2025ஆம் ஆண்டினை வரவேற்கும் வகையில் நாடளாவிய ரீதியில் இன்று நள்ளிரவு பூஜைகளும் ஆராதனைகளும் நடைபெற்றன.
நல்லூர்
அந்தவகையில், வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் ஆங்கிலப் புத்தாண்டு தொடக்கத்தின் போது தீபங்கள் ஏற்றப்பட்டுள்ளன.
இன்று நள்ளிரவு 12 மணிக்கு இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இதன்போது, 2025ஆம் ஆண்டு பிறந்த நேரத்தில், நல்லூர் கந்தசுவாமி ஆலய தேரடியில் தீபங்கள் ஏற்றப்பட்டு புத்தாண்டு வரவேற்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி
இதேவேளை கிளிநொச்சி மாவட்டத்தின் பிரதான தேவாலயமான புனித திரேசாள் பேராலயத்தில் 2025ஆம் ஆண்டினை வரவேற்கும் வகையிலான நள்ளிரவு ஆராதனைகள் இரவு 11.30 மணிக்கு இடம்பெற்றன.
அத்துடன், புதுவருட நள்ளிரவு திருப்பலி ஆராதனை பூஜைவழிபாடுகள், கிளிநொச்சி 155ஆம் கட்டை புனித அந்தோனியார் ஆலயத்திலும் நடைபெற்றுள்ளன.
மட்டக்களப்பு
புதுவருட பிறப்பினை வரவேற்கும் வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் முதல் பேராலயமாக உள்ள மட்டக்களப்பு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
புனித மரியாள் பேராலய பங்குத்தந்தை அருட்தந்தை லெஸ்லி ஜெயகாந்தன் தலைமையில் விசேட கூட்டுத்திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
இதன்போது பொருளாதார நெருக்கடி மற்றும் இயற்கை அனர்த்தங்களிலிருந்து நாட்டு மக்களை பாதுகாக்கவும் நாட்டில் நீடித்த அமைதியும் மகிழ்ச்சியும் விசேட பிரார்த்தனையும் நடாத்தப்பட்டது.
இன்றைய புதுவருட ஆராதனையின்போது ஆலயத்தின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தது.
அத்துடன், மட்டக்களப்பு நகரின் காந்திபூங்கா மற்றும் மணிக்கூண்டு கோபுரம் என்பன புத்தாண்டினை வரவேற்கும் வகையில் மின்விளக்குகளினால் அலங்கரிக்கப்பட்டு நகர் ஒளிமயமாக காட்சியளித்தது.
இதனை கண்டு களிப்பதற்காகவும் நள்ளிரவு புதுவருட பிறப்பின் போது நடாத்தப்படும் வாணவேடிக்கையினை கண்டுகளிப்பதற்காகவும் ஆயிரக்கணக்கான மக்கள் நகரில் ஒன்றுகூடியிருந்தனர்.
எனினும் மக்கள் புதிய ஆண்டினை மகிழ்ச்சியுடன் வரவேற்கவேண்டும் என்பதற்காக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் பாதுகாப்பினை பலப்படுத்தியிருந்ததுடன் போக்குவரத்துகளை இலகுபடுத்தும் செயற்பாடுகளையும் முன்னெடுத்தனர்.
புதிய ஆண்டில் மகிழ்ச்சியான ஆண்டாக அமைய இதன்போது மக்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துகள் தெரிவித்துக்கொண்டதையும் காணமுடிந்தது.
இதேவேளை புத்தாண்டு பிறப்பை ஒட்டி தலைநகர் கொழும்பில் வான வேடிக்கைகள் நிகழ்த்தப்பட்டுள்ளது. இதன்போது, தலைநகர் முழுவதும் அலங்கார விளக்குகளால் மிளிர்ந்திருந்தது.
வான வேடிக்கைகளுடன் வரவேற்கப்பட்ட புத்தாண்டு - நாடளாவிய ரீதியில் விசேட நிகழ்வுகள் 2025ஆம் ஆண்டினை வரவேற்கும் வகையில் நாடளாவிய ரீதியில் இன்று நள்ளிரவு பூஜைகளும் ஆராதனைகளும் நடைபெற்றன.நல்லூர்அந்தவகையில், வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் ஆங்கிலப் புத்தாண்டு தொடக்கத்தின் போது தீபங்கள் ஏற்றப்பட்டுள்ளன. இன்று நள்ளிரவு 12 மணிக்கு இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இதன்போது, 2025ஆம் ஆண்டு பிறந்த நேரத்தில், நல்லூர் கந்தசுவாமி ஆலய தேரடியில் தீபங்கள் ஏற்றப்பட்டு புத்தாண்டு வரவேற்கப்பட்டுள்ளது. கிளிநொச்சிஇதேவேளை கிளிநொச்சி மாவட்டத்தின் பிரதான தேவாலயமான புனித திரேசாள் பேராலயத்தில் 2025ஆம் ஆண்டினை வரவேற்கும் வகையிலான நள்ளிரவு ஆராதனைகள் இரவு 11.30 மணிக்கு இடம்பெற்றன.அத்துடன், புதுவருட நள்ளிரவு திருப்பலி ஆராதனை பூஜைவழிபாடுகள், கிளிநொச்சி 155ஆம் கட்டை புனித அந்தோனியார் ஆலயத்திலும் நடைபெற்றுள்ளன. மட்டக்களப்புபுதுவருட பிறப்பினை வரவேற்கும் வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் முதல் பேராலயமாக உள்ள மட்டக்களப்பு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.புனித மரியாள் பேராலய பங்குத்தந்தை அருட்தந்தை லெஸ்லி ஜெயகாந்தன் தலைமையில் விசேட கூட்டுத்திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.இதன்போது பொருளாதார நெருக்கடி மற்றும் இயற்கை அனர்த்தங்களிலிருந்து நாட்டு மக்களை பாதுகாக்கவும் நாட்டில் நீடித்த அமைதியும் மகிழ்ச்சியும் விசேட பிரார்த்தனையும் நடாத்தப்பட்டது.இன்றைய புதுவருட ஆராதனையின்போது ஆலயத்தின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தது.அத்துடன், மட்டக்களப்பு நகரின் காந்திபூங்கா மற்றும் மணிக்கூண்டு கோபுரம் என்பன புத்தாண்டினை வரவேற்கும் வகையில் மின்விளக்குகளினால் அலங்கரிக்கப்பட்டு நகர் ஒளிமயமாக காட்சியளித்தது.இதனை கண்டு களிப்பதற்காகவும் நள்ளிரவு புதுவருட பிறப்பின் போது நடாத்தப்படும் வாணவேடிக்கையினை கண்டுகளிப்பதற்காகவும் ஆயிரக்கணக்கான மக்கள் நகரில் ஒன்றுகூடியிருந்தனர்.எனினும் மக்கள் புதிய ஆண்டினை மகிழ்ச்சியுடன் வரவேற்கவேண்டும் என்பதற்காக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் பாதுகாப்பினை பலப்படுத்தியிருந்ததுடன் போக்குவரத்துகளை இலகுபடுத்தும் செயற்பாடுகளையும் முன்னெடுத்தனர்.புதிய ஆண்டில் மகிழ்ச்சியான ஆண்டாக அமைய இதன்போது மக்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துகள் தெரிவித்துக்கொண்டதையும் காணமுடிந்தது.இதேவேளை புத்தாண்டு பிறப்பை ஒட்டி தலைநகர் கொழும்பில் வான வேடிக்கைகள் நிகழ்த்தப்பட்டுள்ளது. இதன்போது, தலைநகர் முழுவதும் அலங்கார விளக்குகளால் மிளிர்ந்திருந்தது.