• Apr 15 2026

வடக்கு ரயில் சேவைகள் நாளை முதல் மீண்டும் ஆரம்பம்

Chithra / Apr 8th 2026, 3:48 pm
image

வடக்கு ரயில் மார்க்கத்தின் ரயில் போக்குவரத்து சேவைகள் நாளை (9) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன. 

மஹவ முதல் ஓமந்தை வரையிலான ரயில் பாதையில் ஐந்து ரயில் பாலங்களை மாற்றியமைக்கவும், யானைகள் கடந்து செல்வதற்காக அமைக்கப்பட்ட சுரங்கப்பாதையைப் புனரமைக்கும் பணிகளை மேற்கொள்ளவும் ஏதுவாக, வடக்குக்கான ரயில் சேவைகள் கடந்த ஜனவரி மாதம் 26ஆம் திகதி முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தன.

இந்த நிலையில், தமிழ் - சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு, ரயில் சேவைகள் நாளை முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இதற்கான ஆசன முன்பதிவுகள் கடந்த 4ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளமையால், பயணிகள் ஆர்வத்துடன்  தமக்கான பதிவுகளை மேற்கொள்வதை காணமுடிகின்றது.

வடக்கு ரயில் சேவைகள் நாளை முதல் மீண்டும் ஆரம்பம் வடக்கு ரயில் மார்க்கத்தின் ரயில் போக்குவரத்து சேவைகள் நாளை (9) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன. மஹவ முதல் ஓமந்தை வரையிலான ரயில் பாதையில் ஐந்து ரயில் பாலங்களை மாற்றியமைக்கவும், யானைகள் கடந்து செல்வதற்காக அமைக்கப்பட்ட சுரங்கப்பாதையைப் புனரமைக்கும் பணிகளை மேற்கொள்ளவும் ஏதுவாக, வடக்குக்கான ரயில் சேவைகள் கடந்த ஜனவரி மாதம் 26ஆம் திகதி முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தன.இந்த நிலையில், தமிழ் - சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு, ரயில் சேவைகள் நாளை முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன.இதற்கான ஆசன முன்பதிவுகள் கடந்த 4ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளமையால், பயணிகள் ஆர்வத்துடன்  தமக்கான பதிவுகளை மேற்கொள்வதை காணமுடிகின்றது.

Advertisement

Advertisement

Advertisement