• Apr 04 2025

நிஹால் கலப்பத்தியை புதிய நாடாளுமன்ற சபாநாயகராக நியமிக்க திட்டம்?

Chithra / Nov 18th 2024, 1:37 pm
image

 

ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றத்திற்குத் தெரிவாகியுள்ள நிஹால் கலப்பத்தியை புதிய நாடாளுமன்ற சபாநாயகராக நியமிக்கத் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 

1994ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று நிஹால் கலப்பத்தி நாடாளுமன்றம் பிரவேசித்தார்.

இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் நிஹால் கலப்பத்தி 125,983 வாக்குகளைப் பெற்று அந்த மாவட்டத்திலிருந்து அதிகூடிய வாக்குகளைப் பெற்ற வேட்பாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

2024 நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி 159 ஆசனங்களைக் கைப்பற்றி பெரும்பான்மையைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


நிஹால் கலப்பத்தியை புதிய நாடாளுமன்ற சபாநாயகராக நியமிக்க திட்டம்  ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றத்திற்குத் தெரிவாகியுள்ள நிஹால் கலப்பத்தியை புதிய நாடாளுமன்ற சபாநாயகராக நியமிக்கத் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 1994ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று நிஹால் கலப்பத்தி நாடாளுமன்றம் பிரவேசித்தார்.இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் நிஹால் கலப்பத்தி 125,983 வாக்குகளைப் பெற்று அந்த மாவட்டத்திலிருந்து அதிகூடிய வாக்குகளைப் பெற்ற வேட்பாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.2024 நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி 159 ஆசனங்களைக் கைப்பற்றி பெரும்பான்மையைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement

Buy Now