• Apr 03 2025

பொலிஸ் அதிகாரியின் கடமைக்கு இடையூறு; அறுவர் அதிரடிக் கைது!

Chithra / Apr 2nd 2025, 2:59 pm
image


திருகோணமலையில் சீருடையில் இருந்த பொலிஸ் அதிகாரி ஒருவரின்  கடமைகளுக்கு இடையூறு விளைவித்த சம்பவம் தொடர்பாக ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருகோணமலை நிலாவெளியில் போக்குவரத்து சம்பவம் தொடர்பாக ஒரு குழு பொலிஸ் அதிகாரியின் கடமைகளுக்கு இடையூறு விளைவிப்பதைக் காட்டும் காணொளி சமூக ஊடகங்களில்  பரப்பப்பட்டது.

சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய சந்தேக நபர் மார்ச் 31 அன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் கைது செய்யப்பட்டார்.

நீதிமன்ற உத்தரவுக்கு அமைவாக அவர் ஏப்ரல் 3, வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்ற மற்ற சந்தேக நபர்கள் நேற்று கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் 35 முதல் 45 வயதுக்குட்பட்டவர்கள் என்றும், அவர்கள் நிலாவெளியைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இரண்டு சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களைக் கைது செய்ய நிலாவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அதே நேரத்தில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


பொலிஸ் அதிகாரியின் கடமைக்கு இடையூறு; அறுவர் அதிரடிக் கைது திருகோணமலையில் சீருடையில் இருந்த பொலிஸ் அதிகாரி ஒருவரின்  கடமைகளுக்கு இடையூறு விளைவித்த சம்பவம் தொடர்பாக ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.திருகோணமலை நிலாவெளியில் போக்குவரத்து சம்பவம் தொடர்பாக ஒரு குழு பொலிஸ் அதிகாரியின் கடமைகளுக்கு இடையூறு விளைவிப்பதைக் காட்டும் காணொளி சமூக ஊடகங்களில்  பரப்பப்பட்டது.சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய சந்தேக நபர் மார்ச் 31 அன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் கைது செய்யப்பட்டார்.நீதிமன்ற உத்தரவுக்கு அமைவாக அவர் ஏப்ரல் 3, வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்ற மற்ற சந்தேக நபர்கள் நேற்று கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.சந்தேக நபர்கள் 35 முதல் 45 வயதுக்குட்பட்டவர்கள் என்றும், அவர்கள் நிலாவெளியைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இரண்டு சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களைக் கைது செய்ய நிலாவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.அதே நேரத்தில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement