• Nov 22 2024

பரீட்சை வினாத்தாள் கசிவைத் தடுக்க புதிய பொறிமுறை - பரீட்சைகள் திணைக்களம் எடுத்த தீர்மானம்

Chithra / Nov 2nd 2024, 8:55 am
image


பரீட்சை வினாத்தாள்களை முன்கூட்டியே கசிவதை தடுக்கும் வகையில் வினாத்தாள் வங்கியை நிறுவுவதற்கான புதிய வேலைத்திட்டம் தயாரிக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

2026ஆம் ஆண்டுக்குள் அதனை நிறுவ முடியும் என்றும், இதனால் வினாத்தாள்கள் முன்கூட்டியே கசிவதை தடுக்கலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த புதிய வேலைத்திட்டத்தின் கீழ் பரீட்சை வினாத்தாள்களை தனிநபர்களின் கைகளுக்குச் செல்லாமல் கணினி மூலம் தயாரிக்கும் பணியை மேற்கொள்வதன் மூலம் பரீட்சை தாள்களை பாதுகாப்பாக வைத்திருக்க முடியும் என ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

தற்போது பரீட்சைக்கு முன்னர் பரீட்சை வினாத்தாள்களை விட்டுச் செல்வது ஒரு பிரச்சினையாக மாறியுள்ளதாகவும், 

தனிநபர்கள் மீதான நம்பிக்கையின் காரணமாக இந்த தவறு நேர்ந்துள்ளதாகவும், அது பரீட்சை முறையின் பிரச்சினை அல்ல எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஐந்தாண்டு புலமைப்பரிசில் பரீட்சை, சாதாரண தரப் பரீட்சை, உயர்தரப் பரீட்சை போன்றவற்றை நடாத்துவதில், பரீட்சை வினாத்தாள்களை முன்கூட்டியே வெளியிடுவது கடந்த காலங்களில் பிரச்சினையாக இருந்தது.

அந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர தேவையான தொழில்நுட்பம் தற்போது உள்ளதாகவும், அந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வினாத்தாள் வங்கி உருவாக்கப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பரீட்சை வினாத்தாள் கசிவைத் தடுக்க புதிய பொறிமுறை - பரீட்சைகள் திணைக்களம் எடுத்த தீர்மானம் பரீட்சை வினாத்தாள்களை முன்கூட்டியே கசிவதை தடுக்கும் வகையில் வினாத்தாள் வங்கியை நிறுவுவதற்கான புதிய வேலைத்திட்டம் தயாரிக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.2026ஆம் ஆண்டுக்குள் அதனை நிறுவ முடியும் என்றும், இதனால் வினாத்தாள்கள் முன்கூட்டியே கசிவதை தடுக்கலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இந்த புதிய வேலைத்திட்டத்தின் கீழ் பரீட்சை வினாத்தாள்களை தனிநபர்களின் கைகளுக்குச் செல்லாமல் கணினி மூலம் தயாரிக்கும் பணியை மேற்கொள்வதன் மூலம் பரீட்சை தாள்களை பாதுகாப்பாக வைத்திருக்க முடியும் என ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.தற்போது பரீட்சைக்கு முன்னர் பரீட்சை வினாத்தாள்களை விட்டுச் செல்வது ஒரு பிரச்சினையாக மாறியுள்ளதாகவும், தனிநபர்கள் மீதான நம்பிக்கையின் காரணமாக இந்த தவறு நேர்ந்துள்ளதாகவும், அது பரீட்சை முறையின் பிரச்சினை அல்ல எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.ஐந்தாண்டு புலமைப்பரிசில் பரீட்சை, சாதாரண தரப் பரீட்சை, உயர்தரப் பரீட்சை போன்றவற்றை நடாத்துவதில், பரீட்சை வினாத்தாள்களை முன்கூட்டியே வெளியிடுவது கடந்த காலங்களில் பிரச்சினையாக இருந்தது.அந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர தேவையான தொழில்நுட்பம் தற்போது உள்ளதாகவும், அந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வினாத்தாள் வங்கி உருவாக்கப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement