இந்த ஆண்டில் இதுவரை 9 காட்டுத் தீ சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக வனப் பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கண்டி மாவட்டத்தில் 4 தீ விபத்துகளும், இரத்தினபுரியில் 2 தீ விபத்துகளும், மாத்தளை, பதுளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் ஒரு தீ விபத்தும் பதிவாகியுள்ளன.
பதுளை, கண்டி, நுவரெலியா, மாத்தளை, இரத்தினபுரி, மொனராகலை மற்றும் கேகாலை மாவட்டங்கள் அடிக்கடி தீ விபத்து ஏற்படும் மாவட்டங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக வனப் பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும், வெப்பமான காலநிலையினால் புல்வெளிகள், தோட்டங்கள் மற்றும் காடுகளில் தீ விபத்து ஏற்படுவது அதிகமாக உள்ளது.
காடுகளுக்கு அருகில் தீ வைப்பதைத் தவிர்க்குமாறு வனப் பாதுகாப்புத் திணைக்களம் பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.
இந்த ஆண்டில் இதுவரை 9 காட்டுத் தீ சம்பவங்கள் பதிவு இந்த ஆண்டில் இதுவரை 9 காட்டுத் தீ சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக வனப் பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது. கண்டி மாவட்டத்தில் 4 தீ விபத்துகளும், இரத்தினபுரியில் 2 தீ விபத்துகளும், மாத்தளை, பதுளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் ஒரு தீ விபத்தும் பதிவாகியுள்ளன. பதுளை, கண்டி, நுவரெலியா, மாத்தளை, இரத்தினபுரி, மொனராகலை மற்றும் கேகாலை மாவட்டங்கள் அடிக்கடி தீ விபத்து ஏற்படும் மாவட்டங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக வனப் பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும், வெப்பமான காலநிலையினால் புல்வெளிகள், தோட்டங்கள் மற்றும் காடுகளில் தீ விபத்து ஏற்படுவது அதிகமாக உள்ளது. காடுகளுக்கு அருகில் தீ வைப்பதைத் தவிர்க்குமாறு வனப் பாதுகாப்புத் திணைக்களம் பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.