• Nov 22 2024

பிரதமர் தலைமையில் உதயமானது புதிய அரசியல் கூட்டணி..!

Chithra / Sep 5th 2024, 11:59 am
image


ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல் விடுக்கும் அரசியல் சக்தி தலைத்தூக்கியுள்ளதாகவும் ஜனநாயகத்தை பாதுகாக்கவே புதிய அரசியல் கூட்டணியை ஸ்தாபித்துள்ளோம் எனவும்  பொதுஜன ஐக்கிய சுதந்திர முன்னணியின் செயலாளர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.

மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவர் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் புதிய அரசியல் கூட்டணியொன்று இன்று வியாழக்கிழமை (5) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய அரசியல் கூட்டணி “கிண்ணம்" சின்னத்தில் பொதுஜன ஐக்கிய சுதந்திர முன்னணி  என்ற பெயரில் அங்குரார்ப்பம் செய்யப்பட்டுள்ளது.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் ரமேஷ் பத்திரன,

69 இலட்ச மக்களாணை எம்முடன் தான் உள்ளது. 

இடம்பெறவுள்ள எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலில் பொதுஜன ஐக்கிய சுதந்திர முன்னணி கிண்ணம் சின்னத்தில் போட்டியிடுவோம் என குறிப்பிட்டார்.

பொதுஜன ஐக்கிய சுதந்திர முன்னணியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் பத்து அரசியல் கட்சிகள் கைச்சாத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரதமர் தலைமையில் உதயமானது புதிய அரசியல் கூட்டணி. ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல் விடுக்கும் அரசியல் சக்தி தலைத்தூக்கியுள்ளதாகவும் ஜனநாயகத்தை பாதுகாக்கவே புதிய அரசியல் கூட்டணியை ஸ்தாபித்துள்ளோம் எனவும்  பொதுஜன ஐக்கிய சுதந்திர முன்னணியின் செயலாளர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவர் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் புதிய அரசியல் கூட்டணியொன்று இன்று வியாழக்கிழமை (5) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.இந்த புதிய அரசியல் கூட்டணி “கிண்ணம்" சின்னத்தில் பொதுஜன ஐக்கிய சுதந்திர முன்னணி  என்ற பெயரில் அங்குரார்ப்பம் செய்யப்பட்டுள்ளது.இங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் ரமேஷ் பத்திரன,69 இலட்ச மக்களாணை எம்முடன் தான் உள்ளது. இடம்பெறவுள்ள எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலில் பொதுஜன ஐக்கிய சுதந்திர முன்னணி கிண்ணம் சின்னத்தில் போட்டியிடுவோம் என குறிப்பிட்டார்.பொதுஜன ஐக்கிய சுதந்திர முன்னணியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் பத்து அரசியல் கட்சிகள் கைச்சாத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement