இஸ்ரேலின் டிமோனா நகர் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களை காணொளி எடுக்க முயன்ற நான்கு இலங்கையர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதரகம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.
தாக்குதலின் போது அருகில் இருந்த கட்டடங்களின் கண்ணாடிகள் உடைந்து சிதறியதில், அவற்றின் துண்டுகள் இவர்களின் தலை மற்றும் உடலின் பிற பகுதிகளில் குத்தியதாலேயே இவர்கள் காயமடைந்துள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்தார்.
காயமடைந்த நான்கு இலங்கையர்களும் உடனடியாக மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் தற்போதைய நிலை குறித்துத் தூதரகம் கண்காணித்து வருகின்றது.
ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியபோது, பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லாமல் பொது இடத்தில் நின்றுகொண்டு காணொளி எடுத்த போதே இவர்கள் காயமடைந்துள்ளனர். இவர்கள் எடுத்த காணொளிகள் சமூக ஊடகங்களிலும் பரவியுள்ளன.
இவர்களின் இத்தகைய செயல் இஸ்ரேலிய பாதுகாப்பு அதிகாரிகளால் வழங்கப்பட்ட பாதுகாப்பு வழிமுறைகளை மீறும் செயல் என தூதுவர் சுட்டிக்காட்டினார்.
ஏவுகணைத் தாக்குதலுக்கு மூன்று நிமிடங்களுக்கு முன்னதாகவே எச்சரிக்கை ஒலி எழுப்பப்படும். அந்த ஒலியைக் கேட்டவுடன் உடனடியாக ஒதுக்கப்பட்ட பாதுகாப்பான இடங்களுக்குச் சென்று தஞ்சம் புக வேண்டும். எக்காரணம் கொண்டும் தாக்குதல்களை வேடிக்கை பார்க்கவோ அல்லது காணொளி எடுக்கவோ முயற்சிக்கக் கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஈரானின் இந்தத் தாக்குதலால் இஸ்ரேலின் முக்கிய உட்கட்டமைப்புகள் இலக்கு வைக்கப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள வெளிநாட்டுப் பணியாளர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.
இதேவேளை ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி புதிய வகை ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளதாகவும், அவற்றை தமது வான் பாதுகாப்பு கட்டமைப்பு அடையாளம் கண்டுள்ளதாகவும் இஸ்ரேலிய இராணுவம் (IDF) அதிரடியாக அறிவித்துள்ளது.
கடந்த ஒரு மணி நேரத்திற்குள் இஸ்ரேலிய இராணுவம் விடுத்துள்ள இரண்டாவது அபாய எச்சரிக்கை இதுவாகும் என அல் ஜசீரா ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், ஈரானிலிருந்து ஏவப்பட்ட ஏவுகணைகள் இஸ்ரேலின் வான்பரப்பிற்குள் நுழைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இவை ஈரானின் புதிய ரக ஏவுகணைகள் என இஸ்ரேலிய பாதுகாப்புத் தரப்பு அடையாளப்படுத்தியுள்ளது. இதனால் நாடு முழுவதும் அபாயச் சங்குகள் முழங்கப்பட்டு வருகின்றன.
குறித்த தாக்குதல் எச்சரிக்கையைத் தொடர்ந்து, பொதுமக்கள் உடனடியாகப் பாதுகாப்பான பதுங்கு குழிகளுக்குச் செல்லுமாறு இஸ்ரேலிய இராணுவம் அறிவுறுத்தியுள்ளது.
இஸ்ரேல் மீது ஈரானின் புதிய ரக ஏவுகணைத் தாக்குதல்; வீடியோ எடுக்க முயன்ற 4 இலங்கையர்கள் காயம் இஸ்ரேலின் டிமோனா நகர் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களை காணொளி எடுக்க முயன்ற நான்கு இலங்கையர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதரகம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.தாக்குதலின் போது அருகில் இருந்த கட்டடங்களின் கண்ணாடிகள் உடைந்து சிதறியதில், அவற்றின் துண்டுகள் இவர்களின் தலை மற்றும் உடலின் பிற பகுதிகளில் குத்தியதாலேயே இவர்கள் காயமடைந்துள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்தார்.காயமடைந்த நான்கு இலங்கையர்களும் உடனடியாக மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் தற்போதைய நிலை குறித்துத் தூதரகம் கண்காணித்து வருகின்றது.ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியபோது, பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லாமல் பொது இடத்தில் நின்றுகொண்டு காணொளி எடுத்த போதே இவர்கள் காயமடைந்துள்ளனர். இவர்கள் எடுத்த காணொளிகள் சமூக ஊடகங்களிலும் பரவியுள்ளன.இவர்களின் இத்தகைய செயல் இஸ்ரேலிய பாதுகாப்பு அதிகாரிகளால் வழங்கப்பட்ட பாதுகாப்பு வழிமுறைகளை மீறும் செயல் என தூதுவர் சுட்டிக்காட்டினார். ஏவுகணைத் தாக்குதலுக்கு மூன்று நிமிடங்களுக்கு முன்னதாகவே எச்சரிக்கை ஒலி எழுப்பப்படும். அந்த ஒலியைக் கேட்டவுடன் உடனடியாக ஒதுக்கப்பட்ட பாதுகாப்பான இடங்களுக்குச் சென்று தஞ்சம் புக வேண்டும். எக்காரணம் கொண்டும் தாக்குதல்களை வேடிக்கை பார்க்கவோ அல்லது காணொளி எடுக்கவோ முயற்சிக்கக் கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.ஈரானின் இந்தத் தாக்குதலால் இஸ்ரேலின் முக்கிய உட்கட்டமைப்புகள் இலக்கு வைக்கப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள வெளிநாட்டுப் பணியாளர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.இதேவேளை ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி புதிய வகை ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளதாகவும், அவற்றை தமது வான் பாதுகாப்பு கட்டமைப்பு அடையாளம் கண்டுள்ளதாகவும் இஸ்ரேலிய இராணுவம் (IDF) அதிரடியாக அறிவித்துள்ளது.கடந்த ஒரு மணி நேரத்திற்குள் இஸ்ரேலிய இராணுவம் விடுத்துள்ள இரண்டாவது அபாய எச்சரிக்கை இதுவாகும் என அல் ஜசீரா ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.மேலும், ஈரானிலிருந்து ஏவப்பட்ட ஏவுகணைகள் இஸ்ரேலின் வான்பரப்பிற்குள் நுழைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.இவை ஈரானின் புதிய ரக ஏவுகணைகள் என இஸ்ரேலிய பாதுகாப்புத் தரப்பு அடையாளப்படுத்தியுள்ளது. இதனால் நாடு முழுவதும் அபாயச் சங்குகள் முழங்கப்பட்டு வருகின்றன.குறித்த தாக்குதல் எச்சரிக்கையைத் தொடர்ந்து, பொதுமக்கள் உடனடியாகப் பாதுகாப்பான பதுங்கு குழிகளுக்குச் செல்லுமாறு இஸ்ரேலிய இராணுவம் அறிவுறுத்தியுள்ளது.