அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் பெய்துவரும் கனமழையால் நியூயோர்க் நகரின் பல பகுதிகள் வெள்ளத்தால் தத்தளித்து வருகின்றது.
நியூயோர்க்கில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக நகரம் முழுவதும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் அங்குள்ள பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. அத்துடன் வெள்ளப் பெருக்கினால் நெடுஞ்சாலைகளுடனான போக்குவரத்தும் முற்றாகத் தடைப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளப்பெருக்கால் ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பில் எந்தவித தகவல்களும் இதுவரை வெளியிடப்படவில்லை.
நியூயோர்க்கில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கட்டடங்கள், நிறுவனங்களுக்குள்ளும் வெள்ளம் பாய்ந்துள்ளது. நெடுஞ்சாலை வீதிகளிலும் கார் உள்ளிட்ட வாகனங்கள் முழுமையாக மூழ்கும் அளவிற்கு வெள்ளம் பெருக்கெடுத்துள்ளதை அவதானிக்க முடிகின்றது.
பலத்த மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை எதிர்கொள்ள முடியாமல் நியூயோர்க் நகரத்தின் பகுதிகளில் உள்ள மக்கள் பலர் பெரும் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளனர்.
மக்கள் பலர் அங்கும் இங்குமாக வாகனங்களை வீதியில் விட்டுவிட்டு அலங்கோலப்படுவதையும் அவதானிக்க முடிகின்றது.
வெள்ளத்தால் தத்தளிக்கும் நியூயோர்க் நகரம் அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் பெய்துவரும் கனமழையால் நியூயோர்க் நகரின் பல பகுதிகள் வெள்ளத்தால் தத்தளித்து வருகின்றது. நியூயோர்க்கில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக நகரம் முழுவதும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. அத்துடன் வெள்ளப் பெருக்கினால் நெடுஞ்சாலைகளுடனான போக்குவரத்தும் முற்றாகத் தடைப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கால் ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பில் எந்தவித தகவல்களும் இதுவரை வெளியிடப்படவில்லை.நியூயோர்க்கில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கட்டடங்கள், நிறுவனங்களுக்குள்ளும் வெள்ளம் பாய்ந்துள்ளது. நெடுஞ்சாலை வீதிகளிலும் கார் உள்ளிட்ட வாகனங்கள் முழுமையாக மூழ்கும் அளவிற்கு வெள்ளம் பெருக்கெடுத்துள்ளதை அவதானிக்க முடிகின்றது. பலத்த மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை எதிர்கொள்ள முடியாமல் நியூயோர்க் நகரத்தின் பகுதிகளில் உள்ள மக்கள் பலர் பெரும் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளனர். மக்கள் பலர் அங்கும் இங்குமாக வாகனங்களை வீதியில் விட்டுவிட்டு அலங்கோலப்படுவதையும் அவதானிக்க முடிகின்றது.