற்போது சமுர்த்தி உட்பட நலநோக்கு திட்டத்தால் பட்டினிச் சாவு நாட்டில் தவிர்க்கப்பட்டுள்ளது. ஆயினும் எதிர்காலத்தில் இத் திட்டங்கள் நீக்குப்படுமிடத்து பாரிய இடரை மக்கள் எதிர்நோக்க நேரிடும். எனவே இவற்றுக்கெதிராக மக்களே சிந்தித்து செயற்பட வேண்டும் - எனத் தெரிவித்தார்

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்தால் நாடு அவசரகால நிலைமைக்குள் செல்லும் அபாயமுள்ளது- சுவஸ்திகா தெரிவிப்பு samugammedia புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்தால் நாடு அவசரகால நிலைமைக்குள் செல்லும் அபாயமுள்ளது என வர்த்தக மற்றும் வணிக தொழிலாளர் சங்க தலைவி  சட்டத்தரணி சுவஸ்திகா அருள்லிங்கம் தெரிவித்துள்ளார்.இன்று  யாழ் பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில்  இடம்பெற்ற விஷேட  கலந்துரையாடலின் போது இவ்வாறு தெரிவித்திருந்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,ஒரு நாளைக்கு தொழிலாளர்களை  8 மணித்தியாலங்களே  வேலை வாங்கலாமென சர்வதேச ரீதியாக சட்டமுள்ளது. வருங்காலத்தில் இச் சட்டம்  வருமாயின் ஒரு நாளைக்கு ஒரு தொழிலாளி 2 மணித்தியாலம் முதல் 15 மணித்தியாலம் வரை வேலை செய்ய வேண்டும்.ஒரு தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தினால் அவரை நீக்குவதற்கான உரிமையில்லையென தொழில் தருணர்கள் கூறிவருகின்றனர். அந்த அதிகாரத்தை தருமாறு கோருகின்றனர்.தற்போது தொழிலை விட்டு நீக்கினால் தொழில் நீதிமன்றத்திற்கு சென்று உரிய கொடுப்பனவு மற்றும் நீதியைப் பெற்றுக்கொள்ளலாம்.தொழில் தருநர்களின் கைகளில் அதிகாரம் வழங்குமிடத்து நாளைய தினம் தொழில் இருக்குமென்பது கூட நிச்சயத்தன்மையற்ற நிலையுள்ளது.கடந்த வருடம் 500000தொழில் இல்லாமல் போனதென உலகளாவிய தரவுகள் கூறுகின்றன. இவ்வாறு அதிகாரங்களை வழங்கினால் இது போல் பல தொழில்கள் காணாமல் போகும்.பெண்களுக்கு இரவு நேர வேலை செய்ய உரிமையில்லை என்பது பொய்ப் பிரச்சாரம். ஆயினும் பெண்களை வேலைக்கு அமர்த்த வேண்டுமாயின் அவரிடம் அனுமதி.பெறுதல் , பெண் பாதுகாவலரை நியமித்தல் போன்ற விடயங்கள் சட்டத்திலுள்ளது.2017 அரசசாங்கம் பெண்களை வேலைக்கு அமர்த்தும் போது ஆண் தொழிளாளர்கள் கூட இவ் விடயங்கள் தொடர்பாக  தொழிற்சங்கங்களுடன் கலந்தாலோசித்தனர்.சமூக மட்டத்தில் அரசு பெண்கள் இரவு நேரவேலை செய்ய அனுமதியில்லை என பொய்ப் பிரச்சாரம் மேற்கொள்கின்றது. தொழிலாளர்களை எவ்வாறு சுரண்டி இலாபத்தை பெறும் நோக்கிலே அரசு தொழிலாளர் சட்டங்களை மாற்ற முயற்சிக்கின்றது.   எதிர்வரும் காலத்தில் கொண்டு வரும் சட்ட மூலங்களை கூர்மையாக அவதானித்தல் வேண்டும்.தொழிலாளர் சட்டங்கள் பற்றி கதைக்காததுக்கான காரணம் தொழிலாளர்கள்  அச் சட்டத்தால் பாதிப்படைவது வெளித்தெரிவதில்லை. அதை  ஊடகங்களும் வெளிக்கொணர்வதில்லை.பயங்கரவாத தடைச் சட்டம் கொண்டுவந்த போது நாடு பொருளாதார ரீதியாக  பாதிப்படைந்திருந்தது. தற்போதும்   பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் கொண்டுவரப்படும் போதும் அவ்வாறான நிலையிலுள்ளது.பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தில் நூற்றுக்கு மேற்பட்ட சரத்துக்கள் காணப்படுகின்றன ஆயினும் பயங்கரவாத தடுப்பு சட்டத்தில் முப்பது சரத்துக்களே உள்ளன.பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தனிநபர்களை குறிவைத்த சட்டம் என்பதை விட சமூகங்களை குறிவைத்து கொண்டுவரப்பட்ட  சட்டமாகவுள்ளது.  பயங்கரவாத தடைச் சட்டத்தின் மூலம் இராணுவத்தினர் கைது செய்ய முடியாது மாறாக புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தில் இராணுவமோ கடற்படையோ ஒரு நபரை பயங்கரவாதி எனக் கருதினால் கைது செய்யலாம்.அவசரகாலம் ஜனாதிபதியால் அமுலாக்கும் பட்சத்திலே இராணுவத்தினால் கைது செய்யப்பட முடியும்.யுத்த காலத்தில் அவசரகால சட்டம் அமுலாக்கத்திற்கு எதிராக சர்வதேச அழுத்தத்தால் அது நீக்கப்பட்டது. ஆயினும் புதிய இச் சட்ட மூலத்தால் நாடு அவசரகால நிலைமைக்குள் செல்லும் அபாயமுள்ளது.கடந்த வாரத்திலும் ஊழியர் சேமலாப நிதியை நீக்குவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டது. இதே போல் தான் பல்வேறு சட்டம் மூலம் அரசாங்கம்  சாதாரண மக்களை அடக்கிக்கொண்டிருக்கின்றது.தற்போது சமுர்த்தி உட்பட நலநோக்கு திட்டத்தால் பட்டினிச் சாவு நாட்டில் தவிர்க்கப்பட்டுள்ளது. ஆயினும் எதிர்காலத்தில் இத் திட்டங்கள் நீக்குப்படுமிடத்து பாரிய இடரை மக்கள் எதிர்நோக்க நேரிடும். எனவே இவற்றுக்கெதிராக மக்களே சிந்தித்து செயற்பட வேண்டும் - எனத் தெரிவித்தார்

Advertisement

Advertisement

Advertisement