• Sep 19 2024

உணவு இல்லை: மலையகத்தில் வீடுகளுக்குள் உறங்கும் மக்கள்..! இன்னும் நிலைமை மோசமாகும் என எச்சரித்த எம்.பி!SamugamMedia

Sharmi / Mar 18th 2023, 3:02 pm
image

Advertisement

உணவு பற்றாக்குறை காரணமாக மலையத்தில் வாழுகின்ற மக்கள் நாள் முழுவதும் வீடுகளுக்கு உறங்கிக்கொண்டிருப்பதாக ஐக்கிய மக்கள் கட்சியின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

தேர்தலை ஒத்திப்போடுவதனால் நாட்டின் நிலைமை இன்னும் மோசமடையும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாடு பயங்கரமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. சாப்பாடு இல்லாததால் நாள் பூராகவும் உறங்கும் மக்கள் மலையகத்தில் உள்ளார்கள் என்ற செய்தி வெளியாகியுள்ளது.
இந்த நாட்டை இவ்வாறான நிலையில் இருந்து காப்பாற்ற வேண்டும்.

அரசியல் ஸ்தீரத்தன்மை இல்லாவிட்டால் பொருளாதாரத்தைக் கட்டி எழுப்ப முடியாது. அதனால்தான் சர்வதேச நாணயத்தின் நிதி கிடைப்பது தாமதமாகின்றது.

இலங்கையில் பல வருடங்களாக பல நிறுவனங்கள் இலங்கையை விட்டுப் போவதற்கு முடிவெடுத்துள்ளன. தேர்தலை ஒத்திப்போட்டால் இந்த நிலைமை இன்னும் மோசமாகும்.
தேர்தலை நடத்தி மக்கள் அவர்கள் விரும்பும் ஆட்சியை நிறுவுவதற்கு இடம் கொடுக்க வேண்டும். தேர்தலை ஒத்திப்போட முடியாது. அதனால் அரசு உள்ளூராட்சி தேர்தல் சட்டத்துக்குத் திருத்தத்தைக் கொண்டு வருவதற்கு முயற்சி செய்வதாக அசோக அபேசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.


உணவு இல்லை: மலையகத்தில் வீடுகளுக்குள் உறங்கும் மக்கள். இன்னும் நிலைமை மோசமாகும் என எச்சரித்த எம்.பிSamugamMedia உணவு பற்றாக்குறை காரணமாக மலையத்தில் வாழுகின்ற மக்கள் நாள் முழுவதும் வீடுகளுக்கு உறங்கிக்கொண்டிருப்பதாக ஐக்கிய மக்கள் கட்சியின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.தேர்தலை ஒத்திப்போடுவதனால் நாட்டின் நிலைமை இன்னும் மோசமடையும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.நாடு பயங்கரமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. சாப்பாடு இல்லாததால் நாள் பூராகவும் உறங்கும் மக்கள் மலையகத்தில் உள்ளார்கள் என்ற செய்தி வெளியாகியுள்ளது.இந்த நாட்டை இவ்வாறான நிலையில் இருந்து காப்பாற்ற வேண்டும்.அரசியல் ஸ்தீரத்தன்மை இல்லாவிட்டால் பொருளாதாரத்தைக் கட்டி எழுப்ப முடியாது. அதனால்தான் சர்வதேச நாணயத்தின் நிதி கிடைப்பது தாமதமாகின்றது.இலங்கையில் பல வருடங்களாக பல நிறுவனங்கள் இலங்கையை விட்டுப் போவதற்கு முடிவெடுத்துள்ளன. தேர்தலை ஒத்திப்போட்டால் இந்த நிலைமை இன்னும் மோசமாகும்.தேர்தலை நடத்தி மக்கள் அவர்கள் விரும்பும் ஆட்சியை நிறுவுவதற்கு இடம் கொடுக்க வேண்டும். தேர்தலை ஒத்திப்போட முடியாது. அதனால் அரசு உள்ளூராட்சி தேர்தல் சட்டத்துக்குத் திருத்தத்தைக் கொண்டு வருவதற்கு முயற்சி செய்வதாக அசோக அபேசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement