• Jan 16 2025

இலங்கை இந்திய மீனவர் விவகாரத்தில் இனிமேல் பேச்சுவார்த்தை இல்லை - கடற்றொழில் அமைச்சர் கருத்து!

Chithra / Dec 27th 2024, 4:22 pm
image


இலங்கை - இந்திய மீனவர்களுக்கு இடையே இனிமேல் எந்தவிதமான பேச்சுவார்த்தைகளும் இடம்பெறாது என கடற்றொழில் இ.சந்திரசேகரன் அமைச்சர் இன்றையதினம் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றின் பின்னர் ஊடகவியலாளர் ஒருவர், 

"ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க  இந்தியாவுக்கு விஜயத்தினை மேற்கொண்டபோது இலங்கை - இந்திய மீனவர்களிடையே ஒரு மனிதாபிமானமான தீர்மானம் எட்டப்பட வேண்டும் என்று கூறப்பட்டது. 

அந்த தீர்மானத்துக்கான கலந்துரையாடல் எப்போது எங்கிருந்து ஆரம்பிக்கப்படும்?" என கேள்வி எழுப்பியவேளை அதற்கு பதிலளித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

பேச்சுவார்த்தை எல்லாம் முடிந்துவிட்டது. இனி பேச்சுவார்த்தை எதுவும் இல்லை.

மீன்பிடி அமைச்சில் இருக்கின்ற அதிகாரிகளும் இந்தியாவில் இருக்கின்ற அதிகாரிகளுக்குமிடையே பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன. அந்த பேச்சுவார்த்தைகள் தொடரும்.

அதில் தொழில்நுட்ப ரீதியான பிரச்சனைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் பேசப்படுகின்றது.

மனிதாபிமான உதவிகளை வாங்குவதோ கொடுப்பதோ தொடர்பாக ஒரு பேச்சுவார்த்தைக்கு நாங்கள் செல்லப்போவதில்லை. இதுதான் எங்களது மனிதாபிமான நடவடிக்கை என நாங்கள் கூறுகின்றோம் - என்றார்.

இலங்கை இந்திய மீனவர் விவகாரத்தில் இனிமேல் பேச்சுவார்த்தை இல்லை - கடற்றொழில் அமைச்சர் கருத்து இலங்கை - இந்திய மீனவர்களுக்கு இடையே இனிமேல் எந்தவிதமான பேச்சுவார்த்தைகளும் இடம்பெறாது என கடற்றொழில் இ.சந்திரசேகரன் அமைச்சர் இன்றையதினம் தெரிவித்தார்.யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றின் பின்னர் ஊடகவியலாளர் ஒருவர், "ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க  இந்தியாவுக்கு விஜயத்தினை மேற்கொண்டபோது இலங்கை - இந்திய மீனவர்களிடையே ஒரு மனிதாபிமானமான தீர்மானம் எட்டப்பட வேண்டும் என்று கூறப்பட்டது. அந்த தீர்மானத்துக்கான கலந்துரையாடல் எப்போது எங்கிருந்து ஆரம்பிக்கப்படும்" என கேள்வி எழுப்பியவேளை அதற்கு பதிலளித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,பேச்சுவார்த்தை எல்லாம் முடிந்துவிட்டது. இனி பேச்சுவார்த்தை எதுவும் இல்லை.மீன்பிடி அமைச்சில் இருக்கின்ற அதிகாரிகளும் இந்தியாவில் இருக்கின்ற அதிகாரிகளுக்குமிடையே பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன. அந்த பேச்சுவார்த்தைகள் தொடரும்.அதில் தொழில்நுட்ப ரீதியான பிரச்சனைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் பேசப்படுகின்றது.மனிதாபிமான உதவிகளை வாங்குவதோ கொடுப்பதோ தொடர்பாக ஒரு பேச்சுவார்த்தைக்கு நாங்கள் செல்லப்போவதில்லை. இதுதான் எங்களது மனிதாபிமான நடவடிக்கை என நாங்கள் கூறுகின்றோம் - என்றார்.

Advertisement

Advertisement

Advertisement