நாட்டில் நிலவும் கடும் எரிபொருள் நெருக்கடியைக் கருத்திற்கொண்டு, பாடசாலைகளின் செயற்பாடுகளில் பாரிய மாற்றங்களை மேற்கொண்டு கல்வி அமைச்சு இன்று விசேட அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவவின் கையொப்பத்துடன் வெளியாகியுள்ள இந்த அறிவுறுத்தல்கள் இன்று முதல் அமுலுக்கு வருகின்றன.
ஏற்கனவே திட்டமிடப்பட்ட மற்றும் இனி திட்டமிடப்படவுள்ள அனைத்து கல்விச் சுற்றுலாக்களும் மறு அறிவித்தல் வரை உடனடியாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.
பாடசாலை விழாக்கள் அல்லது கொண்டாட்டங்களின் போது அதிக எரிபொருள் செலவாகும் வாகனப் பேரணிகளை நடத்துவதற்குத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பாடத்திட்டங்களை முடிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து, பாடசாலை நேரத்தை வெளி நிறுவனங்களின் நிகழ்ச்சிகளுக்காகப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு அதிபர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அரசின் பொதுவான தீர்மானத்துக்கு அமைய, ஒவ்வொரு புதன்கிழமையும் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதனால் வாரத்தில் நான்கு நாள்கள் மாத்திரமே பாடசாலைகள் இயங்கும்.
புதன்கிழமைகளில் மாணவர்கள் வீணாகக் காலத்தைக் கழிக்காது, வீட்டில் இருந்தபடியே சுயகற்றல் செயற்பாடுகளில் ஈடுபடுவதை உறுதி செய்யுமாறும், அதற்கான மேலதிக பயிற்சிகளை வழங்குமாறும் அதிபர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எரிசக்தி சேமிப்பை இலக்காகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த நடைமுறைகள், நாட்டின் நிலைமை சீரடைந்ததும் மீளப் பரிசீலிக்கப்படும் என்று கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
பாடசாலைகளுக்குப் புதிய கட்டுப்பாடுகள்; கல்விச் சுற்றுலாக்கள், வாகனப் பேரணிகளுக்குத் தடை நாட்டில் நிலவும் கடும் எரிபொருள் நெருக்கடியைக் கருத்திற்கொண்டு, பாடசாலைகளின் செயற்பாடுகளில் பாரிய மாற்றங்களை மேற்கொண்டு கல்வி அமைச்சு இன்று விசேட அறிவித்தலை வெளியிட்டுள்ளது.கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவவின் கையொப்பத்துடன் வெளியாகியுள்ள இந்த அறிவுறுத்தல்கள் இன்று முதல் அமுலுக்கு வருகின்றன.ஏற்கனவே திட்டமிடப்பட்ட மற்றும் இனி திட்டமிடப்படவுள்ள அனைத்து கல்விச் சுற்றுலாக்களும் மறு அறிவித்தல் வரை உடனடியாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.பாடசாலை விழாக்கள் அல்லது கொண்டாட்டங்களின் போது அதிக எரிபொருள் செலவாகும் வாகனப் பேரணிகளை நடத்துவதற்குத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.பாடத்திட்டங்களை முடிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து, பாடசாலை நேரத்தை வெளி நிறுவனங்களின் நிகழ்ச்சிகளுக்காகப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு அதிபர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.அரசின் பொதுவான தீர்மானத்துக்கு அமைய, ஒவ்வொரு புதன்கிழமையும் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதனால் வாரத்தில் நான்கு நாள்கள் மாத்திரமே பாடசாலைகள் இயங்கும்.புதன்கிழமைகளில் மாணவர்கள் வீணாகக் காலத்தைக் கழிக்காது, வீட்டில் இருந்தபடியே சுயகற்றல் செயற்பாடுகளில் ஈடுபடுவதை உறுதி செய்யுமாறும், அதற்கான மேலதிக பயிற்சிகளை வழங்குமாறும் அதிபர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.எரிசக்தி சேமிப்பை இலக்காகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த நடைமுறைகள், நாட்டின் நிலைமை சீரடைந்ததும் மீளப் பரிசீலிக்கப்படும் என்று கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.