• Apr 17 2026

பயங்கரவாத தடைச் சட்டத்தினை நீக்குவது என்ற பெயரில் புதிய கட்டுப்பாடுகள்– சட்டத்தரணி நிதான்சன் கண்டனம் !

Ziya / Feb 25th 2026, 3:00 pm
image

இலங்கையில் 1979 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தற்காலிக பயங்கரவாத தடைச் சட்டத்தினை நீக்குவதாக கூறி ஆட்சியாளர்களாக வந்த தேசிய மக்கள் சக்தியானது தற்பொழுது பயங்கரவாதத்திலிருந்து அரசனை பாதுகாக்கின்ற எனும் நோக்கத்திலே PSTA என்கின்ற ஒரு புதிய சட்டமூலத்தினை வழங்கிருக்கின்றது.


இந்த குறித்த சட்டமூலம் தொடர்பிலான விடயத்தினை அரசு முன்வைத்திருக்கின்ற போதிலும் இது பயங்கரவாத தடைச் சட்டத்தின் ஊடான ஒரு தற்காலிக சட்டத்தினை மிகவும் பலமாக ஒரு நிரந்தர சட்டமாக்கும் முகமாக தற்பொழுது நிலை மாறிக் கொண்டிருக்கின்றது. 


அதாவது பயங்கரவாத தடைச் சட்டத்தில் இருக்கின்ற கடுமையான விடயங்களினை தற்காலிக சட்டத்தில் இருந்து நாங்கள் நீக்குவதாக கூறிய அரசு தற்போது அதனை முழுமையாக நிறைவேற்றும் வகையிலே அதுக்கு மாற்றீடாக சட்டத்தினூ மிகவும் பலமான கொண்டு வந்து தற்காலிக சட்டத்தினை இல்லாமல் ஆகாது அதனை ஒரு பலமான ஒரு சட்டமாக அமல்படுத்தக்கூடிய வகையிலே தற்பொழுது நடவடிக்கைகளை மேற்கொள்வது குறிப்பாக சர்வதேச சமூகங்களுக்கு மிகக் கொடிய விடயங்களில் நாங்கள் இல்லாது ஒழிக்க போகின்றோம்.என நாடகம் காட்டும் செயற்பாட்டினை முன்னெடுக்கின்றது.


தற்காலிக சட்டமாக இருக்கும் PTA ஆனால் அது மக்களினை மிகவும் துன்புறுத்துகின்றது என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும் கூட இப்பொழுது அவ்வாறான ஒரு கருத்தினை மாற்றாக கொண்டு பெயரினை மட்டும் மாற்றி விடயத்தினை அதன் உட்கருவில் மிகவும் பலமாக வலியுறுத்தக்கூடிய வகையிலே தான் இந்த சட்டமூலம் வருகின்றது பெயர் மட்டும் மாற்றப்பட்டிருக்கின்றது உள்ளீடுகள் மிகவும் வெகுவான ஒரு பலமான அடிப்படை உரிமைகளை பாதிக்கின்ற ஒரு விடயமாக இருக்கின்றது .


இவ்வாறான காரணங்களினால் மக்கள் தொடர்ந்து குறிப்பாக சிறுபான்மை மக்களே பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். 


அதிகமாக நூற்றுக்கு 90 வீதமான சிறுபான்மை மக்களே பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களாக இலங்கையில் இருக்கின்றார்கள்.


அதை விட இந்த சட்டம் சிறுபான்மை இனருக்கு மட்டுமல்ல இனி எதிர்காலத்தில் பெரும்பான்மை மக்களுக்கு அரசுகெதிராக ஒரு ஜனநாயக ரீதியில் தங்களுடைய போராட்டங்களை முன்னெடுக்கின்ற போது கூட அரசு PSTA சட்டத்தினை பயன்படுத்தி கைது செய்ய முடியும்.


அந்த தடைச் சட்டத்தினை இப்போது வந்திருக்கின்ற புதிய வடிவமான அரசுக்கு எதிரான பயங்கரவாதத்தை தடுப்போம் என்கின்ற அந்த சட்டமூலத்தின் ஊடாக அதனை நிறைவேற்றக்கூடிய வாய்ப்பினை ஏற்படுத்தும் என்பதனை நாங்கள் இந்த சட்ட வரைபினூடாக அறியக் கூடியதாக இருக்கின்றது.


ஆகவே இது ஒரு முழுமையாக சர்வதேசத்திற்கு வழங்கப்படுகின்ற ஒரு கண்துடைப்பு நாடகமாகவும், மேலும் மக்களினை தொடர்ச்சியாக அச்சுறுத்தும் வகைகளில் அமைக்கப்படும் ஒரு சட்டமாகவே இருக்கின்றது .அதை மீண்டும் நான் வலியுறுத்த வேண்டும்


 1979 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பயங்கரவா தடைச் சட்டம் கொண்டுவரப்பட்டு இன்று 30 வருடங்களுக்கு மேலாகக் கொண்டு செல்லப்படுகின்றது அதேபோல் அது அமுல்படுத்தப்படாமலேயே அந்த விடயம் தொடர்ச்சியாக கொண்டு வரப்பட்டு இன்று மக்கள் அதனால் பாதிக்கப்பட்டு இருக்கின்ற போது இது பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையோடு நிறைவேற்றப்படுகின்ற சட்டமாக வருகின்ற பொழுது அதைவிட பலமான ஒரு வழிமுறை பெற்று மக்களை துன்புறுத்தக்கூடிய சட்டமாகத்தான் இப்போது வரும்.


ஊடக சுதந்திரத்தினை முடக்குவதாகவும் தனிமனித சுதந்திரத்தை முடக்குவதாகவும் ஜனநாயகத்தின் ஒரு தூணாக கருதப்படுகின்ற இந்த ஊடக சுதந்திரமானது தொடர்ந்து நசுக்கப்படுவதற்கும் வசதி வாய்ப்பாக இந்த பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் உடைய புதிய வடிவம் அமைந்திருக்கின்ற PSTA சட்ட மூலம் அமையும் என நான் நினைக்கின்றேன்.


எதிர்காலத்தில் ஊடகங்கள் தங்களுடைய கருத்துக்களினை பதிவு செய்வதில் கூட பல சவால்களை எதிர்கொள்ள வேண்டிய இருக்கின்றது.


ஆகவே ஊடகவியலாளர்களும் அவர்களுடைய செய்திகளை மக்களுக்கும் உலகறிய செய்வதற்குமான ஒரு சுதந்திரம் இல்லாமல் போனால் அரசியலமைப்பினுடைய ஒரு சொல்லப்பட்டிருக்கின்ற ஜனநாயகத்தினுடைய ஒரு முக்கியமான தூணாக கருதப்படுகின்ற ஊடகச் சுதந்திரம் கருத்து சுதந்திரம் பொதுவாக பாதிக்கப்படும்.


அரசியல் அமைப்பில் சொல்லப்பட்டிருக்கின்ற எங்களுடைய கருத்து சுதந்திரங்கள் அதற்குரிய உறுப்புரைகளும் பொதுவாக பாதிக்கப்படும் இந்த சட்டத்தினால் என்பது நான் இந்த இடத்தில் குறிப்பிட்டுக் கொள்ள விரும்புகின்றேன் எனவும் சட்டத்தரணி அ. நிதான்சன் தெரிவித்தார்.


பயங்கரவாத தடைச் சட்டத்தினை நீக்குவது என்ற பெயரில் புதிய கட்டுப்பாடுகள்– சட்டத்தரணி நிதான்சன் கண்டனம் இலங்கையில் 1979 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தற்காலிக பயங்கரவாத தடைச் சட்டத்தினை நீக்குவதாக கூறி ஆட்சியாளர்களாக வந்த தேசிய மக்கள் சக்தியானது தற்பொழுது பயங்கரவாதத்திலிருந்து அரசனை பாதுகாக்கின்ற எனும் நோக்கத்திலே PSTA என்கின்ற ஒரு புதிய சட்டமூலத்தினை வழங்கிருக்கின்றது.இந்த குறித்த சட்டமூலம் தொடர்பிலான விடயத்தினை அரசு முன்வைத்திருக்கின்ற போதிலும் இது பயங்கரவாத தடைச் சட்டத்தின் ஊடான ஒரு தற்காலிக சட்டத்தினை மிகவும் பலமாக ஒரு நிரந்தர சட்டமாக்கும் முகமாக தற்பொழுது நிலை மாறிக் கொண்டிருக்கின்றது. அதாவது பயங்கரவாத தடைச் சட்டத்தில் இருக்கின்ற கடுமையான விடயங்களினை தற்காலிக சட்டத்தில் இருந்து நாங்கள் நீக்குவதாக கூறிய அரசு தற்போது அதனை முழுமையாக நிறைவேற்றும் வகையிலே அதுக்கு மாற்றீடாக சட்டத்தினூ மிகவும் பலமான கொண்டு வந்து தற்காலிக சட்டத்தினை இல்லாமல் ஆகாது அதனை ஒரு பலமான ஒரு சட்டமாக அமல்படுத்தக்கூடிய வகையிலே தற்பொழுது நடவடிக்கைகளை மேற்கொள்வது குறிப்பாக சர்வதேச சமூகங்களுக்கு மிகக் கொடிய விடயங்களில் நாங்கள் இல்லாது ஒழிக்க போகின்றோம்.என நாடகம் காட்டும் செயற்பாட்டினை முன்னெடுக்கின்றது.தற்காலிக சட்டமாக இருக்கும் PTA ஆனால் அது மக்களினை மிகவும் துன்புறுத்துகின்றது என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும் கூட இப்பொழுது அவ்வாறான ஒரு கருத்தினை மாற்றாக கொண்டு பெயரினை மட்டும் மாற்றி விடயத்தினை அதன் உட்கருவில் மிகவும் பலமாக வலியுறுத்தக்கூடிய வகையிலே தான் இந்த சட்டமூலம் வருகின்றது பெயர் மட்டும் மாற்றப்பட்டிருக்கின்றது உள்ளீடுகள் மிகவும் வெகுவான ஒரு பலமான அடிப்படை உரிமைகளை பாதிக்கின்ற ஒரு விடயமாக இருக்கின்றது .இவ்வாறான காரணங்களினால் மக்கள் தொடர்ந்து குறிப்பாக சிறுபான்மை மக்களே பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். அதிகமாக நூற்றுக்கு 90 வீதமான சிறுபான்மை மக்களே பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களாக இலங்கையில் இருக்கின்றார்கள்.அதை விட இந்த சட்டம் சிறுபான்மை இனருக்கு மட்டுமல்ல இனி எதிர்காலத்தில் பெரும்பான்மை மக்களுக்கு அரசுகெதிராக ஒரு ஜனநாயக ரீதியில் தங்களுடைய போராட்டங்களை முன்னெடுக்கின்ற போது கூட அரசு PSTA சட்டத்தினை பயன்படுத்தி கைது செய்ய முடியும்.அந்த தடைச் சட்டத்தினை இப்போது வந்திருக்கின்ற புதிய வடிவமான அரசுக்கு எதிரான பயங்கரவாதத்தை தடுப்போம் என்கின்ற அந்த சட்டமூலத்தின் ஊடாக அதனை நிறைவேற்றக்கூடிய வாய்ப்பினை ஏற்படுத்தும் என்பதனை நாங்கள் இந்த சட்ட வரைபினூடாக அறியக் கூடியதாக இருக்கின்றது.ஆகவே இது ஒரு முழுமையாக சர்வதேசத்திற்கு வழங்கப்படுகின்ற ஒரு கண்துடைப்பு நாடகமாகவும், மேலும் மக்களினை தொடர்ச்சியாக அச்சுறுத்தும் வகைகளில் அமைக்கப்படும் ஒரு சட்டமாகவே இருக்கின்றது .அதை மீண்டும் நான் வலியுறுத்த வேண்டும் 1979 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பயங்கரவா தடைச் சட்டம் கொண்டுவரப்பட்டு இன்று 30 வருடங்களுக்கு மேலாகக் கொண்டு செல்லப்படுகின்றது அதேபோல் அது அமுல்படுத்தப்படாமலேயே அந்த விடயம் தொடர்ச்சியாக கொண்டு வரப்பட்டு இன்று மக்கள் அதனால் பாதிக்கப்பட்டு இருக்கின்ற போது இது பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையோடு நிறைவேற்றப்படுகின்ற சட்டமாக வருகின்ற பொழுது அதைவிட பலமான ஒரு வழிமுறை பெற்று மக்களை துன்புறுத்தக்கூடிய சட்டமாகத்தான் இப்போது வரும்.ஊடக சுதந்திரத்தினை முடக்குவதாகவும் தனிமனித சுதந்திரத்தை முடக்குவதாகவும் ஜனநாயகத்தின் ஒரு தூணாக கருதப்படுகின்ற இந்த ஊடக சுதந்திரமானது தொடர்ந்து நசுக்கப்படுவதற்கும் வசதி வாய்ப்பாக இந்த பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் உடைய புதிய வடிவம் அமைந்திருக்கின்ற PSTA சட்ட மூலம் அமையும் என நான் நினைக்கின்றேன்.எதிர்காலத்தில் ஊடகங்கள் தங்களுடைய கருத்துக்களினை பதிவு செய்வதில் கூட பல சவால்களை எதிர்கொள்ள வேண்டிய இருக்கின்றது.ஆகவே ஊடகவியலாளர்களும் அவர்களுடைய செய்திகளை மக்களுக்கும் உலகறிய செய்வதற்குமான ஒரு சுதந்திரம் இல்லாமல் போனால் அரசியலமைப்பினுடைய ஒரு சொல்லப்பட்டிருக்கின்ற ஜனநாயகத்தினுடைய ஒரு முக்கியமான தூணாக கருதப்படுகின்ற ஊடகச் சுதந்திரம் கருத்து சுதந்திரம் பொதுவாக பாதிக்கப்படும்.அரசியல் அமைப்பில் சொல்லப்பட்டிருக்கின்ற எங்களுடைய கருத்து சுதந்திரங்கள் அதற்குரிய உறுப்புரைகளும் பொதுவாக பாதிக்கப்படும் இந்த சட்டத்தினால் என்பது நான் இந்த இடத்தில் குறிப்பிட்டுக் கொள்ள விரும்புகின்றேன் எனவும் சட்டத்தரணி அ. நிதான்சன் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement