மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர் பதற்றங்கள் மற்றும் விநியோகத் தடைகள் காரணமாக, உலகளாவிய எரிசக்தி சந்தையில் மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் விலை இன்று (29) அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
உலகளாவிய எரிசக்தி சந்தை நிலவரப்படி, WTI ரக மசகு எண்ணெய் (West Texas Intermediate) பீப்பாய் ஒன்றின் விலை 100.3 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.
அதேவேளை, சர்வதேச ரீதியில் அதிகம் பயன்படுத்தப்படும் பிரெண்ட் (Brent) ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 111.7 அமெரிக்க டொலராக நிலவுகிறது.
இதேவேளை, இயற்கை எரிவாயுவின் விலை 2.559 அமெரிக்க டொலராக அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
ஈரான் போர் சூழல் மற்றும் ஹோர்முஸ் நீரிணை ஊடான எரிசக்தி விநியோகத்தில் ஏற்பட்டுள்ள இடையூறுகளே இந்த விலை அதிகரிப்புக்கு முக்கிய காரணங்களாகப் பார்க்கப்படுகின்றன.
தொடர்ச்சியாக நிலவும் இந்த உறுதியற்ற தன்மை காரணமாக, வரும் வாரங்களில் எரிசக்தி விலைகள் மேலும் உயரக்கூடும் எனப் பொருளாதார ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை ஈரான் மீதான போர் உலகளாவிய சந்தைகளில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதால், இந்த ஆண்டு எரிசக்தி விலைகள் 24 சதவீதம் வரை உயரக்கூடும் என உலக வங்கி எச்சரித்துள்ளது.
எரிசக்தி மற்றும் உரங்களின் விலை உயர்வு காரணமாக, 2026 ஆம் ஆண்டில் ஒட்டுமொத்த பொருட்களின் விலைகள் 16 சதவீதம் வரை அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
உலகளாவிய கடல்வழி மசகு எண்ணெய் வர்த்தகத்தில் 35 சதவீதத்தைக் கையாளும் ஹோர்முஸ் நீரிணையில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து தடைகள், வரலாற்றிலேயே மிகப்பெரிய எண்ணெய் விநியோக அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போதைய போர்ச் சூழல் மற்றும் போக்குவரத்துத் தடைகள் மே மாதத்திற்குள் முடிவுக்கு வரும் என்றும், ஹோர்முஸ் நீரிணை வழியிலான போக்குவரத்து 2026 இறுதிக்குள் பழைய நிலைக்குத் திரும்பும் என்றும் உலக வங்கி கணித்துள்ளது.
எண்ணெய் மற்றும் எரிவாயு விலை உயர்வு - இந்த ஆண்டு எரிசக்தி விலைகள் 24 சதவீதம் வரை உயரும் - உலக வங்கி எச்சரிக்கை மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர் பதற்றங்கள் மற்றும் விநியோகத் தடைகள் காரணமாக, உலகளாவிய எரிசக்தி சந்தையில் மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் விலை இன்று (29) அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.உலகளாவிய எரிசக்தி சந்தை நிலவரப்படி, WTI ரக மசகு எண்ணெய் (West Texas Intermediate) பீப்பாய் ஒன்றின் விலை 100.3 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.அதேவேளை, சர்வதேச ரீதியில் அதிகம் பயன்படுத்தப்படும் பிரெண்ட் (Brent) ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 111.7 அமெரிக்க டொலராக நிலவுகிறது.இதேவேளை, இயற்கை எரிவாயுவின் விலை 2.559 அமெரிக்க டொலராக அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.ஈரான் போர் சூழல் மற்றும் ஹோர்முஸ் நீரிணை ஊடான எரிசக்தி விநியோகத்தில் ஏற்பட்டுள்ள இடையூறுகளே இந்த விலை அதிகரிப்புக்கு முக்கிய காரணங்களாகப் பார்க்கப்படுகின்றன.தொடர்ச்சியாக நிலவும் இந்த உறுதியற்ற தன்மை காரணமாக, வரும் வாரங்களில் எரிசக்தி விலைகள் மேலும் உயரக்கூடும் எனப் பொருளாதார ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதேவேளை ஈரான் மீதான போர் உலகளாவிய சந்தைகளில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதால், இந்த ஆண்டு எரிசக்தி விலைகள் 24 சதவீதம் வரை உயரக்கூடும் என உலக வங்கி எச்சரித்துள்ளது.எரிசக்தி மற்றும் உரங்களின் விலை உயர்வு காரணமாக, 2026 ஆம் ஆண்டில் ஒட்டுமொத்த பொருட்களின் விலைகள் 16 சதவீதம் வரை அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.உலகளாவிய கடல்வழி மசகு எண்ணெய் வர்த்தகத்தில் 35 சதவீதத்தைக் கையாளும் ஹோர்முஸ் நீரிணையில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து தடைகள், வரலாற்றிலேயே மிகப்பெரிய எண்ணெய் விநியோக அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தற்போதைய போர்ச் சூழல் மற்றும் போக்குவரத்துத் தடைகள் மே மாதத்திற்குள் முடிவுக்கு வரும் என்றும், ஹோர்முஸ் நீரிணை வழியிலான போக்குவரத்து 2026 இறுதிக்குள் பழைய நிலைக்குத் திரும்பும் என்றும் உலக வங்கி கணித்துள்ளது.