பொலிஸ் ஊடகப் பிரிவை தொடர்பு கொள்ள புதிய தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, 0112 887 973 என்ற புதிய தொலைபேசி இலக்கத்தின் ஊடாக, மிக வேகமாக செயற்படும் பொலிஸ் ஊடகப் பிரிவை இனிமேல் தொடர்புகொள்ள முடியும்.
பொலிஸ் ஊடகப் பிரிவு பத்தரமுல்ல சுஹுருபாய கட்டிடத்தின் 14வது மாடியில் நிறுவப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறைந்த தரத்தில் உள்ள பொலிஸ் அதிகாரிகளின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக அவசர வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
உப பொலிஸ் இன்ஸ்பெக்டர் பதவிக்கு கீழுள்ள அதிகாரிகள் பல்வேறு பிரச்சினைகளுக்கு உள்ளாகி வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால குறிப்பிட்டுள்ளார்.
இப்பிரச்சினைகள் தொடர்பில் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுடன் கலந்துரையாடி நிவர்த்திப்பதற்கான முறைமையைத் தயாரிக்கவுள்ளதாக அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
பொலிஸ் ஊடகப் பிரிவை தொடர்பு கொள்ள புதிய தொலைபேசி இலக்கம் அறிமுகம் பொலிஸ் ஊடகப் பிரிவை தொடர்பு கொள்ள புதிய தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இதன்படி, 0112 887 973 என்ற புதிய தொலைபேசி இலக்கத்தின் ஊடாக, மிக வேகமாக செயற்படும் பொலிஸ் ஊடகப் பிரிவை இனிமேல் தொடர்புகொள்ள முடியும்.பொலிஸ் ஊடகப் பிரிவு பத்தரமுல்ல சுஹுருபாய கட்டிடத்தின் 14வது மாடியில் நிறுவப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் குறைந்த தரத்தில் உள்ள பொலிஸ் அதிகாரிகளின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக அவசர வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.உப பொலிஸ் இன்ஸ்பெக்டர் பதவிக்கு கீழுள்ள அதிகாரிகள் பல்வேறு பிரச்சினைகளுக்கு உள்ளாகி வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால குறிப்பிட்டுள்ளார்.இப்பிரச்சினைகள் தொடர்பில் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுடன் கலந்துரையாடி நிவர்த்திப்பதற்கான முறைமையைத் தயாரிக்கவுள்ளதாக அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.