• Nov 23 2024

உக்ரைனில் வெற்றியைப் பெறுவதற்கு அணு ஆயுதங்களைப் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை- புடின் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

Tamil nila / Jun 8th 2024, 7:50 pm
image

உக்ரைனில் வெற்றியைப் பெறுவதற்கு அணு ஆயுதங்களைப் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஐரோப்பாவில் அணு ஆயுதப் போர்கள் எதுவும் வெடிக்கவில்லை.

ரஷ்ய - உக்ரைன் போர் அணுவாயுதப் போராக மாறாது என்பதற்கான கிரெம்ளினின் சமிக்ஞையாக புடினின் இந்த அறிவிப்பு இருக்கலாம் என சர்வதேச அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

மேற்கத்தேய நாடுகள் மற்றும் அமெரிக்காவின் வலுவான தலையீடுகள் உக்ரைனில் அதிகரித்தால் மாத்திரமே ரஷ்யா அணுவாயுதம் பற்றி சிந்திக்கும் என்பது இவர்களது கருத்தாக உள்ளது.

2022ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் புடின் உக்ரைனுக்குள் துருப்புக்களை அனுப்பியதில் இருந்து ரஷ்யா, தன்னைத் தற்காத்துக் கொள்ள தேவைப்பட்டால் அணுவாயுதங்களை பயன்படுத்தும் என்று பல சந்தர்ப்பங்களில் கூறியிருக்கிறார்.

செயின்ட் பீட்டர்ஸ்பர்க் சர்வதேச பொருளாதார மன்றத்தின் அமர்வில் உரையாற்றிய ரஷ்யாவின் ஆய்வாளரான செர்ஜி கரகானோவ், உக்ரைன் மீது மேற்கத்திய நாடுகளின் ஆதிக்கம் செலுத்தாதவரை ரஷ்யா அணுவாயு பயன்பாடு குறித்து சிந்திக்காதிருக்கும் என கூறினார்.

"ரஷ்யாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் அணுவாயுதத்தை பயன்படுத்த முடியும். அப்படியொரு நிலைமை வந்ததாக நான் நினைக்கவில்லை. அத்தகைய தேவை இல்லை" என்று புடின் கூறியுள்ளார்.

2014 இல் உக்ரைனிடம் இருந்து கைப்பற்றிய கிரிமியாவை மொஸ்கோ அதன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. மேலும் நான்கு உக்ரேனியப் பகுதிகளை இப்போது ரஷ்யாவின் ஒருங்கிணைந்த சொந்தப் பகுதிகளாகக் கருதுகிறது.

கெய்வ் அவற்றை மீட்டெடுக்க மேற்கத்தேய நாகளுடன் கைகோர்த்துச் செயல்பட்டால் அணுசக்தித் தாக்குதலுக்கான சாத்தியம் இருக்கும் என எதிர்வுக்கூறல்கள் உள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.


உக்ரைனில் வெற்றியைப் பெறுவதற்கு அணு ஆயுதங்களைப் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை- புடின் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு உக்ரைனில் வெற்றியைப் பெறுவதற்கு அணு ஆயுதங்களைப் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஐரோப்பாவில் அணு ஆயுதப் போர்கள் எதுவும் வெடிக்கவில்லை.ரஷ்ய - உக்ரைன் போர் அணுவாயுதப் போராக மாறாது என்பதற்கான கிரெம்ளினின் சமிக்ஞையாக புடினின் இந்த அறிவிப்பு இருக்கலாம் என சர்வதேச அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.மேற்கத்தேய நாடுகள் மற்றும் அமெரிக்காவின் வலுவான தலையீடுகள் உக்ரைனில் அதிகரித்தால் மாத்திரமே ரஷ்யா அணுவாயுதம் பற்றி சிந்திக்கும் என்பது இவர்களது கருத்தாக உள்ளது.2022ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் புடின் உக்ரைனுக்குள் துருப்புக்களை அனுப்பியதில் இருந்து ரஷ்யா, தன்னைத் தற்காத்துக் கொள்ள தேவைப்பட்டால் அணுவாயுதங்களை பயன்படுத்தும் என்று பல சந்தர்ப்பங்களில் கூறியிருக்கிறார்.செயின்ட் பீட்டர்ஸ்பர்க் சர்வதேச பொருளாதார மன்றத்தின் அமர்வில் உரையாற்றிய ரஷ்யாவின் ஆய்வாளரான செர்ஜி கரகானோவ், உக்ரைன் மீது மேற்கத்திய நாடுகளின் ஆதிக்கம் செலுத்தாதவரை ரஷ்யா அணுவாயு பயன்பாடு குறித்து சிந்திக்காதிருக்கும் என கூறினார்."ரஷ்யாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் அணுவாயுதத்தை பயன்படுத்த முடியும். அப்படியொரு நிலைமை வந்ததாக நான் நினைக்கவில்லை. அத்தகைய தேவை இல்லை" என்று புடின் கூறியுள்ளார்.2014 இல் உக்ரைனிடம் இருந்து கைப்பற்றிய கிரிமியாவை மொஸ்கோ அதன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. மேலும் நான்கு உக்ரேனியப் பகுதிகளை இப்போது ரஷ்யாவின் ஒருங்கிணைந்த சொந்தப் பகுதிகளாகக் கருதுகிறது.கெய்வ் அவற்றை மீட்டெடுக்க மேற்கத்தேய நாகளுடன் கைகோர்த்துச் செயல்பட்டால் அணுசக்தித் தாக்குதலுக்கான சாத்தியம் இருக்கும் என எதிர்வுக்கூறல்கள் உள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement