• Nov 24 2024

பூநகரியில் இடம்பெற்ற வடமாகாண கடற்றொழிலாளர் இணைய பொதுக் கூட்டம்

Sharmi / Aug 3rd 2024, 7:55 pm
image

வட மாகாண கடற்றொழிலாளர் இணைய கூட்டம் இணைய தலைவர் ஏன்.வீ.சுப்பிரமணியம் தலைமையில்  இன்றையதினம்(03) காலை 11:30 மணியளவில் பூநகரி கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச மண்டபத்தில் இடம் பெற்றது.

இதில் முதல் நிகழ்வாக மங்கள விளக்கு ஏற்றப்பட்டது.

மங்கள சுடர்களை தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்க அமைப்பாளர் கேர்மன் குமார, இணைய தலைவர் ஏன்.வீ.சுப்பிரமணியம், யாழ் மாவட்ட தலைவர் இ.முரளிதரன், உட்பட பலரும் ஏற்றினர்.

அதனை தொடர்ந்து வரவேற்பு நடனம் வரவேற்பு உரை என்பன இடம் பெற்று மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆரயப்பட்டது.

இதில் வட மாகாண கடற்றொழிலாளர் இணையத்தை பிரதிநித்துவப்படுத்தும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி,  முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களின் பிரதிநிதிகள், தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்க அமைப்பாளர் கேர்மன் கமார, அதன் பிரதிநிதி செல்வி சுபாஜினி, மற்றும் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்க வடக்கு மாணாகத்தின் ஐந்து மாவட்டங்களின் இணைப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் மீனவர் நலன்சார்ந்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.



பூநகரியில் இடம்பெற்ற வடமாகாண கடற்றொழிலாளர் இணைய பொதுக் கூட்டம் வட மாகாண கடற்றொழிலாளர் இணைய கூட்டம் இணைய தலைவர் ஏன்.வீ.சுப்பிரமணியம் தலைமையில்  இன்றையதினம்(03) காலை 11:30 மணியளவில் பூநகரி கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச மண்டபத்தில் இடம் பெற்றது.இதில் முதல் நிகழ்வாக மங்கள விளக்கு ஏற்றப்பட்டது.மங்கள சுடர்களை தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்க அமைப்பாளர் கேர்மன் குமார, இணைய தலைவர் ஏன்.வீ.சுப்பிரமணியம், யாழ் மாவட்ட தலைவர் இ.முரளிதரன், உட்பட பலரும் ஏற்றினர்.அதனை தொடர்ந்து வரவேற்பு நடனம் வரவேற்பு உரை என்பன இடம் பெற்று மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆரயப்பட்டது.இதில் வட மாகாண கடற்றொழிலாளர் இணையத்தை பிரதிநித்துவப்படுத்தும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி,  முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களின் பிரதிநிதிகள், தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்க அமைப்பாளர் கேர்மன் கமார, அதன் பிரதிநிதி செல்வி சுபாஜினி, மற்றும் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்க வடக்கு மாணாகத்தின் ஐந்து மாவட்டங்களின் இணைப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.இதில் மீனவர் நலன்சார்ந்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement