• Jul 17 2025

யானைகள் - மனிதர்கள் இடையேயான மோதலை கட்டுப்படுத்த புதிய விதிகள்!

shanuja / Jul 16th 2025, 9:20 am
image

யானைகள் - மனிதர்கள் இடையே அதிகரித்து வரும்  மோதலை கட்டுப்படுத்தும் வகையில்  புதிய ஒழுங்குவிதிகள் சுற்றாடல் அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 


சுற்றாடல் அமைச்சர் தம்மிக பட்டபெந்தி மற்றும் பிரதியமைச்சர் அண்டன் ஜயக்கொடி ஆகியோர் தலைமையில்  சுற்றாடல் அமைச்சில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலிலே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இது தொடர்பில் சுற்றாடல் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், 

 

அதன்படி, யானைகளை வேட்டையாடுதல் மற்றும் அங்கீகரிக்கப்படாத மின்சார வேலிகளை அமைத்து அவற்றைக் கொல்லுதல் என்பன கடுமையான குற்றங்களாகக் கருதப்படும்.


அவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நபர்களுக்கு எதிராக, கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். 


அண்மையில் 'பாத்திய' என்ற யானை கடந்த சில நாட்களுக்கு முன்பு துப்பாக்கிச்சூட்டுக்கு உள்ளான நிலையில் நேற்று உயிரிழந்தது. இதனையடுத்து, குறித்த யானையின் உடற்கூற்றுப் பரிசோதனை நடத்தப்படவுள்ளது. 

 

நீதிமன்ற உத்தரவு கிடைத்தவுடன் பேராதனை பல்கலைக்கழகத்தின் கால்நடை மருத்துவ பீடத்துடன் இணைந்து பரிசோதனை நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

யானைகள் - மனிதர்கள் இடையேயான மோதலை கட்டுப்படுத்த புதிய விதிகள் யானைகள் - மனிதர்கள் இடையே அதிகரித்து வரும்  மோதலை கட்டுப்படுத்தும் வகையில்  புதிய ஒழுங்குவிதிகள் சுற்றாடல் அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. சுற்றாடல் அமைச்சர் தம்மிக பட்டபெந்தி மற்றும் பிரதியமைச்சர் அண்டன் ஜயக்கொடி ஆகியோர் தலைமையில்  சுற்றாடல் அமைச்சில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலிலே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் சுற்றாடல் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,  அதன்படி, யானைகளை வேட்டையாடுதல் மற்றும் அங்கீகரிக்கப்படாத மின்சார வேலிகளை அமைத்து அவற்றைக் கொல்லுதல் என்பன கடுமையான குற்றங்களாகக் கருதப்படும்.அவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நபர்களுக்கு எதிராக, கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அண்மையில் 'பாத்திய' என்ற யானை கடந்த சில நாட்களுக்கு முன்பு துப்பாக்கிச்சூட்டுக்கு உள்ளான நிலையில் நேற்று உயிரிழந்தது. இதனையடுத்து, குறித்த யானையின் உடற்கூற்றுப் பரிசோதனை நடத்தப்படவுள்ளது.  நீதிமன்ற உத்தரவு கிடைத்தவுடன் பேராதனை பல்கலைக்கழகத்தின் கால்நடை மருத்துவ பீடத்துடன் இணைந்து பரிசோதனை நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement