• Nov 25 2024

போர்க்குற்றம் குறித்து கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிரான புதிய அறிக்கை..!

Chithra / Jan 31st 2024, 11:26 am
image


இலங்கையில் போர் முடிந்து பதினைந்து ஆண்டுகளுக்குப் பின்னர், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, உள்நாட்டுப் போர் இடம்பெற்ற போது போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களில் முக்கிய வகிபாகம் கொண்டிருந்ததற்கான பெருமளவு ஆதாரங்கள் வெளிவந்துள்ளதாக மனித உரிமைகள் சட்டத்தரணிகள் புதிய அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

'இலங்கை அதன் வன்முறை நிறைந்த கடந்தகாலப் பிரச்சினைகள் தொடர்பில் அக்கறையுடன் இருக்குமாயின், 

போர்க்குற்றங்களிலும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களிலும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு இருந்த வகிபாகம் தொடர்பாக அவரைப் பொறுப்புக்கூற வைக்கவேண்டும்" என சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயல்திட்ட அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.

மேலும் 2009 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்பு அமைச்சின் செயலராகப் பதவிவகித்த போது, 

2009 இல் சண்டைக் களத்திலிருந்த தளபதிகளுக்கு கட்டளைகளை வழங்கியமைக்கான விரிவான ஆதாரங்களை இப்புதிய அறிக்கை கொண்டிருக்கின்ற எனபதும் குறிப்பிடத்தக்கது

போர்க்குற்றம் குறித்து கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிரான புதிய அறிக்கை. இலங்கையில் போர் முடிந்து பதினைந்து ஆண்டுகளுக்குப் பின்னர், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, உள்நாட்டுப் போர் இடம்பெற்ற போது போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களில் முக்கிய வகிபாகம் கொண்டிருந்ததற்கான பெருமளவு ஆதாரங்கள் வெளிவந்துள்ளதாக மனித உரிமைகள் சட்டத்தரணிகள் புதிய அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.'இலங்கை அதன் வன்முறை நிறைந்த கடந்தகாலப் பிரச்சினைகள் தொடர்பில் அக்கறையுடன் இருக்குமாயின், போர்க்குற்றங்களிலும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களிலும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு இருந்த வகிபாகம் தொடர்பாக அவரைப் பொறுப்புக்கூற வைக்கவேண்டும்" என சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயல்திட்ட அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.மேலும் 2009 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்பு அமைச்சின் செயலராகப் பதவிவகித்த போது, 2009 இல் சண்டைக் களத்திலிருந்த தளபதிகளுக்கு கட்டளைகளை வழங்கியமைக்கான விரிவான ஆதாரங்களை இப்புதிய அறிக்கை கொண்டிருக்கின்ற எனபதும் குறிப்பிடத்தக்கது

Advertisement

Advertisement

Advertisement