முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு தமது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறுவதற்கான எழுத்துப்பூர்வ அறிவிப்பு விடுக்கப்படாது எனவும், அதற்காக ஒரு சட்டத்தை கொண்டுவருவதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சட்டத்தரணி சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.
க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்துடன் தொடர்புடைய நிகழ்வொன்றில் கலந்துகொண்டதன் பின்னர்
கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது மஹிந்த ராஜபக்ஷவுக்கு குறித்த இல்லத்திலிருந்து வெளியேறுவதற்கு போதிய அவகாசம் உள்ளது.
எதிர்வரும் காலங்களில் நாடாளுமன்றத்தில் விசேட சட்டமூலமொன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது.
அந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டு சட்டமாக அமுலாகும் பட்சத்தில் குறித்த சட்டத்துக்கு உட்பட்டு மஹிந்த ராஜபக்ஷவுக்கு குறித்த இல்லத்திலிருந்து வெளியேற வேண்டியேற்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சட்டத்தரணி சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷ இல்லத்திலிருந்து வெளியேற எழுத்து மூலம் அறிவிக்கப்படாது - பிரதி அமைச்சர் சுனில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு தமது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறுவதற்கான எழுத்துப்பூர்வ அறிவிப்பு விடுக்கப்படாது எனவும், அதற்காக ஒரு சட்டத்தை கொண்டுவருவதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சட்டத்தரணி சுனில் வட்டகல தெரிவித்துள்ளார். க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்துடன் தொடர்புடைய நிகழ்வொன்றில் கலந்துகொண்டதன் பின்னர் கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தற்போது மஹிந்த ராஜபக்ஷவுக்கு குறித்த இல்லத்திலிருந்து வெளியேறுவதற்கு போதிய அவகாசம் உள்ளது. எதிர்வரும் காலங்களில் நாடாளுமன்றத்தில் விசேட சட்டமூலமொன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது. அந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டு சட்டமாக அமுலாகும் பட்சத்தில் குறித்த சட்டத்துக்கு உட்பட்டு மஹிந்த ராஜபக்ஷவுக்கு குறித்த இல்லத்திலிருந்து வெளியேற வேண்டியேற்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சட்டத்தரணி சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.