• May 19 2024

இலங்கை நீதித்துறையின் சுயாதீனத்தை பாதுகாக்க வேண்டும்! இங்கிலாந்து சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை SamugamMedia

Chithra / Mar 18th 2023, 2:58 pm
image

Advertisement


இலங்கையின் ஆட்சியாளர்கள் நீதித்துறையின் சுயாதீன தன்மையை மதிக்க வேண்டும் என இங்கிலாந்து வேல்சின் சட்டத்தரணிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

உள்ளுராட்சி தேர்தலுக்கான நிதியை வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை தொடர்ந்து நீதிபதிகள் நாடாளுமன்ற குழுவின் முன்னிலையில் ஆஜராக வேண்டும் என கோரிக்கைகள் வெளியாகியுள்ள நிலையிலேயே இங்கிலாந்தின் சட்டத்தரணிகள் சங்கம் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது.

தேர்தலுக்கான நிதி நாடாளுமன்றத்தின் மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையிலும், இதுவரை நிதி விடுவிக்கப்படவில்லை எனவும் அந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

நீதித்துறையின் சுதந்திரத்தை மதிப்பதும் கண்காணிப்பதும் அரசாங்கத்தினதும் ஏனைய ஸ்தாபனங்களினதும் கடமை என நீதித்துறையின் சுயாதீன தன்மை குறித்த ஐநாவின் அடிப்படை கொள்கைகள் தெரிவிக்கின்றன எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக நீதித்துறை செயற்பாடுகளின் தேவையற்ற பொருத்தமற்ற தலையீடுகள் இருக்ககூடாது நீதித்துறையின் தீர்மானங்களை மாற்றமுடியாது எனவும் ஐ.நா. தெரிவித்துள்ளது என இங்கிலாந்தின் சட்டத்தரணிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இலங்கை நீதித்துறையின் சுயாதீனத்தை பாதுகாக்க வேண்டும் இங்கிலாந்து சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை SamugamMedia இலங்கையின் ஆட்சியாளர்கள் நீதித்துறையின் சுயாதீன தன்மையை மதிக்க வேண்டும் என இங்கிலாந்து வேல்சின் சட்டத்தரணிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.உள்ளுராட்சி தேர்தலுக்கான நிதியை வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை தொடர்ந்து நீதிபதிகள் நாடாளுமன்ற குழுவின் முன்னிலையில் ஆஜராக வேண்டும் என கோரிக்கைகள் வெளியாகியுள்ள நிலையிலேயே இங்கிலாந்தின் சட்டத்தரணிகள் சங்கம் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது.தேர்தலுக்கான நிதி நாடாளுமன்றத்தின் மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையிலும், இதுவரை நிதி விடுவிக்கப்படவில்லை எனவும் அந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.நீதித்துறையின் சுதந்திரத்தை மதிப்பதும் கண்காணிப்பதும் அரசாங்கத்தினதும் ஏனைய ஸ்தாபனங்களினதும் கடமை என நீதித்துறையின் சுயாதீன தன்மை குறித்த ஐநாவின் அடிப்படை கொள்கைகள் தெரிவிக்கின்றன எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.இதன் காரணமாக நீதித்துறை செயற்பாடுகளின் தேவையற்ற பொருத்தமற்ற தலையீடுகள் இருக்ககூடாது நீதித்துறையின் தீர்மானங்களை மாற்றமுடியாது எனவும் ஐ.நா. தெரிவித்துள்ளது என இங்கிலாந்தின் சட்டத்தரணிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement