• Sep 20 2024

கரைச்சி பிரதேச சபையின் ஊழல்களை விசாரிக்க புதிய விசாரணைக்குழு நியமனம்! samugammedia

Tamil nila / Apr 4th 2023, 7:42 pm
image

Advertisement

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையில் கடந்த நான்கு வருடங்களில் இடம்பெற்றஊழல்,முறைகேடுகளை விசாரிக்க புதிதாக ஆரம்ப புலன் விசாரணைக் குழு ஒன்றைவடக்கு மாகாண உள்ளுராட்சி  அமைச்சின்  செயலாளரின் அனுமதியுடன் நியமித்துள்ளதாக வடக்கு உள்ளுராட்சி திணைக்களம் தகவல் வழங்கியுள்ளது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக கிளிநொச்சி ஊடகவியலாளர் ஒருவர் விடுத்த கோரிக்கை பதிலளித்த போது மேற்படி தகவலை வட மாகாண உள்ளுராட்சி திணைக்களம் வழங்கியுள்ளது.

கிளிநொச்சி தெற்கு வலயக் கல்வி அலுவலகத்தின் கணக்காளர் ப. நவிச்சந்திரன் தலைவராகவும், பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் செயலாளர் திருமதி த. தயானந்தன், மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் தொழிநுட்ப உத்தியோகத்தர் பா. நக்கீரன் ஆகிய இருவரையும் உறுப்பினர்களாகவும் கொண்டு புதிய விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே நியமிக்கப்பட்ட ஆரம்ப புலன்விசாரணைக் குழுவின் அறிக்கைசம்மந்தப்பட்ட ஒழுக்காற்று அதிகாரிக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் அதில் குறைபாடுகள் காணப்பட்டமையை குறித்த அதிகாரியால் சுட்டிக்காட்டப்பட்டிருந்ததாகவும் எனவே அக் குறைபாடுகளை நிர்வத்தி செய்து தருமாறு முதலில் நியமிக்கப்பட்ட ஆரம்ப புலன்விசாரணை குழுவினரிடம் கோரிய போது அதில்  விசாரணைக்குழுத் தலைவர் இடமமாற்றம் பெற்றிருப்பதனாலும், உறுப்பினர் ஒருவர் ஒய்வுப் பெற்றமையாலும் அவர்களால் விசாரணை அறிக்கையில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்து தர முடியாதிருப்பதாக அறிவித்திருந்த நிலையில்  அவ் வறிக்கையை கொண்டு  எவ்வித தீர்மானங்களையும் மேற்கொள்ள முடியாது என்பதனால்  கரைச்சி பிரதேச சபையில் இடம்பெற்ற ஊழல்களை விசாரிக்க மேற்படி புதிய ஆரம்ப புலன்விசாரணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண உள்ளுராட்சித் திணைக்களம் தெரிவித்துள்ளது.


கரைச்சி பிரதேச சபையின் ஊழல்களை விசாரிக்க புதிய விசாரணைக்குழு நியமனம் samugammedia கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையில் கடந்த நான்கு வருடங்களில் இடம்பெற்றஊழல்,முறைகேடுகளை விசாரிக்க புதிதாக ஆரம்ப புலன் விசாரணைக் குழு ஒன்றைவடக்கு மாகாண உள்ளுராட்சி  அமைச்சின்  செயலாளரின் அனுமதியுடன் நியமித்துள்ளதாக வடக்கு உள்ளுராட்சி திணைக்களம் தகவல் வழங்கியுள்ளது.தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக கிளிநொச்சி ஊடகவியலாளர் ஒருவர் விடுத்த கோரிக்கை பதிலளித்த போது மேற்படி தகவலை வட மாகாண உள்ளுராட்சி திணைக்களம் வழங்கியுள்ளது.கிளிநொச்சி தெற்கு வலயக் கல்வி அலுவலகத்தின் கணக்காளர் ப. நவிச்சந்திரன் தலைவராகவும், பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் செயலாளர் திருமதி த. தயானந்தன், மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் தொழிநுட்ப உத்தியோகத்தர் பா. நக்கீரன் ஆகிய இருவரையும் உறுப்பினர்களாகவும் கொண்டு புதிய விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே நியமிக்கப்பட்ட ஆரம்ப புலன்விசாரணைக் குழுவின் அறிக்கைசம்மந்தப்பட்ட ஒழுக்காற்று அதிகாரிக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் அதில் குறைபாடுகள் காணப்பட்டமையை குறித்த அதிகாரியால் சுட்டிக்காட்டப்பட்டிருந்ததாகவும் எனவே அக் குறைபாடுகளை நிர்வத்தி செய்து தருமாறு முதலில் நியமிக்கப்பட்ட ஆரம்ப புலன்விசாரணை குழுவினரிடம் கோரிய போது அதில்  விசாரணைக்குழுத் தலைவர் இடமமாற்றம் பெற்றிருப்பதனாலும், உறுப்பினர் ஒருவர் ஒய்வுப் பெற்றமையாலும் அவர்களால் விசாரணை அறிக்கையில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்து தர முடியாதிருப்பதாக அறிவித்திருந்த நிலையில்  அவ் வறிக்கையை கொண்டு  எவ்வித தீர்மானங்களையும் மேற்கொள்ள முடியாது என்பதனால்  கரைச்சி பிரதேச சபையில் இடம்பெற்ற ஊழல்களை விசாரிக்க மேற்படி புதிய ஆரம்ப புலன்விசாரணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண உள்ளுராட்சித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement