• Apr 15 2026

எரிபொருள் QR பதிவில் புதிய கட்டுப்பாடு! இதுவரை 51 இலட்சத்திற்கும் அதிகமான வாகனங்கள் பதிவு

Chithra / Mar 17th 2026, 6:56 pm
image

 எரிபொருள் QR முறைமையின் கீழ் ஒரு தேசிய அடையாள அட்டை இலக்கம் மற்றும் ஒரு தொலைபேசி இலக்கத்தைப் பயன்படுத்தி ஒரு வாகனத்தை மாத்திரமே பதிவு செய்ய முடியும் என அரசாங்கம் கொள்கை ரீதியான தீர்மானத்தை எடுத்துள்ளதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சு அறிவித்துள்ளது.


அமைச்சின் ஆலோசகர் சுமுது ரத்நாயக்க இது குறித்த மேலதிக விபரங்களை வெளியிட்டார்.


ஒரு நபர் தனது அடையாள அட்டையைப் பயன்படுத்தி ஒன்றுக்கும் மேற்பட்ட வாகனங்களைப் பதிவு செய்ய முடியாது. இந்த நடைமுறை அமுல்படுத்தப்பட்டபோது, வாகனங்களை ஏற்கனவே கைமாற்றிய பலருக்கு மீளப் பதிவு செய்வதில் சிக்கல்கள் ஏற்பட்டன.


நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடியை முகாமைத்துவம் செய்வதற்கும், விநியோகத்தைக் கட்டுப்படுத்துவதற்குமே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


ஒருவரிடம் அதிகப்படியான வாகனங்கள் காணப்படுமாயின், அவை வணிகப் பதிவு இலக்கத்தின் கீழ் ஒரு நிறுவனமாகப் பதிவு செய்யப்பட வேண்டும்.


"நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலையில், தனிநபர் ஒருவர் இரண்டு அல்லது மூன்று வாகனங்களைப் பயன்படுத்துவது அவசியமற்றது என்பதே எனது தனிப்பட்ட கருத்து," என சுமுது ரத்நாயக்க இதன்போது சுட்டிக்காட்டினார்.


இதேவேளை நாட்டில் மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ள எரிபொருள் கியூ.ஆர். குறியீடு முறைமையின் கீழ் இதுவரை 51 இலட்சத்திற்கும் அதிகமான வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.


இதுவரை 5,103,991 வாகனங்கள் இந்த முறைமையின் கீழ் வெற்றிகரமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.


இன்று (17) காலை 9.00 மணி நிலவரப்படி, இதற்கு முன்னர் கியூ.ஆர். முறைமையைப் பயன்படுத்தாத 439,997 புதிய வாகனங்கள் புதிதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.


தற்போது 5,094,566 பேர் இந்த முறைமையினைப் பயன்படுத்தி எரிபொருளைப் பெற்று வருகின்றனர்.


இந்த கியூ.ஆர். முறைமையில் நிலவிய தொழில்நுட்பக் கோளாறுகள் மற்றும் குறைபாடுகள் குறித்து கருத்துத் தெரிவித்த பிரதி அமைச்சர், முறைமையிலிருந்த 95 சதவீத குறைபாடுகள் தற்போது சரிசெய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.


முறைமையைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அதனைத் தடையின்றி இயக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் உறுதியளித்தார்.


எரிபொருள் QR பதிவில் புதிய கட்டுப்பாடு இதுவரை 51 இலட்சத்திற்கும் அதிகமான வாகனங்கள் பதிவு  எரிபொருள் QR முறைமையின் கீழ் ஒரு தேசிய அடையாள அட்டை இலக்கம் மற்றும் ஒரு தொலைபேசி இலக்கத்தைப் பயன்படுத்தி ஒரு வாகனத்தை மாத்திரமே பதிவு செய்ய முடியும் என அரசாங்கம் கொள்கை ரீதியான தீர்மானத்தை எடுத்துள்ளதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சு அறிவித்துள்ளது.அமைச்சின் ஆலோசகர் சுமுது ரத்நாயக்க இது குறித்த மேலதிக விபரங்களை வெளியிட்டார்.ஒரு நபர் தனது அடையாள அட்டையைப் பயன்படுத்தி ஒன்றுக்கும் மேற்பட்ட வாகனங்களைப் பதிவு செய்ய முடியாது. இந்த நடைமுறை அமுல்படுத்தப்பட்டபோது, வாகனங்களை ஏற்கனவே கைமாற்றிய பலருக்கு மீளப் பதிவு செய்வதில் சிக்கல்கள் ஏற்பட்டன.நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடியை முகாமைத்துவம் செய்வதற்கும், விநியோகத்தைக் கட்டுப்படுத்துவதற்குமே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.ஒருவரிடம் அதிகப்படியான வாகனங்கள் காணப்படுமாயின், அவை வணிகப் பதிவு இலக்கத்தின் கீழ் ஒரு நிறுவனமாகப் பதிவு செய்யப்பட வேண்டும்."நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலையில், தனிநபர் ஒருவர் இரண்டு அல்லது மூன்று வாகனங்களைப் பயன்படுத்துவது அவசியமற்றது என்பதே எனது தனிப்பட்ட கருத்து," என சுமுது ரத்நாயக்க இதன்போது சுட்டிக்காட்டினார்.இதேவேளை நாட்டில் மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ள எரிபொருள் கியூ.ஆர். குறியீடு முறைமையின் கீழ் இதுவரை 51 இலட்சத்திற்கும் அதிகமான வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.இதுவரை 5,103,991 வாகனங்கள் இந்த முறைமையின் கீழ் வெற்றிகரமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.இன்று (17) காலை 9.00 மணி நிலவரப்படி, இதற்கு முன்னர் கியூ.ஆர். முறைமையைப் பயன்படுத்தாத 439,997 புதிய வாகனங்கள் புதிதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.தற்போது 5,094,566 பேர் இந்த முறைமையினைப் பயன்படுத்தி எரிபொருளைப் பெற்று வருகின்றனர்.இந்த கியூ.ஆர். முறைமையில் நிலவிய தொழில்நுட்பக் கோளாறுகள் மற்றும் குறைபாடுகள் குறித்து கருத்துத் தெரிவித்த பிரதி அமைச்சர், முறைமையிலிருந்த 95 சதவீத குறைபாடுகள் தற்போது சரிசெய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.முறைமையைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அதனைத் தடையின்றி இயக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் உறுதியளித்தார்.

Advertisement

Advertisement

Advertisement