2025 புத்தாண்டை முன்னிட்டு காலி முகத்துவாரத்தை அண்மித்த பகுதிகளில் நாளை (31) அமுல்படுத்தப்படவுள்ள விசேட போக்குவரத்து திட்டம் தொடர்பில் பொலிஸார் விசேட அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளனர்.
கொழும்பு நகருக்கு வெளியில் இருந்து புத்தாண்டை கொண்டாடுவதற்காக பெருந்தொகையான மக்களும் வாகனங்களும் நாளை காலி முகத்துவார பகுதிக்கு வரும் என எதிர்பார்க்கப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.
இதன் காரணமாக கொழும்பு நகரை மையமாகக் கொண்ட புறக்கோட்டை, கொம்பனித்தெரு, மருதானை, கொள்ளுப்பிட்டி, பம்பலப்பிட்டி, கறுவாத்தோட்டம் ஆகிய பொலிஸ் பிரிவுகளில் பாரிய வாகன நெரிசல் ஏற்படக்கூடும் என்பதால், அதற்காக விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, நாளை காலி மத்திய வீதியில் அமைந்துள்ள வாகன நிறுத்துமிடங்களில் வாகனங்களை நிறுத்த அனுமதிக்கப்படாது எனவும்,
அனைத்து வாகனங்களும் இலவச வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் தனியார் வாகன நிறுத்துமிடங்களுக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளன.
புத்தாண்டை முன்னிட்டு நாளை விசேட போக்குவரத்து திட்டம் 2025 புத்தாண்டை முன்னிட்டு காலி முகத்துவாரத்தை அண்மித்த பகுதிகளில் நாளை (31) அமுல்படுத்தப்படவுள்ள விசேட போக்குவரத்து திட்டம் தொடர்பில் பொலிஸார் விசேட அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளனர்.கொழும்பு நகருக்கு வெளியில் இருந்து புத்தாண்டை கொண்டாடுவதற்காக பெருந்தொகையான மக்களும் வாகனங்களும் நாளை காலி முகத்துவார பகுதிக்கு வரும் என எதிர்பார்க்கப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.இதன் காரணமாக கொழும்பு நகரை மையமாகக் கொண்ட புறக்கோட்டை, கொம்பனித்தெரு, மருதானை, கொள்ளுப்பிட்டி, பம்பலப்பிட்டி, கறுவாத்தோட்டம் ஆகிய பொலிஸ் பிரிவுகளில் பாரிய வாகன நெரிசல் ஏற்படக்கூடும் என்பதால், அதற்காக விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.அதன்படி, நாளை காலி மத்திய வீதியில் அமைந்துள்ள வாகன நிறுத்துமிடங்களில் வாகனங்களை நிறுத்த அனுமதிக்கப்படாது எனவும், அனைத்து வாகனங்களும் இலவச வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் தனியார் வாகன நிறுத்துமிடங்களுக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளன.