• May 11 2024

இலங்கை வந்த சுற்றுலா பயணிகளுக்கான புத்தாண்டு விழா - பெருமளவானோர் பங்கேற்பு samugammedia

Chithra / Apr 16th 2023, 8:06 am
image

Advertisement

நாட்டிற்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு புத்தாண்டு தொடர்பான உள்ளூர் கலாசார பாரம்பரியங்களின் அனுபவங்களை வழங்கும் "புத்தாண்டு 2023" புத்தாண்டு விழா, தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் வழிகாட்டுதலின் கீழ் உனவடுன கடற்கரையில் (15) ஆரம்பமானது.

கண்ணை மூடிக்கொண்டு தொங்கும் பானை அடித்தல், யானையின் மீது கண் வைத்தல், கொழுந்து விட்டெறிதல், இளநீர் குடித்தல் போன்ற பல பாரம்பரிய புத்தாண்டு போட்டிகள் இதன்போது நடத்தப்பட்டன, மேலும் உள்ளூர் நடனங்கள் மற்றும் மேளம் முழங்க கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றன.

இலங்கைக்கு வருகை தரும் சிறுவர்களுக்காக கடற்கரையில் மணல் கோட்டை உருவாக்கும் போட்டியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சுற்றுலாப் பயணிகளுக்கு உள்ளூர் உணவைத் தயாரிக்கும் நேரடி அனுபவத்தை வழங்குவதற்காக, உள்ளூர் இனிப்புகளுடன் கூடிய கிராமிய சமையலறையும் புத்தாண்டு விழாவில் சேர்க்கப்பட்டது.

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு புத்தாண்டு அனுபவத்தை வழங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த புத்தாண்டு நிகழ்வுக்கு சுற்றுலா அமைச்சும் சுற்றுலா ஊக்குவிப்பு அதிகாரசபையும் அனுசரணை வழங்கியுள்ளன.


இலங்கை வந்த சுற்றுலா பயணிகளுக்கான புத்தாண்டு விழா - பெருமளவானோர் பங்கேற்பு samugammedia நாட்டிற்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு புத்தாண்டு தொடர்பான உள்ளூர் கலாசார பாரம்பரியங்களின் அனுபவங்களை வழங்கும் "புத்தாண்டு 2023" புத்தாண்டு விழா, தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் வழிகாட்டுதலின் கீழ் உனவடுன கடற்கரையில் (15) ஆரம்பமானது.கண்ணை மூடிக்கொண்டு தொங்கும் பானை அடித்தல், யானையின் மீது கண் வைத்தல், கொழுந்து விட்டெறிதல், இளநீர் குடித்தல் போன்ற பல பாரம்பரிய புத்தாண்டு போட்டிகள் இதன்போது நடத்தப்பட்டன, மேலும் உள்ளூர் நடனங்கள் மற்றும் மேளம் முழங்க கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றன.இலங்கைக்கு வருகை தரும் சிறுவர்களுக்காக கடற்கரையில் மணல் கோட்டை உருவாக்கும் போட்டியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.சுற்றுலாப் பயணிகளுக்கு உள்ளூர் உணவைத் தயாரிக்கும் நேரடி அனுபவத்தை வழங்குவதற்காக, உள்ளூர் இனிப்புகளுடன் கூடிய கிராமிய சமையலறையும் புத்தாண்டு விழாவில் சேர்க்கப்பட்டது.வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு புத்தாண்டு அனுபவத்தை வழங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த புத்தாண்டு நிகழ்வுக்கு சுற்றுலா அமைச்சும் சுற்றுலா ஊக்குவிப்பு அதிகாரசபையும் அனுசரணை வழங்கியுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement