• Nov 24 2024

பயிற்சிக் கருத்தரங்குகள் வேண்டாம் செயலில் இறங்குங்கள் - வடக்கு ஆளுநர் ஆலோசனை..!samugammedia

Tharun / Feb 3rd 2024, 12:59 pm
image

எதிர்வரும் காலங்களில் பயிற்சிக் கருத்தரங்குகளைத் தவிர்த்து, இதுவரை வழங்கப்பட்ட பயிற்சிகளைக் கொண்டு செயற்றிட்டங்களை உடன் நடைமுறைப்படுத்துங்கள் என்று வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் துறைசார் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

வடக்கு மாகாணத்தில் செயற்படும் உள்ளூர் மற்றும் சர்வதேச அரச சார்பற்ற தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள், வடக்கு மாகாணத்திலுள்ள அமைச்சுகளின் செயலாளர்கள் ஆகியோருடனான சந்திப்பு கடந்த புதன்கிழமை இடம்பெற்றது.  இதன் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

இதன் பொது அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கு மாகாணத்தில் இதுவரை வழங்கப்பட்ட பயிற்சி செயற்றிட்டங்களினூடாக முதலீடு களில்வருமானத்தை ஈட்டிக்கொள்ளும் வழிமுறைகளை திட்டமிடல்வேண்டும். பாடசாலை இடைவிலகளைத் தடுப்பதற்கான நடவடிக்கையாக 'மீண்டும் பாடசாலைக்குச் செல்லல்' திட்டத்தை நடைமுறைப்படுத்துங்கள். பின்தங்கிய பிரதேச சபைகளுக்கு வருமானங்களைப் பெற்றுக்கொள்ளும் செயற்றிட்டங்களை முன்மொழியுங்கள். விவசாய உற்பத்திகள் தொடர்பில் அதிக கவனம் செலுத்துவதோடு, புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதற்கு ஊக்கப்படுத்துங்கள். இந்த முன்மொழிவுகளை ஒரு மாதத்துக்குள் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு ஆளுநர் பணித்தார்.

பயிற்சிக் கருத்தரங்குகள் வேண்டாம் செயலில் இறங்குங்கள் - வடக்கு ஆளுநர் ஆலோசனை.samugammedia எதிர்வரும் காலங்களில் பயிற்சிக் கருத்தரங்குகளைத் தவிர்த்து, இதுவரை வழங்கப்பட்ட பயிற்சிகளைக் கொண்டு செயற்றிட்டங்களை உடன் நடைமுறைப்படுத்துங்கள் என்று வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் துறைசார் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.வடக்கு மாகாணத்தில் செயற்படும் உள்ளூர் மற்றும் சர்வதேச அரச சார்பற்ற தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள், வடக்கு மாகாணத்திலுள்ள அமைச்சுகளின் செயலாளர்கள் ஆகியோருடனான சந்திப்பு கடந்த புதன்கிழமை இடம்பெற்றது.  இதன் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன் பொது அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கு மாகாணத்தில் இதுவரை வழங்கப்பட்ட பயிற்சி செயற்றிட்டங்களினூடாக முதலீடு களில்வருமானத்தை ஈட்டிக்கொள்ளும் வழிமுறைகளை திட்டமிடல்வேண்டும். பாடசாலை இடைவிலகளைத் தடுப்பதற்கான நடவடிக்கையாக 'மீண்டும் பாடசாலைக்குச் செல்லல்' திட்டத்தை நடைமுறைப்படுத்துங்கள். பின்தங்கிய பிரதேச சபைகளுக்கு வருமானங்களைப் பெற்றுக்கொள்ளும் செயற்றிட்டங்களை முன்மொழியுங்கள். விவசாய உற்பத்திகள் தொடர்பில் அதிக கவனம் செலுத்துவதோடு, புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதற்கு ஊக்கப்படுத்துங்கள். இந்த முன்மொழிவுகளை ஒரு மாதத்துக்குள் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு ஆளுநர் பணித்தார்.

Advertisement

Advertisement

Advertisement