இலங்கை கடல் படை சிப்பாயின் உயிர் பிரிவுக்கு ரணில் தலைமையான அரசே பொறுப்பேற்க வேண்டும் என அகில இலங்கை மீனவர் மக்கள் தொழிற்சங்க வடமாகாண இணைப்பாளர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்துள்ளார்.இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ள ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நேற்றைய தினம் இலங்கை கடற்படை வீரர் உயிரிழந்துள்ளார். இந்த உயிரிழப்புக்கு இலங்கை மற்றும் இந்தியா ஆகிய இருநாட்டு அரசாங்கங்கள் தான் பொறுப்பேற்க வேண்டும். அதிலும் குறிப்பாக இலங்கை அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும். ஏனெனில் இந்த இலங்கை இந்திய மீனவர் பிரச்சனை தொடர்பாக 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவுற்றதன் பிற்பாடு தொடர்ந்து வடக்கு கடல் தொழிலாளர்கள் தங்களினுடைய பிரச்சினையை வலியுறுத்தி வந்தாலும் கூட 22,23,24 ஆம் ஆண்டுகளிலே குறிப்பாக 23 ஆம் ஆண்டு பாரதப்பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதத்தை அனுப்பி இருக்கின்றோம். ரணில் விக்கிரம சிங்கவுக்கு கடிதம் அனுப்பியிருக்கின்றோம். தமிழக முதலமைச்சர் ஸ்தாலினுக்கும் கடிதம் அனுப்பியிருக்கின்றோம்.
ஒவ்வொரு உயிரும் பெறுமதியானது. இந்த கடல் தொழிலாளர்கள் வன்முறையையோ, உயிர் பிரிவதையோ விரும்பவில்லை. இராஜதந்திர ரீதியிலே இதற்குரிய பேச்சு வார்த்தையை வலியுறுத்தி வந்தாலும் கூட 2016 ஆம் ஆண்டு 11 ஆம் மாதம் 5 ஆம் திகதி டில்லியில் எட்டப்பட்ட தீர்மானத்தை இலங்கை அரசாங்கமும் இந்திய அரசாங்கமும் நடைமுறைப்படுத்தாதான் விளைவாகத்தான் குறித்த கடற்படை சிப்பாயின் உயிர் பிரிந்திருக்கின்றது. இதற்கு காரணம் இலங்கை அரசாங்கங்கள் வடக்கு கடல் தொழிலாளர்கள் மீதும் கடல் மீதும் எங்கள் மீதும் அக்கறை இல்லாமல் அசண்டையீனமாக இராஜதந்திர ரீதியான செயல்பாடுகள் நடைபெற்றதன் காரணமாகத்தான் இந்த உயிர் பிரிந்திருக்கின்றது.
உதாரணமாக 2016 ஆம் ஆண்டு இணங்கப்பட்ட உடன்பாட்டில் இரண்டு நாட்டு வெளி விவகார அமைச்சர் (இலங்கையின் மறைந்த வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவும் , இந்திய வெளி விவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜும்) கடலோர காவல் படையும் கடல் படையும் கூட்டு ரோந்து மேற்கொள்ள வேண்டும் என்று அந்த இணக்கப்பாட்டிலே தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இதில் எடுக்கப்பட்ட எந்த ஒரு இராஜ தந்திர நடவடிக்கையையும் இலங்கை அரசாங்கமும் சரி கடல் தொழில் அமைச்சும் சரி இராஜ தந்திர நடவடிக்கை ஊடாக எதையுமே செய்ய வில்லை. வெறுமனவே மக்கள் கடிதங்களை எழுதுவதும் ஜனநாயக ரீதியில் போராடுவதும் எங்களுடைய குரல் வளையை கேட்காது எங்களினுடைய ஜனநாயக போராட்டத்தை இலங்கை அரசாங்கம் நசுக்கி வருகிறது.
அதன் விளைவாகத்தான் இந்த உயிர் பிரிந்திருக்கின்றது. ரணில் விக்கிரம சிங்க தலைமையிலான அரசாங்கம் இந்த கடற்படை சிப்பாயின் உயிர் பிரிந்ததற்கு பொறுப்பேற்க வேண்டும்- என அவர் தெரிவித்துள்ளார்.
டில்லித் தீர்மானத்தை நடைமுறைப்படுத்தாததன் விளைவே கடற்படை சிப்பாயின் உயிரிழப்புக்கு காரணம் - மீனவர்கள் சுட்டிக்காட்டு. இலங்கை கடல் படை சிப்பாயின் உயிர் பிரிவுக்கு ரணில் தலைமையான அரசே பொறுப்பேற்க வேண்டும் என அகில இலங்கை மீனவர் மக்கள் தொழிற்சங்க வடமாகாண இணைப்பாளர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்துள்ளார். இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ள ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நேற்றைய தினம் இலங்கை கடற்படை வீரர் உயிரிழந்துள்ளார். இந்த உயிரிழப்புக்கு இலங்கை மற்றும் இந்தியா ஆகிய இருநாட்டு அரசாங்கங்கள் தான் பொறுப்பேற்க வேண்டும். அதிலும் குறிப்பாக இலங்கை அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும். ஏனெனில் இந்த இலங்கை இந்திய மீனவர் பிரச்சனை தொடர்பாக 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவுற்றதன் பிற்பாடு தொடர்ந்து வடக்கு கடல் தொழிலாளர்கள் தங்களினுடைய பிரச்சினையை வலியுறுத்தி வந்தாலும் கூட 22,23,24 ஆம் ஆண்டுகளிலே குறிப்பாக 23 ஆம் ஆண்டு பாரதப்பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதத்தை அனுப்பி இருக்கின்றோம். ரணில் விக்கிரம சிங்கவுக்கு கடிதம் அனுப்பியிருக்கின்றோம். தமிழக முதலமைச்சர் ஸ்தாலினுக்கும் கடிதம் அனுப்பியிருக்கின்றோம்.ஒவ்வொரு உயிரும் பெறுமதியானது. இந்த கடல் தொழிலாளர்கள் வன்முறையையோ, உயிர் பிரிவதையோ விரும்பவில்லை. இராஜதந்திர ரீதியிலே இதற்குரிய பேச்சு வார்த்தையை வலியுறுத்தி வந்தாலும் கூட 2016 ஆம் ஆண்டு 11 ஆம் மாதம் 5 ஆம் திகதி டில்லியில் எட்டப்பட்ட தீர்மானத்தை இலங்கை அரசாங்கமும் இந்திய அரசாங்கமும் நடைமுறைப்படுத்தாதான் விளைவாகத்தான் குறித்த கடற்படை சிப்பாயின் உயிர் பிரிந்திருக்கின்றது. இதற்கு காரணம் இலங்கை அரசாங்கங்கள் வடக்கு கடல் தொழிலாளர்கள் மீதும் கடல் மீதும் எங்கள் மீதும் அக்கறை இல்லாமல் அசண்டையீனமாக இராஜதந்திர ரீதியான செயல்பாடுகள் நடைபெற்றதன் காரணமாகத்தான் இந்த உயிர் பிரிந்திருக்கின்றது. உதாரணமாக 2016 ஆம் ஆண்டு இணங்கப்பட்ட உடன்பாட்டில் இரண்டு நாட்டு வெளி விவகார அமைச்சர் (இலங்கையின் மறைந்த வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவும் , இந்திய வெளி விவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜும்) கடலோர காவல் படையும் கடல் படையும் கூட்டு ரோந்து மேற்கொள்ள வேண்டும் என்று அந்த இணக்கப்பாட்டிலே தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இதில் எடுக்கப்பட்ட எந்த ஒரு இராஜ தந்திர நடவடிக்கையையும் இலங்கை அரசாங்கமும் சரி கடல் தொழில் அமைச்சும் சரி இராஜ தந்திர நடவடிக்கை ஊடாக எதையுமே செய்ய வில்லை. வெறுமனவே மக்கள் கடிதங்களை எழுதுவதும் ஜனநாயக ரீதியில் போராடுவதும் எங்களுடைய குரல் வளையை கேட்காது எங்களினுடைய ஜனநாயக போராட்டத்தை இலங்கை அரசாங்கம் நசுக்கி வருகிறது. அதன் விளைவாகத்தான் இந்த உயிர் பிரிந்திருக்கின்றது. ரணில் விக்கிரம சிங்க தலைமையிலான அரசாங்கம் இந்த கடற்படை சிப்பாயின் உயிர் பிரிந்ததற்கு பொறுப்பேற்க வேண்டும்- என அவர் தெரிவித்துள்ளார்.