• May 26 2026

யாருடனும் கூட்டணி இல்லை! தவெக தலைவர் விஜய் அதிரடி பேச்சு

Chithra / Mar 19th 2026, 7:38 am
image

அரசியலில் யாருக்காகவும், எதற்காகவும் எந்த ஒரு சமரசமும் வைத்துக்கொள்ளப் போவதில்லை என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்  தெரிவித்துள்ளார்.


தமிழக சட்டமன்றத் தேர்தலை (2026) முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் நடத்தப்பட்ட இஃப்தார் நோன்புத் திறப்பு நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்துகொண்டார்.


இதில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர், வேலூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து டி.வி.கே. கட்சியை சேர்ந்த இஸ்லாமியர்கள் தேர்தல் விதிமுறைகளுக்கு உட்பட்டு 1000 பேர் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டது. 


இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர் விஜய், இஸ்லாமிய நண்பர்களுடன் இணைந்து தொழுகையில் பங்கேற்றார். பின்னர் நோன்பு திறந்தார் 


அதன்பின் உரையாற்றிய அவர், 


அரசியலில் யாருக்காகவும், எதற்காகவும் எந்த ஒரு சமரசமும் வைத்துக்கொள்ளப் போவதில்லை. கொள்கையிலும், லட்சியத்திலும் உறுதியாக இருந்து மக்களுக்காகப் பணியாற்றுவதே எமது இலக்கு என்று குறிப்பிட்டார்.


தேர்தல் நெருங்கி வரும் வேளையில், ஏனைய கட்சிகளுடன் கூட்டணி அல்லது விட்டுக்கொடுத்தல் போன்ற பேச்சுக்களுக்கு இடமில்லை என்பதை உணர்த்தும் வகையில் அவரது இந்த உரை அமைந்திருந்தது.


தேர்தல் திருவிழா 2026-ஐ முன்னிட்டு விஜய்யின் இந்த 'சமரசம் இல்லை' என்ற முழக்கம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

யாருடனும் கூட்டணி இல்லை தவெக தலைவர் விஜய் அதிரடி பேச்சு அரசியலில் யாருக்காகவும், எதற்காகவும் எந்த ஒரு சமரசமும் வைத்துக்கொள்ளப் போவதில்லை என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்  தெரிவித்துள்ளார்.தமிழக சட்டமன்றத் தேர்தலை (2026) முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் நடத்தப்பட்ட இஃப்தார் நோன்புத் திறப்பு நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்துகொண்டார்.இதில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர், வேலூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து டி.வி.கே. கட்சியை சேர்ந்த இஸ்லாமியர்கள் தேர்தல் விதிமுறைகளுக்கு உட்பட்டு 1000 பேர் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர் விஜய், இஸ்லாமிய நண்பர்களுடன் இணைந்து தொழுகையில் பங்கேற்றார். பின்னர் நோன்பு திறந்தார் அதன்பின் உரையாற்றிய அவர், அரசியலில் யாருக்காகவும், எதற்காகவும் எந்த ஒரு சமரசமும் வைத்துக்கொள்ளப் போவதில்லை. கொள்கையிலும், லட்சியத்திலும் உறுதியாக இருந்து மக்களுக்காகப் பணியாற்றுவதே எமது இலக்கு என்று குறிப்பிட்டார்.தேர்தல் நெருங்கி வரும் வேளையில், ஏனைய கட்சிகளுடன் கூட்டணி அல்லது விட்டுக்கொடுத்தல் போன்ற பேச்சுக்களுக்கு இடமில்லை என்பதை உணர்த்தும் வகையில் அவரது இந்த உரை அமைந்திருந்தது.தேர்தல் திருவிழா 2026-ஐ முன்னிட்டு விஜய்யின் இந்த 'சமரசம் இல்லை' என்ற முழக்கம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement