• Jan 12 2025

நிதிக் குழுவிற்கு புதிய உறுப்பினர்கள் நியமிப்பு!

Chithra / Jan 7th 2025, 11:23 am
image

 

நிதிக்குழுவில் புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர்களான சதுரங்க அபேசிங்க, சாணக்கியன் இராசமாணிக்கம், கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன மற்றும் அர்க்கம் இல்யாஸ் ஆகியோரை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இன்று (07) ஆரம்பமான புதிய வருடத்தின் முதலாவது பாராளுமன்ற அமர்வில் சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்னவால் இந்த நியமனங்கள் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது.

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா நிதிக்குழுவின் தலைவராக முன்னர் நியமிக்கப்பட்டார்.

நிதிக் குழுவிற்கு புதிய உறுப்பினர்கள் நியமிப்பு  நிதிக்குழுவில் புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.இதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர்களான சதுரங்க அபேசிங்க, சாணக்கியன் இராசமாணிக்கம், கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன மற்றும் அர்க்கம் இல்யாஸ் ஆகியோரை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இன்று (07) ஆரம்பமான புதிய வருடத்தின் முதலாவது பாராளுமன்ற அமர்வில் சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்னவால் இந்த நியமனங்கள் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது.ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா நிதிக்குழுவின் தலைவராக முன்னர் நியமிக்கப்பட்டார்.

Advertisement

Advertisement

Advertisement