வவுனியா சிறைச்சாலையில் எவரும் உணவு தவிர்ப்பில் ஈடுபடவில்லை என சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் காமினி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா வடக்கு வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் கடந்த சிவராத்திரி தினத்தன்று வழிபாடுகளில் ஈடுபட்ட வேளை ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு தற்போது வவுனியா சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தமக்கு நீதி வழங்குமாறு கோரி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களில் ஐவர் உணவு தவிர்ப்பில் ஈடுபட்டுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் பாராளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் நேற்றையதினம்(13) தெரிவித்திருந்தார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர்,
சுகயீனம் காரணமாக அவர்கள் காலை உணவினை உட்கொள்ளவில்லை என்பதுடன் தற்போது உணவு உட்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.
வவுனியா சிறைச்சாலையில் எவரும் உணவு தவிர்ப்பில் ஈடுபடவில்லை. சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் விளக்கம். வவுனியா சிறைச்சாலையில் எவரும் உணவு தவிர்ப்பில் ஈடுபடவில்லை என சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் காமினி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,வவுனியா வடக்கு வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் கடந்த சிவராத்திரி தினத்தன்று வழிபாடுகளில் ஈடுபட்ட வேளை ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு தற்போது வவுனியா சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில் தமக்கு நீதி வழங்குமாறு கோரி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களில் ஐவர் உணவு தவிர்ப்பில் ஈடுபட்டுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் பாராளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் நேற்றையதினம்(13) தெரிவித்திருந்தார்.இது தொடர்பில் கருத்து தெரிவித்த சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர்,சுகயீனம் காரணமாக அவர்கள் காலை உணவினை உட்கொள்ளவில்லை என்பதுடன் தற்போது உணவு உட்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.