மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் அரசியல் பதற்றங்களால் உலகளாவிய எரிசக்தி சந்தையில் ஏற்பட்டுள்ள நிலையற்றத் தன்மையைக் கருத்திற் கொண்டு, இலங்கையின் எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்த அமைச்சரவை தீர்மானம் ஒன்றை மேற்கொண்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் இன்று கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய, அடுத்த 3 மாத காலத்திற்கு சாதாரண கொள்முதல் வழிகாட்டல்களுக்கு அப்பாற்பட்ட முறையில், அவசரமாக எரிபொருள், எரிவாயு மற்றும் நிலக்கரியைக் கொள்முதல் செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இலங்கை தனது மசகு எண்ணெய், பெட்ரோலியப் பொருட்கள், சமையல் எரிவாயு மற்றும் நிலக்கரித் தேவைகளுக்காக முழுமையாக இறக்குமதியையே சார்ந்துள்ளது.
தற்போதைய சர்வதேச சூழலால் எரிசக்தி விநியோகத்தில் கப்பல் வருகைகள் ரத்து செய்யப்படுதல், காப்புறுதி நிறுவனங்கள் காப்புறுதி வழங்க மறுத்தல் அல்லது தாமதித்தல் போன்ற நேரடி அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளன.
இந்தநிலையில், தடையற்ற எரிசக்தி விநியோகத்தை உறுதிப்படுத்துவதற்காக, தேசிய கொள்முதல் ஆணைக்குழுவுடன் கலந்தாலோசித்து இந்தத் தற்காலிக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் இலங்கையில் மின்வெட்டை அமுல்படுத்துவது குறித்து இதுவரையில் எவ்வித உத்தியோகபூர்வ தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை.
மத்திய கிழக்கு போர்ச் சூழல் வருங்காலத்தில் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதை இப்போது துல்லியமாகக் கணிக்க முடியாது.
போர் இன்னும் உக்கிரமடைந்தால் கூட, அதனால் ஏற்படக்கூடிய நெருக்கடிகளை முகாமைத்துவம் செய்வதற்கான முன்னேற்பாட்டுத் திட்டங்களையே அரசு தற்போது நடைமுறைப்படுத்தி வருகின்றது.
தற்போதைய சூழலில் மின் விநியோகத்தைப் பாதிப்பின்றி முன்னெடுத்துச் செல்வதே அரசின் முதன்மை நோக்கம் என அவர் உறுதிப்படுத்தினார்.
இதேவேளை அரசாங்க சேவைகளின் தொடர்ச்சியை உறுதிப்படுத்துவதற்காகவே புதன்கிழமை விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார்.
வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களில் விடுமுறை வரும்போது, அலுவலகப் பணிகள் தொடர்ந்து பல நாட்களுக்குப் பாதிக்கப்படுகின்றன.
எனவே, விடுமுறையை புதன்கிழமைக்கு மாற்றுவதன் மூலம், நீண்டகாலத் தடங்கல் இன்றி அரசாங்க நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும்.
அரசாங்க அலுவலகங்களை முற்றாக மூடாமல், பொதுச் சேவைகளைப் பராமரிப்பதற்கும் வார முழுவதும் அத்தியாவசியப் பணிகள் இயங்குவதை உறுதி செய்வதற்கும் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
எரிபொருள், எரிவாயு அவசரமாக கொள்முதல்; மின்வெட்டு குறித்து அமைச்சரின் அதிரடி அறிவிப்பு மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் அரசியல் பதற்றங்களால் உலகளாவிய எரிசக்தி சந்தையில் ஏற்பட்டுள்ள நிலையற்றத் தன்மையைக் கருத்திற் கொண்டு, இலங்கையின் எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்த அமைச்சரவை தீர்மானம் ஒன்றை மேற்கொண்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் இன்று கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.இதற்கமைய, அடுத்த 3 மாத காலத்திற்கு சாதாரண கொள்முதல் வழிகாட்டல்களுக்கு அப்பாற்பட்ட முறையில், அவசரமாக எரிபொருள், எரிவாயு மற்றும் நிலக்கரியைக் கொள்முதல் செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.இலங்கை தனது மசகு எண்ணெய், பெட்ரோலியப் பொருட்கள், சமையல் எரிவாயு மற்றும் நிலக்கரித் தேவைகளுக்காக முழுமையாக இறக்குமதியையே சார்ந்துள்ளது.தற்போதைய சர்வதேச சூழலால் எரிசக்தி விநியோகத்தில் கப்பல் வருகைகள் ரத்து செய்யப்படுதல், காப்புறுதி நிறுவனங்கள் காப்புறுதி வழங்க மறுத்தல் அல்லது தாமதித்தல் போன்ற நேரடி அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளன.இந்தநிலையில், தடையற்ற எரிசக்தி விநியோகத்தை உறுதிப்படுத்துவதற்காக, தேசிய கொள்முதல் ஆணைக்குழுவுடன் கலந்தாலோசித்து இந்தத் தற்காலிக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மேலும் இலங்கையில் மின்வெட்டை அமுல்படுத்துவது குறித்து இதுவரையில் எவ்வித உத்தியோகபூர்வ தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை.மத்திய கிழக்கு போர்ச் சூழல் வருங்காலத்தில் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதை இப்போது துல்லியமாகக் கணிக்க முடியாது. போர் இன்னும் உக்கிரமடைந்தால் கூட, அதனால் ஏற்படக்கூடிய நெருக்கடிகளை முகாமைத்துவம் செய்வதற்கான முன்னேற்பாட்டுத் திட்டங்களையே அரசு தற்போது நடைமுறைப்படுத்தி வருகின்றது.தற்போதைய சூழலில் மின் விநியோகத்தைப் பாதிப்பின்றி முன்னெடுத்துச் செல்வதே அரசின் முதன்மை நோக்கம் என அவர் உறுதிப்படுத்தினார்.இதேவேளை அரசாங்க சேவைகளின் தொடர்ச்சியை உறுதிப்படுத்துவதற்காகவே புதன்கிழமை விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார்.வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களில் விடுமுறை வரும்போது, அலுவலகப் பணிகள் தொடர்ந்து பல நாட்களுக்குப் பாதிக்கப்படுகின்றன.எனவே, விடுமுறையை புதன்கிழமைக்கு மாற்றுவதன் மூலம், நீண்டகாலத் தடங்கல் இன்றி அரசாங்க நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும்.அரசாங்க அலுவலகங்களை முற்றாக மூடாமல், பொதுச் சேவைகளைப் பராமரிப்பதற்கும் வார முழுவதும் அத்தியாவசியப் பணிகள் இயங்குவதை உறுதி செய்வதற்கும் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்றார்.