• Nov 26 2024

வரி செலுத்துவோர் எண்ணிக்கை மூன்று இலட்சத்தால் அதிகரிப்பு!

Tax
Chithra / Aug 30th 2024, 8:35 am
image

 

இவ்வருடம் ஜனவரி மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில் வரி செலுத்துவோரின் எண்ணிக்கை மூன்று இலட்சத்து 6,264 ஆக அதிகரித்துள்ளதாக உள்நாட்டு இறைவரித்திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு (2023) டிசம்பர் 31 வரை, மொத்த வரி செலுத்துவோர் எண்ணிக்கை 997,858 ஆக இருந்தது. 2024 ஆண்டு ஜூலை 31 அன்று இந்த எண்ணிக்கை 1,314,122 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டு (2023) டிசம்பர் 31 வரை வரி செலுத்துவோர் எண்ணிக்கை 879,778 ஆகவும், மற்ற வரி செலுத்துவோர் எண்ணிக்கை 118,080 ஆகவும் பதிவாகியுள்ளது.

இந்த ஆண்டு (2024) ஜூலை 31 வரை வரி செலுத்துவோர் எண்ணிக்கை 1,182,210 ஆகவும், மற்ற வரி செலுத்துவோர் எண்ணிக்கை 131,910 ஆகவும் அதிகரித்துள்ளது.

இதற்கிடையில், ஏற்கனவே TIN எண்ணைப் பெற்ற மொத்த நபர்களின் எண்ணிக்கை 4,577,303 ஆகவும் பதிவாகியுள்ளது.

வரி செலுத்துவோர் எண்ணிக்கை மூன்று இலட்சத்தால் அதிகரிப்பு  இவ்வருடம் ஜனவரி மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில் வரி செலுத்துவோரின் எண்ணிக்கை மூன்று இலட்சத்து 6,264 ஆக அதிகரித்துள்ளதாக உள்நாட்டு இறைவரித்திணைக்களம் தெரிவித்துள்ளது.கடந்த ஆண்டு (2023) டிசம்பர் 31 வரை, மொத்த வரி செலுத்துவோர் எண்ணிக்கை 997,858 ஆக இருந்தது. 2024 ஆண்டு ஜூலை 31 அன்று இந்த எண்ணிக்கை 1,314,122 ஆக அதிகரித்துள்ளது.கடந்த ஆண்டு (2023) டிசம்பர் 31 வரை வரி செலுத்துவோர் எண்ணிக்கை 879,778 ஆகவும், மற்ற வரி செலுத்துவோர் எண்ணிக்கை 118,080 ஆகவும் பதிவாகியுள்ளது.இந்த ஆண்டு (2024) ஜூலை 31 வரை வரி செலுத்துவோர் எண்ணிக்கை 1,182,210 ஆகவும், மற்ற வரி செலுத்துவோர் எண்ணிக்கை 131,910 ஆகவும் அதிகரித்துள்ளது.இதற்கிடையில், ஏற்கனவே TIN எண்ணைப் பெற்ற மொத்த நபர்களின் எண்ணிக்கை 4,577,303 ஆகவும் பதிவாகியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement