• Sep 19 2026

தாதியர்களுக்கான புதிய விடுதி அடிக்கல் நாட்டி ஆரம்பம்

Aathira / Sep 18th 2026, 9:19 am
image

வவுனியா பொதுவைத்தியசாலையின் புதிய தாதியர் விடுதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு சுகாதாரஅமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தலைமையில் நேற்று காலை இடம்பெற்றது.

வவுனியா வைத்தியசாலையின் நான்குமாடிகளை கொண்ட குறித்த விடுதிக்காக மாகாண குறித்து ஒதுக்கப்பட்ட நிதியாக 114.9மில்லியன் ரூபாய் பணம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

நிகழ்வில் முதன்மை அதிதியாக கலந்துகொண்ட சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் நளிந்தஜெயதிஸ்ஸ கட்டடத்திற்கான அடிக்கல்லை நாட்டிநிகழ்வை ஆரம்பித்து வைத்தார். அதனைத்தொடர்ந்து சிறுவர் மருத்துவ விடுதிக்கான பூங்கா ஒன்றையும் அவர் திறந்துவைத்திருந்தார். 

குறித்த நிகழ்வில் வடக்குமாகாண ஆளுநர் நா.வேதநாயகன்,வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களானம.ஜெகதீஸ்வரன்,செ.திலகநாதன்,ப.சத்தியலிங்கம்,காதர் மஸ்தான், மாவட்ட அரச அதிபர் பி.எ.சரத்சந்திர,பல்கலைக்கழக துணைவேந்தர் அற்புதராஜா மற்றும் வைத்தியசாலை சமூகம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

தாதியர்களுக்கான புதிய விடுதி அடிக்கல் நாட்டி ஆரம்பம் வவுனியா பொதுவைத்தியசாலையின் புதிய தாதியர் விடுதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு சுகாதாரஅமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தலைமையில் நேற்று காலை இடம்பெற்றது.வவுனியா வைத்தியசாலையின் நான்குமாடிகளை கொண்ட குறித்த விடுதிக்காக மாகாண குறித்து ஒதுக்கப்பட்ட நிதியாக 114.9மில்லியன் ரூபாய் பணம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நிகழ்வில் முதன்மை அதிதியாக கலந்துகொண்ட சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் நளிந்தஜெயதிஸ்ஸ கட்டடத்திற்கான அடிக்கல்லை நாட்டிநிகழ்வை ஆரம்பித்து வைத்தார். அதனைத்தொடர்ந்து சிறுவர் மருத்துவ விடுதிக்கான பூங்கா ஒன்றையும் அவர் திறந்துவைத்திருந்தார். குறித்த நிகழ்வில் வடக்குமாகாண ஆளுநர் நா.வேதநாயகன்,வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களானம.ஜெகதீஸ்வரன்,செ.திலகநாதன்,ப.சத்தியலிங்கம்,காதர் மஸ்தான், மாவட்ட அரச அதிபர் பி.எ.சரத்சந்திர,பல்கலைக்கழக துணைவேந்தர் அற்புதராஜா மற்றும் வைத்தியசாலை சமூகம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement