• Nov 28 2024

அரச மற்றும் தனியார் துறைகளுக்கு மேலதிகமாக புதிய துறை! - ஜனாதிபதி அறிவிப்பு

Chithra / Aug 8th 2024, 9:28 am
image

 

அரச மற்றும் தனியார் துறைகளுக்கு மேலதிகமாக மக்கள் துறையொன்று உருவாக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மக்களை பொருளாதார ரீதியாக உயர்த்துவதற்காக இந்த துறை உருவாக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

கூட்டுறவு இயக்கத்தை மக்கள் துறையின் இயக்கியாக மாற்றும் வகையில் நாட்டில் சுதந்திரமான வலுவான கூட்டுறவு இயக்கம் கட்டியெழுப்பப்பட்டு வருவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

இதேவேளை அடுத்த வருடம் முதல் வாகன இறக்குமதிக்கு படிப்படியாக அனுமதி வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  அறிவித்துள்ளார்.

இந்த முடிவு சுங்க வரி மூலம் அரசாங்க வருவாயை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்தோடு, நாட்டின் வெளிநாட்டு கையிருப்புகளை ஆதரிப்பதற்காக வருமானம் அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், வாகனங்கள் மீதான சுங்க வரிகள் அரசாங்கத்திற்கு குறிப்பிடத்தக்க வருவாய் ஆதாரமாக இருப்பதால் வாகன இறக்குமதியை அனுமதிக்கும் அளவுக்கு நமது கையிருப்பு வளர்ந்துள்ளதாக நான் நம்புகிறேன் என ஜனாதிபதி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


அரச மற்றும் தனியார் துறைகளுக்கு மேலதிகமாக புதிய துறை - ஜனாதிபதி அறிவிப்பு  அரச மற்றும் தனியார் துறைகளுக்கு மேலதிகமாக மக்கள் துறையொன்று உருவாக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.மக்களை பொருளாதார ரீதியாக உயர்த்துவதற்காக இந்த துறை உருவாக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.கூட்டுறவு இயக்கத்தை மக்கள் துறையின் இயக்கியாக மாற்றும் வகையில் நாட்டில் சுதந்திரமான வலுவான கூட்டுறவு இயக்கம் கட்டியெழுப்பப்பட்டு வருவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதேவேளை அடுத்த வருடம் முதல் வாகன இறக்குமதிக்கு படிப்படியாக அனுமதி வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  அறிவித்துள்ளார்.இந்த முடிவு சுங்க வரி மூலம் அரசாங்க வருவாயை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.அத்தோடு, நாட்டின் வெளிநாட்டு கையிருப்புகளை ஆதரிப்பதற்காக வருமானம் அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தியுள்ளார்.மேலும், வாகனங்கள் மீதான சுங்க வரிகள் அரசாங்கத்திற்கு குறிப்பிடத்தக்க வருவாய் ஆதாரமாக இருப்பதால் வாகன இறக்குமதியை அனுமதிக்கும் அளவுக்கு நமது கையிருப்பு வளர்ந்துள்ளதாக நான் நம்புகிறேன் என ஜனாதிபதி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement