• Nov 14 2024

ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலான உத்தியோகபூர்வ அறிவிப்பு - தேர்தல் ஆணைக்குழுவால் விசேட அறிக்கை

Chithra / Jul 25th 2024, 2:26 pm
image

  

ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலான உத்தியோகபூர்வ அறிவிப்பு நாளையதினம் வெளியிடப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன்படி 1981 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க ஜனாதிபதி தேர்தல்கள் சட்டத்தின் சட்ட ஏற்பாடுகளுக்கமைய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான பிரகடனம் நாளை வெளியிடப்படும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதற்கான உத்தியோகபூர்வ அறிக்கையை ஆணைக்குழு சற்றுமுன்னர் வெளியிட்டுள்ளது.

குறித்த அறிக்கையில், 

'1981 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க சனாதிபதித் தேர்தல்கள் சட்டத்தின் சட்ட ஏற்பாடுகளுக்கமைய ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான பிரகடனத்தை வெளியிடும் திகதியும், பெயர்குறித்த நியமனங்களை ஏற்கும் திகதியும் பற்றி அறிவிக்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை 2024 ஜூலை மாதம் 26 ஆம் திகதி வெளியிடுவதற்கு இன்றைய தினம் கூடிய தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது என்பதை இத்தால் அறிவிக்கின்றேன்.

அதேபோல், ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் திகதியும், ஏனைய நியதிச்சட்ட ஏற்பாடுகளும் பற்றி தனிப்பட்ட பலரும் பல திறத்தவர்களும் முன்வைக்கும் கருத்து வெளிப்பாடுகள் சம்பந்தமாக தேர்தல் ஆணைக்குழு எவ்வித பொறுப்பையும் ஏற்காது என்பது இத்தால் மேலும் அறிவிக்கப்படுகின்றது” என தெரிவிக்கப்படுகிறது.


ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலான உத்தியோகபூர்வ அறிவிப்பு - தேர்தல் ஆணைக்குழுவால் விசேட அறிக்கை   ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலான உத்தியோகபூர்வ அறிவிப்பு நாளையதினம் வெளியிடப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.இதன்படி 1981 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க ஜனாதிபதி தேர்தல்கள் சட்டத்தின் சட்ட ஏற்பாடுகளுக்கமைய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான பிரகடனம் நாளை வெளியிடப்படும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.இதற்கான உத்தியோகபூர்வ அறிக்கையை ஆணைக்குழு சற்றுமுன்னர் வெளியிட்டுள்ளது.குறித்த அறிக்கையில், '1981 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க சனாதிபதித் தேர்தல்கள் சட்டத்தின் சட்ட ஏற்பாடுகளுக்கமைய ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான பிரகடனத்தை வெளியிடும் திகதியும், பெயர்குறித்த நியமனங்களை ஏற்கும் திகதியும் பற்றி அறிவிக்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை 2024 ஜூலை மாதம் 26 ஆம் திகதி வெளியிடுவதற்கு இன்றைய தினம் கூடிய தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது என்பதை இத்தால் அறிவிக்கின்றேன்.அதேபோல், ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் திகதியும், ஏனைய நியதிச்சட்ட ஏற்பாடுகளும் பற்றி தனிப்பட்ட பலரும் பல திறத்தவர்களும் முன்வைக்கும் கருத்து வெளிப்பாடுகள் சம்பந்தமாக தேர்தல் ஆணைக்குழு எவ்வித பொறுப்பையும் ஏற்காது என்பது இத்தால் மேலும் அறிவிக்கப்படுகின்றது” என தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement