• Dec 09 2024

ஆயுதவழி மட்டும் எமக்கு தலைமை கற்பிக்கவில்லை அரசியல் ரீதியான கற்பினைகளையும் தலைமை தந்துவிட்டே சென்றது - சி.வேந்தன்

Tharmini / Nov 6th 2024, 2:53 pm
image

ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூடணியின் பங்காளிக் கட்சியான ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தலைவர் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் சிவநாதன்-வேந்தன், 

யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் இன்று (06)  ஊடகவியலாளர் சந்திப்பொன்றெ ஏற்பாடு செய்து கருத்து வெளியிட்டார்.

ஆயுதப் போராட்ட காலத்தில் எமது இனத்திற்காக எவ்வாறு தூய்மையான போராட்டத்தை முன்னெடுத்தோமோ அவ்வாறான ஒரு தூய அரசியலை மேற்கொண்டுள்ளோம். புனர்வாழ்வு பெற்று வெளியேறிய எமது போராளிகள் பல இன்னல்களை சந்தித்து வருகின்றனர். 

மாவீர்ர் குடும்பங்கள் பல துன்பங்களை சந்துத்து வருகின்றனர் இந்த இன்னல்களைத் தகர்க்க எமக்கு ஒரு சந்தர்ப்பம் தாருங்கள்.

ஆயுத வழிமட்டும் எமக்கு தலைமை கற்பிக்கவில்லை அரசியல் ரீதியான கற்பினைகளையும் தலைமை தந்துவிட்டே சென்றது. யுத்தம் மெளனிக்கப்பட்டாலும் மக்ககளுக்கான தூய அரசியலை நாம் முன்னெடுத்தே வருகிறோம்.

கடந்த கால அரசியல் கட்சிகள், தலைமைகள் பிளவடைந்து தமது அரசியல் இருப்பை தக்கவைக்க முனைகின்றனர் நாம் அவ்வாறு அல்ல.

ஐந்து கட்சிகள் ஒற்றுமையா ஜனநாயகத் தமிழ்த் தேசிய கூட்டணியாக ஐக்கியப்பட்டு வந்துள்ளோம் மக்கள் விரும்புவதும் அதுவே. மாற்றம் என்பது மக்கள் விரும்பும் ஒற்றுமையே!

இதனையே தலைவர் அப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக அணைவரையும்்ஒன்றாக்கி ஒற்றுமையாக பயணிக்க வழியமைத்துக் கொடுத்தார். இன்று அதனை சிதைத்துவிட்டு தனித்து தனித்து போட்டியிட்டு 396பேர் ஆறு ஆசனத்திற்கு போட்டியிடும் அவல நிலையை உருவாக்கிவிட்டுள்ளது.

மக்கள் தெளிவாக சிந்தித்து ஒற்றுமைக்காக சங்குச் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

JVPயின் கடந்த கால அரசியல் பற்றியும் விமர்சித்துள்ளார்.


ஆயுதவழி மட்டும் எமக்கு தலைமை கற்பிக்கவில்லை அரசியல் ரீதியான கற்பினைகளையும் தலைமை தந்துவிட்டே சென்றது - சி.வேந்தன் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூடணியின் பங்காளிக் கட்சியான ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தலைவர் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் சிவநாதன்-வேந்தன், யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் இன்று (06)  ஊடகவியலாளர் சந்திப்பொன்றெ ஏற்பாடு செய்து கருத்து வெளியிட்டார்.ஆயுதப் போராட்ட காலத்தில் எமது இனத்திற்காக எவ்வாறு தூய்மையான போராட்டத்தை முன்னெடுத்தோமோ அவ்வாறான ஒரு தூய அரசியலை மேற்கொண்டுள்ளோம். புனர்வாழ்வு பெற்று வெளியேறிய எமது போராளிகள் பல இன்னல்களை சந்தித்து வருகின்றனர். மாவீர்ர் குடும்பங்கள் பல துன்பங்களை சந்துத்து வருகின்றனர் இந்த இன்னல்களைத் தகர்க்க எமக்கு ஒரு சந்தர்ப்பம் தாருங்கள்.ஆயுத வழிமட்டும் எமக்கு தலைமை கற்பிக்கவில்லை அரசியல் ரீதியான கற்பினைகளையும் தலைமை தந்துவிட்டே சென்றது. யுத்தம் மெளனிக்கப்பட்டாலும் மக்ககளுக்கான தூய அரசியலை நாம் முன்னெடுத்தே வருகிறோம்.கடந்த கால அரசியல் கட்சிகள், தலைமைகள் பிளவடைந்து தமது அரசியல் இருப்பை தக்கவைக்க முனைகின்றனர் நாம் அவ்வாறு அல்ல.ஐந்து கட்சிகள் ஒற்றுமையா ஜனநாயகத் தமிழ்த் தேசிய கூட்டணியாக ஐக்கியப்பட்டு வந்துள்ளோம் மக்கள் விரும்புவதும் அதுவே. மாற்றம் என்பது மக்கள் விரும்பும் ஒற்றுமையேஇதனையே தலைவர் அப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக அணைவரையும்்ஒன்றாக்கி ஒற்றுமையாக பயணிக்க வழியமைத்துக் கொடுத்தார். இன்று அதனை சிதைத்துவிட்டு தனித்து தனித்து போட்டியிட்டு 396பேர் ஆறு ஆசனத்திற்கு போட்டியிடும் அவல நிலையை உருவாக்கிவிட்டுள்ளது.மக்கள் தெளிவாக சிந்தித்து ஒற்றுமைக்காக சங்குச் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.JVPயின் கடந்த கால அரசியல் பற்றியும் விமர்சித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement